மரபுவழி வாழ்க்கை
தமிழ் மரபு, இயற்கை மருத்துவம், இயற்கையான நல வாழ்வு.சிறுவர் நன்னெறிக் கதைகள்
ஸ்வஸ்திக் சின்னம்
பிரண்டை(ஆஸ்டியோபோரோசிஸ் தவிர்க்க)
ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்பு தாது மற்றும் அடர்த்தி குறைந்து எலும்பு புரை அல்லது எலும்பு வலுவிழப்பு நோயாகும். இது எலும்பு வலிமை குறைவதற்கு வழி வகுக்கும். இது எலும்பு முறிவு ஏற்பட காரணமாக அமைகிறது. இந்த நோய் அறிகுறிகள் அற்றது.
பெண்களுக்கு மெனோபாஸ் காலத்துக்கு ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பே இது ஏற்பட ஆரம்பித்துவிடும். வயதான ஆண்களுக்கும் ஏற்படும்.
பிரண்டை:
ஆஸ்டியோபோரோஸிஸ் எனும் எலும்பு அடர்த்தி குறைவு நோயை பிரண்டை தடுக்கும். எலும்புகள் வலுவாக்கும்.உடலை சுறுசுறுப்பாக ஆக்கும்.
மூட்டுகள் தேய்வதையும் தடுக்கும்.
எலும்பு முறிவுக்கு பிரண்டையை உணவில் சேர்த்து வந்தால் விரைவில் எலும்பு கூடும் என்று கூறுகிறது சித்த மருத்துவம்.
வயிற்றுப்புண் நீக்கும்.மூலம் ரத்தமூலம் போன்ற நோய்களை குணமாக்கும்.உடல்
இளைத்திருக்கும் குழந்தைகளுக்கு இளம் பிரண்டையை வாரத்தில் 2,3 நாட்கள் ,காலையில் நெய்யில் வதக்கி அரைத்து சிறு நெல்லிக்காயளவு பாலில் கலந்து கொடுத்தால் குழந்தைகள் உடல் தேறி பலம் பெறுவார்கள்.
அடிபட்ட வீக்கம் வலி முதலியவற்றுக்கு பிரண்டையை வதக்கி
அரைத்து பூச நிவாரணம் கிடைக்கும்.
புற்று நோய்க்கு கொடுக்கும் மருந்துகளில் பிரண்டையும் சேர்ந்திருக்கும்.
பிரண்டை இதய வால்வுகளில் கொழுப்பு அடைப்பை நீக்கி இரத்த ஒட்டத்தை சீராக்கி இதயத்தை பலப்படுத்தும்.
இது உஷ்ண குணமுள்ளது. அதனால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே உட்கொள்ளலாம்.எலும்புப் பிரச்சினை இருப்பவர்கள் தொடர்ந்து சில வாரங்களுக்கு பயன்படுத்தலாம்.
கள்ளிச்செடியின்மீது படர்ந்திருக்கும் பிரண்டையை உபயோகப்படுத்தக்கூடாது.
பிரண்டையில் ஒலைப்பிரண்டை, உருட்டுப்பிரண்டை, முப்பிரண்டை,சதுரப்பிரண்டை களிப்பிரண்டை,தீம்பிரண்டை,புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளன.
பிரண்டை தோலை சுற்றிலும் நீக்கி உள்ளிருக்கும் சதையை எண்ணெயில் வதக்கியபின்பே உபயோகிக்க வேண்டும்.
காகமும் நரியும் (புகழ்ச்சிக்கு மயங்காதே)
.jpg)
சகல சௌபாக்கியங்களை அள்ளித்தரும் நவராத்திரி
நவராத்திரி என்றால் என்ன?எளியவழியில் நம் பாரம்பரியத்தை மறக்காமல்கொண்டாடுவது எப்படி?
நம் இந்தியாவில்... இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் இந்தியர்களால் மிகச்சிறப்பாகக் கொண்டாடும் பண்டிகை நவராத்திரி.நவராத்திரி என்பது(செப்டம்பர் அல்லது அக்டோபர்) புரட்டாசி அமாவாசையின் பின் வரும் ஒன்பது நாட்கள் அம்பிகையின் வழிபாடு ஆகும்.இது துர்க்கை,லட்சுமி,மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரின் வடிவங்களை வழிபடுவதாகும்.
இந்த நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியை பூஜித்து கொண்டாடப்படுகிறது. பத்தாம் நாள் விஜயதசமி அல்லது ஆயுத பூஜை என்று கொண்டாடப்பட்டு நிறைவு செய்யப்படுகிறது. வீடுகளை சுத்தம் செய்து மாவிலைத் தோரணங்கள்,பண்டிகைக்கான சிறப்பு உணவுகள்,கோலங்கள், பூஜைகள் என நவராத்திரி கொண்டாட்டம் எப்போதும் சிறப்பாகவே இருக்கும்.
வண்ணக்காகிதங்கள், கலைப்பொருட்கள், உணவுப்பொருட்கள்,உடைகள், பரிசுப்பொருட்கள் என விற்பனை அதிகமாக இருக்கும். வீடுகள், கோவில்கள், அலுவலகங்கள், வேலை செய்யும் இடங்கள் என ஆயுதபூஜை நம் நாட்டில் மிகச்சிறப்பாகக் கொண்ட்டப்பட்டு வருகிறது.
இதனால் சந்தைப்படுத்துதல் அதிகமாகி நாட்டில் பொருளாதாரம் நிலை நிறுத்தப்படுகிறது.
விஜயதசமியன்று குழந்தைகளை முதன்முதலில் பள்ளியில் சேர்க்க அட்சராப்பியாசம் என்ற சடங்கு பின்பற்றப்படுகிறது.நெல்லை தாம்பாளத்தில் பரப்பிஅதில் எழுத்துக்களை விரலால் எழுதி பிள்ளைகள் நன்கு படித்து மேன்மைக்கு வர நமஸ்தம் செய்வார்கள். கல்விக்கும் சகல கலைகளுக்கும் தெய்வமாக விளங்குபவர் சரஸ்வதிதேவி. அதனால் மக்கள் தங்கள் எந்த புதிய முயற்சிக்கும் அடி எடுத்து வைக்கும் விதமாக விஜயதசமி நாளன்று பூஜை செய்து தொடங்குவர்.
கொலுப் படி அமைத்தல்: கொலு அமைத்தல் என்பது நம்முடைய பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாகும்.ஒன்பது படிகளை அமைத்து அதில் மேலிருந்து முதல் படியில் தெய்வங்கள், இரண்டாம்படியில் அவதாரங்கள், மூன்றாம் படியில் ஞானிகள், நான்காம்படியில் மனிதர்கள், ஐந்தாம்படியில் விலங்குகள், ஆறாம்படியில் பறவைகள், ஏழாம்படியில் தாவரங்கள், எட்டாம் படியில்பூச்சிகள், ஒன்பதாம்படியில் காய்கறிகள் என்று வரிசைப்படுத்தி வைப்பார்கள்.கொலு பொம்மை வாங்க
குழந்தைகளுக்கு நம் கலாசாரத்தையும் ஆன்மீகத்தையும் விளக்க அரிய வாய்ப்பு. இந்த ஒன்பது நாட்களில் தினமும் இதிகாசக் கதைகளையும் , சுலோகங்களையும் குழந்தைகளுக்கு சொல்லித்தருவதன்மூலம் குழந்தைகள் பக்தியுடன் பண்புள்ளவர்களாகவும் வளர்வார்கள். இதிகாசக் கதைகளின் காட்சிகள், மரப்பொம்மைகள், தமிழ் பாரம்பரியக் கதைகள், கிராம வாழ்க்கையை பிரதிபலிக்கும் அமைப்புகள் என பலவகையான வடிவங்களில் கொலு அமைக்கலாம். இன்று நம்மிடம் எளிமையான பொருட்களும் குறைந்த இடமும் இருந்தாலும், ஒரு சிறிய தட்டில் சில பொம்மைகள் வைத்து கொலு வைக்கலாம்.நாமே சொந்தமாக செய்த கைவினைப்பொருட்களையும் வைக்கலாம். நவராத்திரி கலைகளுக்கும் கலைஞர்களுக்குமான வாய்ப்பு.
ஒன்பது நாட்களுக்கு தினமும் நம்மால் முடிந்த பிரசாதங்கள் சுண்டல், பொங்கல் போன்றவை காலையும் மாலையும் எளிமையாகச் செய்து அக்கம்பக்கத்தினரை வரவழைத்துக் கொடுக்கலாம். மனிதர்களுடன் அன்பாகப்பழகும் வாய்ப்பை நவராத்திரி கொலு பண்டிகை ஏற்படுத்துகிறது.வெற்றிலை பாக்கு ,மஞ்சள் குங்குமம், ரவிக்கைத் துண்டு அல்லது ஏதேனும் ஒரு பரிசுப்பொருள் என தனது அக்கம்பக்கத்து பெண்களையும் குழந்தைகளையும் அழைத்துபரிசுப்பொருட்கள் வழங்கி உறவை மேம்படுத்தலாம். இங்கே க்ளிக் செய்யவும்(affiliate)
சிறு குழந்தைகளின் கொலு கொண்டாட்டம்:
சிறு குழந்தைகளை கொலுவில் ஈடுபடுத்தி அவர்களை மகிழ்ச்சிப்படுத்தலாம். அவர்களின் திறமையும் எண்ணங்களின் வெளிப்பாடும் நமக்குத் தெரியவரும்.கொலுப்படிகளை அமைக்க உதவுவது தானியங்களை முளைக்க வைத்து சிறு கிண்ணங்களில் கொலுப்படிகளில் வைப்பது, பூங்காக்கள் அமைப்பது,களிமண் , அல்லது செயற்கைக் களிமண் வைத்து பூக்கள் காய்கறிகள் பழங்கள், பொம்மைகள் செய்வது, முதலியவற்றை குழந்தைகளின் மூலமாகச் செய்யும்போது அவர்களின் கைத்திறனும் அறிவும், கற்பனைத்திறனும் மேம்படும்.
நம்மிடம் சிறிய இடம் இருந்தாலும் ,எளிமையான பொருட்களை வைத்து அலங்கரித்து தட்டில் வைத்துக்கூட கொலுப் பண்டிகை கொண்டாடலாம்.
நவராத்திரி விரதம்:
விரதம் இருக்கும் நாட்களில் மனதையும் உடலையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். நவராத்திரியில் சிலர் ஒருவேளை விரதமிருப்பார்கள் சிலர் முழு விரதம் இருப்பார்கள். நீராகாரம், பழங்கள் காய்கறிகள் என சாத்வீகமான உணவையே விரத நாட்களில் எடுத்துக்கொள்ளப்படும்.வட இந்தியாவில் துர்கா பூஜை, மேற்கு வங்கத்தில் காளி பூஜை,கர்நாடகாவில் தசரா ,தமிழ்நாட்டில் ஆயுத பூஜை என நவராத்திரி நாடெங்கும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது .
முடிவுரை:
நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையும் மூதாதையர்களின் அனுபவமும் அறிவும் நிறைந்த வழிகாட்டியாகும். நவராத்திரி பண்டிகையின் மூலம் பக்தியும், பாரம்பரியமும், சக மனிதர்களிடையே ஒற்றுமையும் அன்பும் வளரும். நலங்களையும் சகல சொபாக்கியத்தையும் அள்ளித்தரும் நவராத்திரியை எல்லோரும் கொண்டாடுவோமாக!click here(affiliate)
இந்த நவீன காலத்திலும் மரபை மறக்காமல் வாழ்வதுதான் உண்மையான பண்பாடு.
புறாவும் எறும்பும்(தர்மம் தலை காக்கும்)
புறாவும் எறும்பும்
சிறுவர்களுக்கு நல்ல பண்புக் கதைகள் சொல்லி அவர்களை நற்குணம் மிக்கவராக உருவாக்க மரபுகளாகத் தொடரும் கதைகள்தான் சிறுவர் நீதி நெறிக் கதைகள்.அதை இந்தப் புறாவும் எறும்பும் என்ற சிறுவர் பண்புக் கதையின் மூலம் குழந்கைதள் அறிவார்கள்.ஒருவருக்கு தக்க சமயத்தில் நாம் செய்யும் உதவி நாம் ஆபத்திலிருக்கும்போது நமக்கு உதவும் என்பதை இக்கதை மூலம் அறியலாம். குழந்தைகளுக்கு இந்த மரபுக்கதைகளை அறியத்தருவதன் மூலம் அவர்கள் மற்றவர்களுக்குச் செய்யும் உதவியின் அருமையை அறிவார்கள். சிறுவயதுக் குழந்தைகளுக்கு பண்புக் கதைகளின் மூலம் நல்ல எண்ணங்களையும், சிந்தனைகளையும் ஊட்டலாம்.
Privacy Policy
Privacy Policy for marabuvazhkai.blog
At marabuvazhkai.blog, we value your privacy. This Privacy Policy explains what information we collect and how we use it.
- We do not collect any personal information without your consent.
- We may use cookies to improve user experience.
- Third-party vendors like Google may use cookies to serve ads.
- You can choose to disable cookies through your browser settings.
If you have any questions, contact us via [gomsenthil@gmail.com]
Updated: July 2025
விறகு வெட்டியும் தேவதையும்(நேர்மையின் பரிசு)
சிறுவர்களுக்கு நல்லகதைகள் சொல்லி அவர்களை நற்குணம் மிக்கவராக உருவாக்க மரபுகளாகத் தொடரும் கதைகள்தான் சிறுவர் நீதி நெறிக் கதைகள்: சிறுவர்களுக்கு எளிதில் புரியும் விதமாக அவர்கள் மகிழும்படியும் ,பண்புகளைக் கற்றுக்கொள்ளும்படியும் ஏராளமான விலங்குகள், தேவதைக் கதைகள் உள்ளன.அவற்றில்
ஒன்றுதான் விறகுவெட்டியும் தேவதையும். நேர்மையாக இருப்பதன் விளைவு என்ன என குழந்தைகள் எளிதில் கற்றுக்கொள்ள இந்தக் கதை உணர்த்தும்.
விறகு வெட்டியும் தேவதையும்
ஒரு கிராமத்தில் நேர்மையான ஒரு விறகு வெட்டி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான்.அவன் தன் தினசரி பிழைப்புக்கு பக்கத்து காட்டிற்கு சென்று விறகு வெட்டி விற்று வாழ்ந்தான்.எப்போதும்போல் ஒருநாள் காட்டுக்குச் சென்று விறகு வெட்டிக்கொண்டிருந்தான்.
வேப்பம்பூ பலன்கள்(NEEM FLOWER BENIFITS)
வேப்பம்பூவின் நன்மைகள் என்ன?
வேப்பம்பூ மனிதனுக்கு இயற்கையால் அளிக்கப்பட்ட ஒரு அற்புதமான நன்கொடை ஆகும்."அசாடிராக்டா இண்டிகா"என அழைக்கப்படும் வேப்ப மரம் இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்டது. வேப்பமரம் என்றாலே இலை,பட்டை, வேர்கள்,பூக்கள், கொட்டைகள், எண்ணெய் என எண்ணற்ற நன்மைகள் உடல் நலத்திற்காக உண்டு.செலவில்லாமல் மிக எளிமையாகக் கிடைக்கக்கூடியது.தமிழ் நாட்டில் சித்திரை வருடப்பிறப்பன்றும் , ஆந்திர மாநிலத்தில் யுகாதி அன்றும் வேப்பம்பூ ரசம் அல்லது வேப்பம்பூவுடன் வெல்லம், வாழைப்பழம் கலந்து பிரசாதமாக உண்ணத் தரப்படுகிறது.நமக்கு உடலில் ஏற்படும் வாத, பித்த,கபம் ஆகிய மூன்று தோஷங்களின் ஏற்றத்தாழ்வுகளை சமன் படுத்த வேப்பம்பூ பயன்படுகிறது.வயிற்றுப்புழுக்கள் வெளியேறவும்,எதிர்ப்புச் சக்தியை கூட்டவும் உதவி செய்கிறது
மார்ச் ,ஏப்ரல் மாதங்களில் பூக்கும் வேப்பம் பூக்களை வெயிலில் உலர்த்தி பதப்படுத்தி வைத்துக்கொண்டால் வருடம் முழுதும்பயன்படுத்தலாம்.வேப்பம்பூவின் பயன்கள் என்னென்ன எனப் பார்க்கலாம்.வேப்பம்பூவைப் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது?அறு சுவைகளில் கசப்புச்சுவை நாம் அதிகமாக எடுத்துக்கொள்வதில்லை. மற்ற கசப்புப் பொருள்களை விட வேப்பம்பூவில் மிதமான கசப்புச்சுவை இருப்பதால் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
வேப்பம்பூ சாதம்:
எண்ணெயில் கடுகு, கருவேப்பிலை,வெங்காயம்,மிளகாய் தாளித்து 1ஸ்பூன் வேப்பம்பூவையும் சேர்த்து வதக்கி சாதம் கிளறி சாப்பாட்டுக்குமுன் 2,3 களம் சாப்பிடலாம்.
வேப்பம்பூ ரசம்:
தினமும் வைக்கும் தக்காளி ரசம், புளிசேர்த்து வைக்கும் ரசத்தில் 1 ஸ்பூன் வேப்பம்பூக்களை சேர்க்கலாம்.
வேப்பம்பூ சாதப்பொடி:
பருப்பு சாதப்பொடி தயார் செய்யும் போது உலர் வேப்பம்பூக்களை சேர்த்து அரைத்து வேப்பம்பூ சாதப்பொடி தயார் செய்யலாம்.சாதப்பொடியுடன் சேர்த்து சாதத்தில் பிசைந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
வேப்பம்பூ பச்சடி:
வாணலியில் சிறிது எண்ணய்விட்டு கடுகு தாளித்து வேப்பம்பூவை தக்கி தயிரில் சேர்த்தால் தயிர்ப்பச்சடி.
வேப்பம்பூ வற்றல்:
வேப்பம்பூவை உப்பு சேர்த்த மோரில் ஊறவைத்து வெயிலில் உலர்த்தி வைத்துக்கொண்டால் வேப்பம்பூ வற்றல் ஆகும். இதை வற்றல் குழம்பாக செய்யலாம்.
வேப்பம்பூ கஷாயம்:
நீரில் வேப்பம்பூக்களைப்போட்டுக் கொதிக்கவைத்தால் கஷாயம் .
என பலவிதங்களில் உணவில் சேர்த்து பலனடையலாம்.
வேப்பம்பூ பதப்படுத்துதல்:
உலர் வேப்பம்பூக்கள்:
வேப்பம்பூவை சேகரித்து நன்கு நீரில் அலசி நீரை வடித்துவிட்டு ஒரு பருத்தித் துணியில் பரப்பி நிழலில் மொறுமொறுவென்று உலர்த்த வேண்டும். நன்கு உலர்ந்த பூக்களை கண்ணாடி கலனில் இறுக மூடி வைத்துக்கொண்டால் வருடம் முழுவதும் உபயோகிக்கலாம்.அவ்வப்போது அல்லது மாதம் ஒருமுறை வெயிலில் காயவைத்து பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வயிறு மந்தம், வயிறு உப்புசம், வயிறு வலி பிரச்சினைகள் இருப்பவர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேப்பம்பூ கஷாயம் சிறந்த பலனைத் தரும்.
ஒரு டம்ளர் நீரில் ஐந்து வேப்பம்பூக்களைப்போட்டு பாதியாகச் சுண்டவைத்து கஷாயம் தயாரிக்க வேண்டும்.
வேப்பம்பூ நான்கு அல்லது ஐந்தை சிறிதளவு வெல்லம் சேர்த்து மென்று தின்றால் பித்தம் நீங்கும்.உடல் எடை குறையும்.
வேப்பம்பூவில் புரதம்,கார்போஹைட்ரேட்டுகள்,கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் சி , நார்ச்சத்து ஆகிய சத்துகள் இருப்பதால் உடல்நலத்தை மேம்படுத்த உதவுகிறது.வேப்பம்பூவில் வெப்பகுணம் இருப்பதால் அதிக கலோரிகளை எரித்து எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
வேப்பம்பூ கொழுப்பு வளர்சிதை மாற்றத்திற்கு உண்டான ஹார்மோனை தடுக்க உதுவுவதால் தினமும் ஒரு ஒரு ஸ்பூன் புதிதாகப்பறித்த வேப்பம்பூக்களை நீரில் ஊறவைத்து காலையில் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும்.அழகான சருமம் பெறலாம்.
கசப்புத்தன்மையுடன் இருக்கும் வேம்பம்பூ வெப்பத்தன்மையும் கொண்டது. மலக்குடலில் இருக்கும் பூச்சிகள் வெளியேற வேப்பம்பூ சிறப்பாகச் செயலாற்றும். இனிப்பு அதிகம் சாப்பிடும் குழந்தைகள் அதிகமாக வயிற்றுப்பூச்சி தொல்லைக்கு ஆளாகும் .ஐந்து வேப்பம்பூக்களை தேனில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் பூச்சித்தொல்லை,வயிற்றுவலி நீங்கி நலம் பெறுவார்கள்.
வயிறு சுத்திகரிக்க பெரியவர்கள் மாதம் ஒருமுறை உலர் வேப்பம்பூக்களை பொடியாக்கி மேரில் கலந்து கொடுத்து வர வேண்டும்.
உணவில் வேப்பம்பூக்களை சேர்த்துக்கொள்வதன் மூலம் நீரிழிவு, ரத்த அழுத்தம்,சருமப்பிரச்சினைகள் போன்றவற்றை கட்டுக்குள் வைக்கும்.கல்லீரலில் கொழுப்பு சேராமல் தடுக்கும்.வேப்பம்பூ ரத்தத்தை சுத்திகரிப்பதால் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை நம் உடலிலிருந்து வெளியேற்றுகிறது.
வேப்பம்பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைலி, காைதுவலி நீங்கும்.
தலைமுடி அடர்த்தியாக வளர வேப்பம்பூவை கைப்பிடி எடுத்து உச்சந்தலையில் பரபரவென தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து சீயக்காய் தேய்த்துக் குளித்தால் பொடுகு நீங்கி தலைமுடி அடர்த்தியாக மாறும்.இளநரை மாறும்.வாரத்தில் ஒருமுறை சில வாரங்களுக்கு பின்பற்ற வேண்டும்.
குறிப்பு: உடல் உஷ்ணம் இருப்பவர்கள் வேப்பம்பூவை மிகக்குறைவாகப் பயன்படுத்தவும். கர்ப்பிணிகள் தவிர்க்கவும்.
எறும்புகளும் வெட்டுக்கிளியும்(உழைப்பின் அருமை)
எறும்புகளும் வெட்டுக்கிளியும்
(சிறுவர் நன்னெறிக் கதைகள்)
குழந்தைகளுக்கான இக்கதை வாழ்க்கையில் உழைப்பும், திட்டமிடுதலும், சேமிப்பும் அவசியம் என வலியுறுத்துகிறது. இளம் வயதிலேயே குழந்தைகள் இதுபோல் நன்னெறிக் கதைகளைக் கேட்டு வளருவதால் நல்ல ஒழுக்கமான பண்புகள் மனதில் பதிவதோடு பெரியவர்களானதும் இவ்வாறே இருக்கவேண்டும் என எண்ணுவர். அது அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி நல்ல மனிதர்களாக உருவாக்கும்.
முதலையும் குரங்கும்
முதலையும் குரங்கும்: சிறுவர் நன்னெறிக் கதைகள்
முதலையும் குரங்கின் வார்த்தையை நம்பி விட்டது. நீந்தும் திசையை மாற்றி மறுபடியும் அந்த நாவல் மரத்தை நோக்கிச் சென்றது. சட்டென்று குரங்கு தாவிச் சென்று மரத்தின் உச்சிக்கு சென்று பாதுகாப்பாக அமர்ந்து கொண்டு விட்டது.
குரங்கு பேசத் தொடங்கியது, "முட்டாள் முதலையே இதயத்தை உடலில் இருந்து எடுத்து காயப்போடமுடியாது என உனக்குத் தெரியாதா? உன்னை இனி நான் ஒருபொழுதும் நம்ப மாட்டேன், இந்த மரத்தில் இருந்து பழங்களையும் பறித்துத் தர மாட்டேன். இனி நீ என் நண்பனில்லை.என் முகத்தில் விழிக்காதே!" எனக்கூறி மரத்தில் ஏறிச் சென்று விட்டது.
நீதி: அறிவும் சமயோசித புத்தியும் நம்மை ஆபத்திலிருந்து காப்பாற்றும்.
சமச்சீர் உணவு(Balanced Diet)
7.உறுதியான எலும்புகள் மற்றும் பற்கள் இருப்பதுfor your bone strength
8.தெளிவான ஆரோக்கியமான மனநிலையைப் பெறுவது.ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பி வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நல்ல நினைவாற்றலைக் கொண்ட மூளையின் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியம்.இந்தஊட்டச்சத்துக்கள்உங்கள்மனஆரோக்கியத்தைமேம்படுத்தவும் மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற மனநல நிலைமைகளின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
9. எடை மேலாண்மை
ஒரு சரிவிகித உணவு கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின்கள், மைக்ரோநியூட்ரியண்டுகளின் சரியான விகிதத்தை வழங்குவதன்மூலம் சரியான எடையைப் பேணலாம்.weight loss combo
உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் ,புரோட்டீன், வைட்டமின்கள், தாது உப்புக்கள், நார்ச்சத்து,கொழுப்புகள் எந்தெந்த உணவுகளில் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
கார்போஹைட்ரேட்:
கார்போஹைட்ரேட்டுகள் உடலின் ஆற்றல் மூலமாகும். அவை குளுக்கோசாக உடைக்கப்படுகின்றன.இது நமது உடல் ஆற்றலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது, கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளில் ரொட்டி, பாஸ்தா, அரிசி, கோதுமை, ராகி, சிறு தானியங்கள், கிழங்குகள் ஆகியவை அடங்கும்
புரதங்கள்:
புரதங்கள் நமது உடலின் கட்டுமானத் தொகுதிகள் ஆகும் அவை உடலின் வளர்ச்சி மற்றும் பழுதுபார்ப்புக்கு அத்தியாவசியமாகிறது.புரதம் நிறைந்த உணவுகளில் இறைச்சி, மீன், முட்டை, பார் பொருட்கள், பருப்பு வகைகள், கொட்டைகள் ஆகியவை அடக்கம்.
எடுத்துக்காட்டாக முளைகட்டிய தானியங்கள் கருப்பு பீன்ஸ், காராமணி, பச்சைப்பட்டாணி,,ராஜ்மா பீன்ஸ், சோயா, கொண்டைக்கடலை, பாசிப்பயறு,நிலக்கடலை ஆகியவற்றில் செறிந்த புரோட்டீன் உள்ளது.
கொழுப்புகள்:
கொழுப்புகள் ஆற்றலின் செறிவூட்டப்பட்ட மூலமாகும்.அவை கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை (A,D,E, மற்றும் K) உறிஞ்சுவதற்கும் உதவுகின்றன.கொழுப்புகள் நிறைந்த உணவுகளில் எண்ணெய்கள், வெண்ணெய் மற்றும் கொட்டைகள் ஆகியவை அடங்கும்.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்:
நோய் எதிர்ப்புச் சக்தி, எலும்பு ஆரோக்கியம் மற்றும் ஆற்றல் உற்பத்தி போன்ற உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அவசியம். அவை பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் மறஅறும் இறைச்சி உள்ளிட்ட பல்வேறு உணவுகளில் காணப்படுகின்றன.
நார்ச்சத்து:
நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் நமது குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.நார்ச்சத்து நிறஐந்த உணவுகளில் முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவை அடங்கும்
நீர்:
நீர் வாழ்க்கைக்கு முக்கியமானது மற்றும் ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஈடுபட்டுள்ளது. இது உடல் வெப்பநிலையை பராமரிக்குவும், கழிவுகளை அகற்றவும், நமது மூட்டுகளை பசையுடன் வைக்கவும் உதவுகிறது.
ஒரு சீரான உணவில் இந்த உணவு வகைகளின் கலவை சரியான விகிதத்தில் அடங்கும். ஒவ்வொரு உணவு வகையிலும் பல்வேறு வகையான உணவுகளை உட்கொள்வதும் அவசியம். ஏனெனில் வெவ்வேறு உணவுகள் வெவ்வேறு வகையான அளவுகளில் முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
நினைவில் கொள்ளுங்கள், சமச்சீர் உணவுக்கான திறவுகோல் பல்வேறு வகைகளாகும். எந்த ஒரு தனிப்பட்ட உணவும் உங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்க முடியாது.. எனவே உங்கள் உணவில் பல்வேறு வகையான உணவுகளைச் சேர்ப்பது முக்கியம்.
சமச்சீர் உணவை உருவாக்குதல்:
1 கப் சாதம், முளைகட்டிய தானியங்கள், பழங்கள், காய்கறிகளைக் கொண்டதாக இருக்கவேண்டும் நமது உணவு. தனிப்பட்ட உணவு அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்க முடியாது. அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க அளவுகளில் கவனம் செலுத்துங்கள்.
2. உணவுகளை அளவிடும் கோப்பைகளை பயன்படுத்தவும்.
3. ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்கவும்.அவற்றில் அத்தியாவசிய வைட்டமின்கள் தாதுக்கள் உள்ளன.
4.ஒவ்வொரு வேளை உணவிலும் உங்கள் தட்டில் பாதியை பழங்கள் மற்றும் காய்கறிகளாலநிரப்ப முயற்சிக்கவும்.
5. முழு தானியங்களைத் தேர்ந்தெடுக்கவும். இவை நார்ச்சத்து மற்றும் பிற முக்கிய சத்துக்களின் நல்ல மூலமாகும்.
6. சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடல்நலப்பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்
ஆண்களுக்கு ஒரு நாளைக்குத் தேவையான உணவு சத்துகள் அட்டவணை:( இயல்பான உடல் இயக்கத்திற்கு)
| கலோரிகள் (Calories) | 2,500 Kcal (இயல்பான உடல் இயக்கத்திற்கும் அன்றாட செயல்பாடுகளுக்கும்) |
| புரதம் (Protein) | 56-75 கிராம் |
| கார்போஹைட்ரேட்டுகள் (Carbohydrates) | 300-350 கிராம் |
| நார்ச்சத்து (Fiber) | 30-38 கிராம் |
| கொழுப்பு (Fat) | 70-90 கிராம் |
| ஒமேகா-3 கொழுப்பு அமிலம் (Omega-3 Fatty Acids) | 1.6 கிராம் |
| கால்சியம் (Calcium) | 1,000-1,200 mg |
| இரும்புச்சத்து (Iron) | 8-11 mg |
| மிக்னீசியம் (Magnesium) | 400-420 mg |
| தயமின் (Vitamin B1) | 1.2 mg |
| ரிபோஃப்ளேவின் (Vitamin B2) | 1.3 mg |
| நியாசின் (Vitamin B3) | 16 mg |
| பிற வி.பி (Vitamin B6, B12) | 1.7 mg (B6), 2.4 mcg (B12) |
| விடமின் C | 90 mg |
| விடமின் D | 15 mcg (600 IU) |
| விடமின் E | 15 mg |
| ஃபோலேட் (Folate - Vitamin B9) | 400 mcg |
| சோடியம் (Salt - Sodium) | <2,300 mg |
| பொட்டாசியம் (Potassium) | 3,400 mg |
| துத்தநாகம் (Zinc) | 11 mg |
அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு 3000 -3500 கலோரிகள் தேவைப்படும்.
பெண்களுக்கு ஒரு நாளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் (சராசரி அளவு)
| ஊட்டச்சத்து | பரிந்துரைக்கப்பட்ட அளவு |
|---|---|
| கலோரிகள் (Calories) | 2,000 Kcal (இயல்பான நிலைக்கு) |
| புரதம் (Protein) | 46-65 கிராம் |
| கார்போஹைட்ரேட்டுகள் (Carbohydrates) | 250-300 கிராம் |
| நார்ச்சத்து (Fiber) | 25-30 கிராம் |
| கொழுப்பு (Fat) | 60-75 கிராம் |
| ஒமேகா-3 கொழுப்பு அமிலம் (Omega-3 Fatty Acids) | 1.1 கிராம் |
| கல்சியம் (Calcium) | 1,000-1,200 mg (கர்ப்பிணி/இரைப்பை நீக்கம் செய்யப்பட்ட பெண்களுக்கு 1,200 mg) |
| இரும்புச்சத்து (Iron) | 18 mg (50 வயதிற்கும் குறைவான பெண்கள்) / 8 mg (50+ வயது) |
| மிக்னீசியம் (Magnesium) | 310-320 mg |
| தயமின் (Vitamin B1) | 1.1 mg |
| ரிபோஃப்ளேவின் (Vitamin B2) | 1.1 mg |
| நியாசின் (Vitamin B3) | 14 mg |
| விடமின் B6 | 1.5 mg |
| விடமின் B12 | 2.4 mcg |
| விடமின் C | 75 mg |
| விடமின் D | 15 mcg (600 IU) |
| விடமின் E | 15 mg |
| ஃபோலேட் (Folate - Vitamin B9) | 400 mcg (கர்ப்பிணிப் பெண்களுக்கு 600 mcg) |
| சோடியம் (Salt - Sodium) | <2,300 mg |
| பொட்டாசியம் (Potassium) | 2,600 mg |
| துத்தநாகம் (Zinc) | 8 mg |
| வயது | கலோரிகள் (Calories) | புரதம் (Protein) (g) | கார்போஹைட்ரேட்டுகள் (Carbs) (g) | நார்ச்சத்து (Fiber) (g) | கொழுப்பு (Fat) (g) | கல்சியம் (Calcium) (mg) | இரும்புச்சத்து (Iron) (mg) |
|---|---|---|---|---|---|---|---|
| 1-3 வயது | 1,000-1,400 Kcal | 13-16 g | 130-160 g | 19 g | 30-40 g | 700 mg | 7 mg |
| 4-8 வயது | 1,400-1,600 Kcal | 19-22 g | 150-180 g | 25 g | 35-50 g | 1,000 mg | 10 mg |
| 9-13 வயது (ஆண்) | 1,800-2,200 Kcal | 34 g | 200-250 g | 31 g | 45-70 g | 1,300 mg | 8 mg |
| 9-13 வயது (பெண்) | 1,600-2,000 Kcal | 34 g | 180-230 g | 26 g | 45-70 g | 1,300 mg | 8 mg |
| 14-18 வயது (ஆண்) | 2,200-3,200 Kcal | 52 g | 250-300 g | 38 g | 70-90 g | 1,300 mg | 11 mg |
| 14-18 வயது (பெண்) | 2,000-2,400 Kcal | 46 g | 220-270 g | 26 g | 70-80 g |
குழந்தைகளுக்கான தோட்டக்கலை
குழந்தைகளுக்கான தோட்டக்கலை:
இயற்கையை நேசித்து அதனுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும், பசுமை உலகை அறிந்து ஈடுபடவும் தோட்டக்கலை ஒரு சிறந்த வழியாகும். இது அவர்களை மகிழ்ச்சியாகவும் ஆச்சர்யப்படத்தக்க மனநிலையை உருவாக்கவும் உதவுகிறது.அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதோடு மட்டுமல்லாமல் பொறுமை, படைப்பாற்றல் ஆகியவற்றையும் வளர்க்க தோட்டக்கலை உதவுகிறது.
தாவர வாழ்க்கையைப் பற்றி அவர்களுக்குக் கற்பிக்கவும், பொறுப்பை ஊக்குவிக்கவும் குழந்தைகள் தோட்டம் ஒரு அற்புதமான வழியாகும். உங்களிடம் பெரிய கொல்லைப்புறம் இருந்தாலும் சரி, சிறிய பால்கனி இருந்தாலும் சரி, குழந்தைகளுக்கான தோட்டத்தை உருவாக்குவது வேடிக்கையாக கற்றலில் ஈடுபடுவதாக இருக்கும்.
குழந்தைகளுக்கான தோட்டத்தின் நன்மைகள்:
- கல்வி வளர்ச்சி : குழந்தைகள் தாவரங்களின் வாழ்க்கைச் சுழற்சி, ஒளிச்சேர்க்கை மற்றும் சூழலியலின் முக்கியத்துவம் பற்றி அறிந்துகொள்கிறார்கள்.
- உடல் செயல்பாடு : தோட்டக்கலை குழந்தைகளை வெளியில் சென்று சுறுசுறுப்பாக இருக்க ஊக்குவிக்கிறது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது.
- பொறுப்பு : தாவரங்களைப் பராமரிப்பது குழந்தைகளுக்குப் பொறுப்புணர்வு மற்றும் வழக்கமான பராமரிப்பின் முக்கியத்துவத்தைக் கற்பிக்கிறது.
- படைப்பாற்றல் : குழந்தைகள் தங்கள் சொந்த தோட்ட இடத்தை வடிவமைப்பது, படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கிறது.
- புலன் மேம்பாடு : தோட்டக்கலை மண்ணின் வாசனையிலிருந்து பூக்களின் துடிப்பான வண்ணங்கள் வரை ஐந்து புலன்களையும் ஈடுபடுத்துகிறது.
எது குழந்தைகளுக்கு ஏற்ற தோட்டக்கலை?
தோட்ட இடத்தை உருவாக்குதல்
- இடம் : நிறைய சூரிய ஒளி விழும் மற்றும் குழந்தைகள் அணுகுவதற்கு பாதுகாப்பான இடத்தைத் தேர்வு செய்யவும்.
- அளவு : சிறியதாகத் தொடங்குங்கள், குறிப்பாக உங்கள் குழந்தையின் முதல் தோட்டக்கலை அனுபவமாக இருந்தால். ஒரு சில தொட்டிகள் அல்லது ஒரு சிறிய நிலம் சிறந்தது.
- கருவிகள் : சிறிய கைகளுக்கு தோட்டக்கலையை எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்ற, குழந்தை அளவிலான கருவிகளை வழங்குங்கள்.
குழந்தைகள் செய்யும் தோட்டக்கலை எளிமையாகவும் அவர்களை ஈர்ப்பதாகவும், ஆச்சர்யத்தைக் கொடுக்க வல்லதாகவும் இருக்க வேண்டும்.பின் வரும் சில யோசனைகள் அவர்கள் மகிழ்ச்சியாக தோட்டக்கலையில் ஈடுபட உதவும்:
1. சுலபமாக வளரக்கூடிய செடிகள்: சூரியகாந்தி, துளசி, சாமந்தி, காசித்தும்பை, பழ வகைகளில் தக்காளி கிழங்கு வகைகளில் காரட், முள்ளங்கி.seeds link
சூரியகாந்தி : இவற்றை வளர்ப்பது எளிது, அவற்றின் உயரமான, பிரகாசமான பூக்கள் குழந்தைகளை வசீகரிக்கும் என்பது உறுதி.
செர்ரி தக்காளி : விரைவாக முளைக்கும் மற்றும் கொடியிலிருந்து சாப்பிடுவது வேடிக்கையாக இருக்கும்.
சாமந்திப்பூக்கள் : கடினமான மற்றும் வண்ணமயமான, தோட்டத்திற்கு துடிப்பைச் சேர்க்க ஏற்றது.
முள்ளங்கி : வேகமாக வளரும் மற்றும் சில வாரங்களுக்குள் அறுவடை செய்யலாம், இதனால் குழந்தைகள் ஆர்வமாக இருப்பார்கள்
2.DIY தோட்டக்கருவிகள்: சிறிய கிண்ணங்கள், கூடைகள் ,பாலித்தீன் கவர்கள் கொண்டு குழந்தைகளே தோட்டத்திற்குத் தேவையான பொருட்களை தயார் செய்யலாம்.garden tools(you click here i will get a cimmission)
3.சமயலறையிலிருந்து :கடைகளில் வாங்கக்கூடிய தக்காளி, மிளகாய்,வெங்காயம், பூண்டு, புதினா ஆகியவற்றில் இருந்து எளிமையாக நாமே விதைகள் தயாரிக்கப் பழக்கலாம்.நாம் சாப்பிட்ட பழ வகைகளிலிருந்து கொட்டைகளை தொட்டியிலோ அல்லது தோட்ட மண்ணிலோ புதைத்து முளைக்க வைக்கப் பழக்கலாம்.உதாரணம் : மாம்பழம்.
4.சிறிய மிதக்கும் தோட்டம்(mini floating garden): டப்பாக்களில் நீர் நிறைத்து தாமரை, அல்லி, பிஸ்டினியா , ஹைட்ரில்லா போன்ற வீட்டில் வளர்க்கும் தாவரங்களை வளர்க்கலாம்
5.பட்டாம்பூச்சித்தோட்டம்:பட்டாம்பூச்சிகள் உலகளவில் குறைந்து வருவதால் நம் குழந்தைகளின் பங்களிப்பாக பட்டாம்பூச்சிகளை ஈர்க்கும் மலர்ச்செடிகளை வளர்க்கலாம்.சாமந்திப்பூ, காசித்தும்பை, ஜீன்னியா போன்றவை.
6.குழந்தைகளுக்கான விளையாட்டுத்தோட்டம்: மண், செங்கல் போன்றவற்றில் பசுமை விளையாட்டு பகுதிகள் அமைத்து குந்தைகள் அங்கே விளையாட்டாய் தோட்டம் செய்யலாம்.
7.பால்கனித்தோட்டம்:பால்கனியில் சிறிய தொட்டிகள் பழைய பிளாஸ்டிக் டப்பாக்கள், பாலித்தீன் கவர்கள், தண்ணீர் பாட்டில்கள் கொண்டு எளிமையாக செலவு குறைவாக தோட்டம் அமைத்து குந்தைகளைப்பழக்கலாம்.garden pots
மண்ணின் வகைகள், இயற்கை உரம் பற்றிய செயல்பாடுகள் ஆகியவற்றை குந்தைகளுக்குச் சொல்லித்தரலாம். காய்கறி கழிவுகளிலிருந்து நாமே உரம் தயாரிப்பது பற்றி கற்க வைக்கலாம்.
8. பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்:பூச்சித்தாக்குதல் அதற்கான தீர்வுகளை சொல்லித்தரலாம்
செயல்பாட்டில் குழந்தைகளை ஈடுபடுத்துதல்
- திட்டமிடல் : குழந்தைகள் என்ன, எங்கு நடவு செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட உதவுங்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த தாவரங்களுக்கு லேபிளிட தோட்டக் குறிப்பான்களைப் பயன்படுத்தவும்.
- நடவு : விதைகள் அல்லது நாற்றுகளை நடுவதில் அவர்களை ஈடுபடுத்துங்கள். அவர்களின் தாவரங்களுக்கு எவ்வாறு முறையாக தண்ணீர் ஊற்றுவது மற்றும் பராமரிப்பது என்பதைக் காட்டுங்கள்.
- அறுவடை : பழுத்த பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பறிக்க அவர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் கடின உழைப்பைக் கொண்டாடவும்.
வெற்றிகரமான குழந்தைகள் தோட்டத்திற்கான உதவிக்குறிப்புகள்
- பொறுமையாக இருங்கள் : தோட்டக்கலை என்பது ஒரு கற்றல் செயல்முறை, தவறுகள் அதன் ஒரு பகுதியாகும்.
- சிறிய வெற்றிகளைக் கொண்டாடுங்கள் : குழந்தைகள் கவனிக்கும் ஒவ்வொரு புதிய தளிர் அல்லது பூக்கும் பாராட்டுங்கள்.
- வேடிக்கையாக ஆக்குங்கள் : தோட்டக்கலை நடவடிக்கைகளில் விளையாட்டுகள் அல்லது கதைசொல்லலை இணைத்து அவர்களை ஈடுபாட்டுடன் வைத்திருங்கள்.
முடிவில், குழந்தைகள் தோட்டம் என்பது வெறும் தாவரங்களின் தொகுப்பை விட அதிகம் - இது வளர்ச்சி, கற்றல் மற்றும் வேடிக்கைக்கான இடம்.குழந்தைகளின் தன்னம்பிக்கை பெருகும் இடம். தோட்டக்கலையில் குழந்தைகளை ஈடுபடுத்துவதன் மூலம், நீங்கள் ஒரு பசுமையான விஷயத்தை மட்டுமல்ல, சுற்றுச்சூழல் மீதான அன்பையும் வளர்த்துக் கொள்ளலாம்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)



