வியாழன், 26 செப்டம்பர், 2013

உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழியே!


கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தே முன்தோன்றிய மூத்ததமிழ் என்னும் நம்முன்னோர்களின் கூற்று மிகச்சரியானதே!
ஆராய்ந்து கூற இயலாத அளவிற்கு தமிழ் மொழிதொன்மைவாய்ந்தது.
கல்வெட்டும்,புதைபொருட்களும் தமிழின் தொன்மையை ஒருவாறு உலகிற்கு எடுத்துக்காட்டிக்கொண்டிருக்கின்றன.
கி-மு. 10527 

முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன. 


உயிரும் உடலும் நாள் ஒன்றுக்கு விடுகின்ற மூச்சின் எண்ணிக்கை 21600 ஆகும். இதுவே, உயிரெழுத்தையும் மெய்யெழுத்தையும் பெருக்கினால் கிடைக்கின்ற எண்களாகும்.
12 x 18 x 100 = 21600
தமிழ் மருத்துவம் கூறும் உயிர் உடல் ஆகிய இரண்டின் இயக்கத்தை அறிந்தே தொல்காப்பியம் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையை அமைத்துள்ளது எனலாம்.



திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும்
பிறந்த தமிழோடும் பிறந்தோம் நாங்கள்.
- பாரதிதாசன்
உலகின் எட்டு செம்மொழிகளுள் தமிழும் ஒன்று.
உலக மொழிகளில் மிகத் தொன்மைக் காலம் முதலே இயல், இசை, கூத்து என்னும் முத்தமிழ்; வளர்ச்சியை எய்தியதால், தமிழ் நிலையான தன்மையை அடைந்தது. இலக்கியம் தழுவிய கலை வளர்ச்சி, தமிழுக்கு நிலைத்து நிற்கும் ஆற்றலைத் தந்திருப்பதால், தமிழை உலகத் தாய்மொழி என அறியலாம்.
அகநானூறு, புறநானூறு போன்ற கடைச் சங்க இலக்கியங்கள் கிடைத்ததன் பயனாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்குக் கிடைத்தது; தொல்காப்பியம் கிடைத்ததால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்குக் கிடைத்தது. சிந்துவெளி எழுத்துச் சான்றுகளின் பயனாக, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ் செம்மொழியே என முதன்முதலில் குரல் கொடுத்தவர் தமிழறிஞர் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற்கலைஞர் அவர்கள் ஆவார்கள். தமிழ்ச் செம்மொழி என்று முதன்முதலில் சொன்ன வெளி நாட்டவர் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் அவர்கள் ஆவார்கள். 


மெக்ஸிகன் ஆர்க்கியாலஜி என்னும் புத்தகத்தை எழுதிய ராமோன் மெனா என்னும் அறிஞர், நஹுஅல், சாபொடெகா மற்றும் மாயன் கலாச்சார மொழிகள் இந்தியாவில் இருந்து உருவானது என்று தம்முடைய மொழி ஆய்வின் முடிவில் குறிப்பிட்டுள்ளார்.உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ். சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகள் தமிழ் மொழியில் இருந்து தான் தோன்றின.” என்று குறிப்பிடுகிறது


. உலகிற்கு இந்தியா கொடுத்த இரண்டு மாபெரும் மொழிகள், தமிழும் சமஸ்கிருதமும். மேற்கத்திய மொழிகள் அனைத்தும் இந்த இரண்டு ஆதி மொழிகளில் இருந்து உருவானது தான் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். 


அழகான கவிதைகள் சிறந்த – உயர்ந்த இலக்கியத் தகுதிகளோடு பாடப்பட்டுள்ளன. தமிழில் எழுத்து வடிவம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. வடமொழிக் கல்வெட்டுக்களைவிட தமிழ் மொழிக் கல்வெட்டுக்கள் மிகப்பழமையானவை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழின் எழுத்து வடிவம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 
வரலாற்றறிஞர்களும் புதைபொருளாய்வாளர்களும் சிந்துவெளி நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டது என்றும், தொல்பழந்தமிழர் நாகரிகம் என்றும், அங்கு வாழ்ந்தோர் பேசிய மொழி செம்மொழித்தமிழின் மூல மொழி என்றும் நிலைநாட்டியுள்ளனர். 



இது போல இந்திய கலாச்சார சுவடுகளும் நடைமுறைகளும் இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகின் பல மூலைகளிலும் நிலைப்பெற்றுள்ளன. ஆரியர்களின் (இங்கே ஆரியர்கள் என்று குறிப்பிடப்படுவது இந்தியர்களைத் தான். மேலும் இது குறிப்பாக தென்னிந்தியர்களையே குறிக்கும்) அங்கீகாரம் பெறத் தொடங்கின. “The Story of India” என்ற தலைப்பில் வெளிவந்த இந்திய வரலாற்றைப் பற்றிய ஆய்வுப் படத்தில் மைக்கல் வூட்ஸ் (Michael Woods) என்னும் அறிஞர் தென்னிந்தியாவை “வாழும் நாகரீகம்” என்று இன்றளவும் இந்திய நாகரீகம் பேணிக் காக்கப்படுவதைக் குறிப்பிடுகிறார்.



பிரிட்டனில் வெளியாகும் தி மிரர் நாளிதழ் வெளியிட்ட செய்தி ” உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ். சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகள் தமிழ் மொழியில் இருந்து தான் தோன்றின.” என்று குறிப்பிரிட்டனில் வெளியாகும் தி மிரர் நாளிதல் வெளியிட்ட செய்தி ” உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ். சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகள் தமிழ் மொழியில் இருந்து தான் தோன்றின.” என்று குறிப்பிடுகிறது.

ஜப்பான்,எதியோப்பியா,இஸ்ரெல் சீனா போன்ற அநேக நாடுகளில் தமிழ்பெயர்கள் வழங்கி வந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.தமிழ் மொழி பத்தாயிரம் ஆண்டு பழமையானது என்பது தெளிவாகியுள்ளது.உலகில் எல்லா நாகரிகங்களுக்கும் தாய் நாகரிகம் தமிழ் நாகரிகம்தான்பது பல ஆராய்ச்சிகளின் மூலம்..நிரூபிக்கப்பட்டுக்கொண்டு வருகிறது.
இன்கா , மாயன் நாகரிகங்களும் தமிழ் நாகரிகங்களே என அறியப்படுகிறது.


புதன், 20 பிப்ரவரி, 2013

உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே


பல்லவர் காலத்து கப்பல் பொறித்த நாணயம்


திருநெல்வேலி தொல்பொருட்காட்சிசாலையில் வைக்கப்பட்டடுள்ள, பூம்புகார் கடற்கடையிலிருந்து 19 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த கப்பலின் அடிபப்டையில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம்உருவாக்கிய சோழர் கால கப்பலின் உடற்பகுதியின் மாதிரி

நியூசிலாந்து நாட்டில் உள்ளவெலிங்டன் அருங்காட்சியகத்தில் "தமிழ்மணி"
உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன்.உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்துவிளங்கியவன்தமிழன்.இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர்."தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்" என கடலோடி என்னும் நூலின் ஆசிரியர் நரசய்யா செரிவிக்கிறார்.


கடலில் பயணம்செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்?
காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே.உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும் அவன்மகன்ராசேந்திர சோழனும் ஆவான்.


கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில்,கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்காகவருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவரும்.

ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும்.ஆனால்இவ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோதுஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாடும் நீரோட்டத்தின் உதவியுடன்பல்லாயிரம்கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மைதெரிந்தது.

.இப்படி பயணம்செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன்பின்தொடர்ந்தபோது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன.ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும்,மக்களின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில்தமிழின்தாக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.

உதாரணம்:
தமிழா-------------மியான்மர்.
சபா சந்தகன்-----மலேசியா
ஊழன்,சோழவன்,வான்கரை,ஒட்டன்கரை,ஊரு--------ஆஸ்திரேலியா
கடாலன்------------ஸ்பெயின்
நான்மாடல் குமரி----------பசிபிக் கடல்
சோழா,தமிழி,பாஸ்--------மெக்ஸிகோ
திங்வெளிர்--------------------ஐஸ்லாந்து
கோமுட்டி----------------------ஆப்பிரிக்கா.
இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றை அறிந்துஅதன்மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.

இதேபோல் தென்பசிபிக்மாகடலில்,ஆஸ்திரேலிய கடல் பகுதியில்கடல் அகழ்வாராய்ச்சியில்மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.அக்கப்பலை ஆராய்ந்துபார்த்ததில்அது 2500 வருடங்களுக்கம் மேல் பழமையானது என்றும்,இது தமிழருடையது என்றும்தெரிவித்தனர்.

நியூசிலாந்தில்தமிழ்எழுத்துபொறிக்கப்பட்டமணிஒன்றும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அது"தமிழ் மணி" என்ற பெரிலேயே நியூஸிலாந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும் அவன்மகன்ராசேந்திர சோழனும் ஆவான்.

இன்னும்உலகில் உள்ள கப்பல் மற்றும்,கடல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன ( நாவாய்---Navy )

கப்பல், கடல் கலங்கள் வகைகள்



லெப்டினன்ட் வாக்கர் எனும்ஆங்கிலேயர் கி.பி.1811ல் நமது கப்பல்களைக்கண்டு பின்வருமாறு வியந்து கூறினார்......பிரிடிஷ்காரர்கள் கட்டியகப்பலை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மராமத்துசெய்தே தீர வேண்டும்......ஆனால் தமிழர்கள் கட்டிய கப்பலுக்கு 50 ஆண்டானாலும் பழுது பார்க்கும் அவசியம் இல்லை.

ஆங்கிலேயர் வருவதற்கு முன்பிருந்தே சிறிதுசிறிதாக ஒதுங்கிய நம்கப்பற்கலைஆங்கிலேயர் வந்தபின் அவர்களின்சுரண்டலில் இறுதியாகச்சமாதியில் இடப்பட்டுவிட்டது.

                                                                                                                      நன்றி விக்கிபீடியா.