பிரண்டை(ஆஸ்டியோபோரோசிஸ் தவிர்க்க)

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்பு தாது மற்றும் அடர்த்தி குறைந்து எலும்பு புரை அல்லது எலும்பு வலுவிழப்பு நோயாகும். இது எலும்பு வலிமை குறைவதற்கு வழி வகுக்கும். இது எலும்பு முறிவு ஏற்பட காரணமாக அமைகிறது. இந்த நோய் அறிகுறிகள் அற்றது. 

பெண்களுக்கு மெனோபாஸ் காலத்துக்கு ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பே இது ஏற்பட ஆரம்பித்துவிடும். வயதான ஆண்களுக்கும் ஏற்படும். 

பிரண்டை
:

வஜ்ரவல்லி என்பது இதன் பெயர்.ஆங்கிலத்தில் இதை Bone setter என்று கூறுவார்கள்.பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வஜ்ரம் போல் வலிமைஆகும்.

ஆஸ்டியோபோரோஸிஸ் எனும் எலும்பு அடர்த்தி குறைவு நோயை பிரண்டை தடுக்கும். எலும்புகள் வலுவாக்கும்.உடலை சுறுசுறுப்பாக ஆக்கும். 

மூட்டுகள் தேய்வதையும் தடுக்கும்.

எலும்பு முறிவுக்கு பிரண்டையை உணவில் சேர்த்து வந்தால் விரைவில் எலும்பு கூடும் என்று கூறுகிறது சித்த மருத்துவம்.

வலைதளங்களில் இப்போது நம்பகமான நிறுவனங்களின் ஆயுர்வேத பிரண்டை மாத்திரைகள் கிடைக்கின்றன. Available here

வயிற்றுப்புண் நீக்கும்.மூலம் ரத்தமூலம் போன்ற நோய்களை குணமாக்கும்.உடல்

இளைத்திருக்கும் குழந்தைகளுக்கு இளம் பிரண்டையை வாரத்தில் 2,3 நாட்கள் ,காலையில்  நெய்யில் வதக்கி அரைத்து சிறு நெல்லிக்காயளவு பாலில் கலந்து கொடுத்தால் குழந்தைகள் உடல் தேறி பலம் பெறுவார்கள்.

அடிபட்ட வீக்கம் வலி முதலியவற்றுக்கு  பிரண்டையை வதக்கி
அரைத்து பூச  நிவாரணம் கிடைக்கும்.

புற்று நோய்க்கு கொடுக்கும் மருந்துகளில் பிரண்டையும்  சேர்ந்திருக்கும்.

பிரண்டை இதய வால்வுகளில் கொழுப்பு அடைப்பை நீக்கி இரத்த ஒட்டத்தை சீராக்கி இதயத்தை பலப்படுத்தும்.

இது உஷ்ண குணமுள்ளது. அதனால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே உட்கொள்ளலாம்.எலும்புப் பிரச்சினை இருப்பவர்கள் தொடர்ந்து சில வாரங்களுக்கு பயன்படுத்தலாம். 

கள்ளிச்செடியின்மீது படர்ந்திருக்கும் பிரண்டையை உபயோகப்படுத்தக்கூடாது.

பிரண்டையில் ஒலைப்பிரண்டை, உருட்டுப்பிரண்டை, முப்பிரண்டை,சதுரப்பிரண்டை களிப்பிரண்டை,தீம்பிரண்டை,புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளன.

பிரண்டை தோலை சுற்றிலும் நீக்கி  உள்ளிருக்கும் சதையை எண்ணெயில் வதக்கியபின்பே உபயோகிக்க வேண்டும். 

பிரண்டை துவையல்:

பிரண்டையை தோல் நீக்கி ஒரு கைப்பிடி எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து 1ஸ்பூன் கடலைப் பருப்பு சேர்க்க வேண்டும். பின் கருவேப்பிலை, வரமிளகாய்3, சிறிய வெங்காயம் 10, பூண்டு பல்2, சேர்த்து வதக்கவும். பின் தேங்காய் துருவல் 2 ஸ்பூன், சுண்டைக்காயளவு புளி, தேவையான உப்பு சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கி ஆறவைத்து துணையாக அரைக்கலாம்.இதை சாதம், இட்லி தோசை சப்பாத்தி முதலியவற்றுடன் சாப்பிடலாம். 

பிரண்டை தொக்கு:

பிரண்டை தோல் நீக்கி சுத்தம் செய்தது-ஒரு கைப்பிடி.. புளி-25 கிராம். தாளிக்க-கடுகு, வெந்தயம், பெருங்காயம் தலா அரை ஸ்பூன். மஞ்சள் தூள் அரை ஸ்பூன்.மிளகாய்த்தூள் அரை ஸ்பூன். உப்பு- தேவையான அளவு. வெல்லம் பொடித்தது 1 ஸ்பூன். நல்லெண்ணெய் 50 மில்லி. 

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளிக்கவும். பின் சுத்தம் செய்த பிரண்டையை சேர்த்து பிரண்டை பொன்னிறமாகும்  வரை வதக்கவும். புளியைக் கரைத்து ஊற்றி மிளகாய் தூள். மஞ்சள் தூள். வெல்லம், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி எடுக்கவும். 

பிரண்டைப் பொடி:

சுத்தம் செய்த பிரண்டை 15.து.பருப்பு 50 கிராம். பெருங்காயம் சிறிது. மிளகாய் வற்றல் 4.உப்பு தேவையான அளவு. புளி சுண்டைக்காயளவு. 
வெறும் வாணலியில் பருப்பு,பெருங்காயம்,புளி,உப்பு ஆகியவற்றை வறுக்கவும்.பிரண்டையை மிகச் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அனைத்தையும் ஒன்றாக அரைக்கவும். 

பிரண்டை ரசம்:

சுத்தம் செய்து எண்ணெயில் பொன்னிறமாக வதக்கிய பிரண்டை 10 . இதை அரைத்து ரசம் வைக்கும்போது சேர்க்கலாம். 

போன்ற உணவுகள் மூலம் பிரண்டையை சாப்பிட எடுத்துக் கொள்ளலாம். 

பிரண்டையை நல்லெண்ணெய், கடுகு எண்ணெயுடன் காய்ச்சி உடலில் ஏற்படும் வலிகளுக்குத் தேய்க்கலாம்.

வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம்,பால்கனி தோட்டத்தில் கூட சிறு தொட்டிகளில் பிரண்டை யை வளர்த்துப் பயனடையலாம். பிரண்டை கணுவை கிள்ளி வைத்து புதிய பிரண்டை கொடிகளை உருவாக்கலாம். இதற்கு உரங்கள் எதுவும் தேவையில்லை. வாரம் ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும் நன்கு வளரும். 

முடிவுரை:
எலும்புப்புரை நோய் வருமுன் 
காப்பதற்குத்தான் இக்கட்டுரை. உணவே மருந்தாகவும், சரியான நேரத்தில் உணவு உண்ணுவதன் மூலமும்,ஆரோக்கியமான உணவுகளை வீட்டில் செய்து சாப்பிடுவதன் மூலமும் பல நோய்கள் நம்மை தாக்காமல் வாழலாம். 





காகமும் நரியும் (புகழ்ச்சிக்கு மயங்காதே)

ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டு விற்றுக் கொண்டிருந்தாள். இதைப் பார்த்துக்கொண்டிருந்த காகம் ஒரு வடையைக் கவ்விக் கொண்டு சென்றது. 

காகம் ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து வடையைச் சாப்பிட முற்படும்போது ஒரு நரி வந்தது. வடையை அபகரிக்க எண்ணிய தந்திரக்கார நரி காகத்தைப்பார்த்து பேச ஆரம்பித்தது. 
காகமே!காகமே! உன் குரல் மிக அழகாக இருக்கிறது. அதைக் கேட்கவே ஆவலாக வந்தேன். தயவுசெய்து எனக்காக ஒரு பாட்டுப் பாடு என்றது! 
காகம் பாட்டுப் பாட வாயைத் திறந்தால் வடை கீழே விழுந்து விடும். தான் எடுத்துக் கொண்டு ஓடி விடலாம் என நினைத்தது. 



இதைக்கேட்ட காகம் வடையை பாதுகாப்பாகக் கால்களுக்கடியில் வைத்துவிட்டு கா! கா! எனப் பாட ஆரம்பித்தது. காகத்தின் புத்திசாலித்தனத்தால் வடை கீழே விழவில்லை. நரியின் புகழ்ச்சிக்கு காகம் மயங்கவில்லை. நரி தன்னை ஏமாற்றி வடையை அபகரிக்க எண்ணுவதை காகம் உணர்ந்ததால் அது ஏமாறவில்லை. 

 2.இதே கதையை இன்னொரு முறையிலும் கூறப்படுகிறது. 
அதாவது நரி காகத்தைப்பார்த்து பாடச்சொல்லியதும் காகம் மிகவும் மகிழ்ந்து உடனே வாயைத்திறந்து பாடியது. வடை கீழே விழுந்தது. நரி வடையை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டது. 
நரி பாடச் சொல்லியது ம் மகிழ்ந்து போய் யோசிக்காமல் பாடிய காகம் வடையை இழந்து ஏமாந்தது.

குழந்தைகளே! 
நம்மை ஏமாற்ற நினைப்பவர் நம்மிடம் இல்லாத தகுதியைச் சொல்லி புகழ்ந்தால் நாம் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஏமாந்து நம் பொருளை இழக்க நேரிடும். 
  
கதை சொல்லும் நீதி:
வீண் புகழ்ச்சிக்கு அடிமையாகி ஏமாறக்கூடாது

சகல சௌபாக்கியங்களை அள்ளித்தரும் நவராத்திரி

நவராத்திரி என்றால் என்ன?எளியவழியில் நம் பாரம்பரியத்தை மறக்காமல்கொண்டாடுவது எப்படி?

 நம் இந்தியாவில்... இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் இந்தியர்களால் மிகச்சிறப்பாகக் கொண்டாடும் பண்டிகை நவராத்திரி.நவராத்திரி என்பது(செப்டம்பர் அல்லது அக்டோபர்) புரட்டாசி அமாவாசையின் பின் வரும் ஒன்பது நாட்கள் அம்பிகையின் வழிபாடு ஆகும்.இது துர்க்கை,லட்சுமி,மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரின் வடிவங்களை வழிபடுவதாகும். 



இந்த நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியை பூஜித்து கொண்டாடப்படுகிறது. பத்தாம் நாள் விஜயதசமி அல்லது ஆயுத பூஜை என்று கொண்டாடப்பட்டு நிறைவு செய்யப்படுகிறது. வீடுகளை சுத்தம் செய்து மாவிலைத் தோரணங்கள்,பண்டிகைக்கான சிறப்பு உணவுகள்,கோலங்கள், பூஜைகள் என நவராத்திரி கொண்டாட்டம் எப்போதும் சிறப்பாகவே இருக்கும்.

வண்ணக்காகிதங்கள், கலைப்பொருட்கள், உணவுப்பொருட்கள்,உடைகள், பரிசுப்பொருட்கள் என விற்பனை அதிகமாக இருக்கும். வீடுகள், கோவில்கள், அலுவலகங்கள், வேலை செய்யும் இடங்கள் என ஆயுதபூஜை நம் நாட்டில் மிகச்சிறப்பாகக் கொண்ட்டப்பட்டு வருகிறது.

 இதனால் சந்தைப்படுத்துதல் அதிகமாகி நாட்டில் பொருளாதாரம் நிலை நிறுத்தப்படுகிறது.  

விஜயதசமியன்று குழந்தைகளை முதன்முதலில் பள்ளியில் சேர்க்க அட்சராப்பியாசம் என்ற சடங்கு பின்பற்றப்படுகிறது.நெல்லை தாம்பாளத்தில் பரப்பிஅதில் எழுத்துக்களை  விரலால் எழுதி பிள்ளைகள் நன்கு படித்து மேன்மைக்கு வர நமஸ்தம் செய்வார்கள். கல்விக்கும் சகல கலைகளுக்கும் தெய்வமாக விளங்குபவர்  சரஸ்வதிதேவி. அதனால் மக்கள் தங்கள் எந்த புதிய முயற்சிக்கும் அடி எடுத்து வைக்கும் விதமாக விஜயதசமி நாளன்று பூஜை செய்து தொடங்குவர். 

நவராத்திரி கொலு

கொலுப் படி அமைத்தல்: கொலு அமைத்தல்  என்பது நம்முடைய பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாகும்.ஒன்பது படிகளை அமைத்து அதில் மேலிருந்து முதல் படியில் தெய்வங்கள், இரண்டாம்படியில் அவதாரங்கள், மூன்றாம் படியில் ஞானிகள், நான்காம்படியில் மனிதர்கள், ஐந்தாம்படியில் விலங்குகள், ஆறாம்படியில் பறவைகள், ஏழாம்படியில் தாவரங்கள், எட்டாம் படியில்பூச்சிகள், ஒன்பதாம்படியில் காய்கறிகள் என்று வரிசைப்படுத்தி வைப்பார்கள்.கொலு பொம்மை வாங்க

                   குழந்தைகளுக்கு நம் கலாசாரத்தையும் ஆன்மீகத்தையும் விளக்க அரிய வாய்ப்பு. இந்த ஒன்பது நாட்களில் தினமும் இதிகாசக் கதைகளையும் , சுலோகங்களையும் குழந்தைகளுக்கு சொல்லித்தருவதன்மூலம் குழந்தைகள் பக்தியுடன் பண்புள்ளவர்களாகவும் வளர்வார்கள். இதிகாசக் கதைகளின் காட்சிகள், மரப்பொம்மைகள், தமிழ் பாரம்பரியக் கதைகள், கிராம வாழ்க்கையை பிரதிபலிக்கும் அமைப்புகள் என பலவகையான வடிவங்களில் கொலு அமைக்கலாம். இன்று நம்மிடம் எளிமையான பொருட்களும் குறைந்த இடமும் இருந்தாலும், ஒரு சிறிய தட்டில் சில பொம்மைகள் வைத்து கொலு வைக்கலாம்.நாமே சொந்தமாக செய்த கைவினைப்பொருட்களையும் வைக்கலாம். நவராத்திரி கலைகளுக்கும் கலைஞர்களுக்குமான வாய்ப்பு.

             ஒன்பது நாட்களுக்கு தினமும் நம்மால் முடிந்த பிரசாதங்கள் சுண்டல், பொங்கல் போன்றவை காலையும் மாலையும் எளிமையாகச் செய்து அக்கம்பக்கத்தினரை வரவழைத்துக் கொடுக்கலாம். மனிதர்களுடன் அன்பாகப்பழகும் வாய்ப்பை நவராத்திரி கொலு பண்டிகை ஏற்படுத்துகிறது.வெற்றிலை பாக்கு ,மஞ்சள் குங்குமம், ரவிக்கைத் துண்டு அல்லது ஏதேனும் ஒரு பரிசுப்பொருள் என தனது அக்கம்பக்கத்து பெண்களையும் குழந்தைகளையும் அழைத்துபரிசுப்பொருட்கள் வழங்கி உறவை மேம்படுத்தலாம்.  இங்கே க்ளிக் செய்யவும்(affiliate)

சிறு குழந்தைகளின் கொலு கொண்டாட்டம்:

சிறு குழந்தைகளை கொலுவில் ஈடுபடுத்தி அவர்களை மகிழ்ச்சிப்படுத்தலாம். அவர்களின் திறமையும் எண்ணங்களின் வெளிப்பாடும் நமக்குத் தெரியவரும்.கொலுப்படிகளை அமைக்க உதவுவது தானியங்களை முளைக்க வைத்து சிறு கிண்ணங்களில் கொலுப்படிகளில் வைப்பது, பூங்காக்கள் அமைப்பது,களிமண் , அல்லது செயற்கைக் களிமண் வைத்து பூக்கள் காய்கறிகள் பழங்கள், பொம்மைகள் செய்வது, முதலியவற்றை குழந்தைகளின் மூலமாகச் செய்யும்போது அவர்களின் கைத்திறனும் அறிவும், கற்பனைத்திறனும் மேம்படும். 

நம்மிடம் சிறிய இடம் இருந்தாலும் ,எளிமையான பொருட்களை வைத்து அலங்கரித்து  தட்டில் வைத்துக்கூட கொலுப் பண்டிகை கொண்டாடலாம். 

நவராத்திரி விரதம்:

விரதம் இருக்கும் நாட்களில் மனதையும் உடலையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். நவராத்திரியில் சிலர் ஒருவேளை விரதமிருப்பார்கள் சிலர் முழு விரதம் இருப்பார்கள். நீராகாரம், பழங்கள் காய்கறிகள் என சாத்வீகமான உணவையே விரத நாட்களில் எடுத்துக்கொள்ளப்படும்.வட இந்தியாவில் துர்கா பூஜை, மேற்கு வங்கத்தில் காளி பூஜை,கர்நாடகாவில் தசரா ,தமிழ்நாட்டில் ஆயுத பூஜை என நவராத்திரி நாடெங்கும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது .

முடிவுரை:

நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையும் மூதாதையர்களின் அனுபவமும் அறிவும் நிறைந்த வழிகாட்டியாகும். நவராத்திரி பண்டிகையின் மூலம் பக்தியும், பாரம்பரியமும், சக மனிதர்களிடையே ஒற்றுமையும் அன்பும் வளரும். நலங்களையும் சகல சொபாக்கியத்தையும் அள்ளித்தரும் நவராத்திரியை எல்லோரும் கொண்டாடுவோமாக!click here(affiliate)

இந்த நவீன காலத்திலும் மரபை மறக்காமல் வாழ்வதுதான் உண்மையான பண்பாடு.