புறாவும் எறும்பும்
சிறுவர்களுக்கு நல்ல பண்புக் கதைகள் சொல்லி அவர்களை நற்குணம் மிக்கவராக உருவாக்க மரபுகளாகத் தொடரும் கதைகள்தான் சிறுவர் நீதி நெறிக் கதைகள்.அதை இந்தப் புறாவும் எறும்பும் என்ற சிறுவர் பண்புக் கதையின் மூலம் குழந்கைதள் அறிவார்கள்.ஒருவருக்கு தக்க சமயத்தில் நாம் செய்யும் உதவி நாம் ஆபத்திலிருக்கும்போது நமக்கு உதவும் என்பதை இக்கதை மூலம் அறியலாம். குழந்தைகளுக்கு இந்த மரபுக்கதைகளை அறியத்தருவதன் மூலம் அவர்கள் மற்றவர்களுக்குச் செய்யும் உதவியின் அருமையை அறிவார்கள். சிறுவயதுக் குழந்தைகளுக்கு பண்புக் கதைகளின் மூலம் நல்ல எண்ணங்களையும், சிந்தனைகளையும் ஊட்டலாம்.
ஒரு அழகிய காட்டின் ஆற்றங்கரையில் பெரிய மரத்தில் புறாவும் எறும்பும் வசித்து வந்தன. ஒரு நாள் புறா மரத்தில் அமர்ந்திருக்கும்போது ஆற்றில் எறும்பு தண்ணீரில் விழுந்து சிக்கி தத்தளிப்பதைக் கண்டது.
எறும்பைக் காப்பாற்ற நினைத்த புறா மரத்தின் இலையை பறித்து ஆற்றில் தத்தளித்த எறும்பின் அருகில் போட்டது.
எறும்பு அந்த இலையின் உதவியுடன் கரைக்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தது.
தக்க சமயத்தில் தன் உயிரைக் காப்பாற்றிய புறாவுக்கு நன்றி சொன்னது எறும்பு.
அதன்பின் மற்றொரு நாளில் வேடன் ஒருவன் புறாவைக் கொல்ல வில்லில் அம்பைப் பூட்டி குறி பார்த்துக்கொண்டிருந்தான். புறா அதை கவனிக்காமல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.புறாவைக் காப்பாற்ற எண்ணியது எறும்பு.
எறும்பு உடனடியாக வேடனின் அருகில் சென்று அவன் காலைக் கடித்தது. வேடன் வலி தாங்காமல் கத்தினான்.
சத்தத்தைக் கேட்டு திரும்பிய புறா தனக்கு ஏற்பட இருந்த ஆபத்தை உணர்ந்து பறந்து தப்பியது. புறாவைக் கொல்ல வைக்கப்பட்ட குறி தவறியது.புறா இப்போது எறும்பு செய்த உதவிக்கு நன்றி கூறியது.அன்று புறா நமக்கென்ன என்று அலட்சியமாக இருக்காமல் கருணையுடன் எறும்பைக் காப்பாற்றியது. அந்தச் சிறிய எறும்பும் நன்றி மறக்காமல் புறாவை அதற்கு ஆபத்து வரும்போது காப்பாற்றியது.
எவருக்கும் எந்த நேரத்திலும் நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும். அதேபோல் ஒருவர் செய்த உதவியை மறக்காமல் அவருக்கு தக்க சமயத்தில் நாம் உதவியாக இருக்க வேண்டும். நன்றி மறவக் கூடாது,தர்மம் தலை காக்கும் என்ற பண்புகளை குழந்தைகள் தெரிந்து கொள்வார்கள்.
நீதி:
குழந்தைகளே! நீங்களும் இது போல் துன்பத்தில் இருப்பவர்களுக்கு தக்க சமயத்தில் உதவ வேண்டும்.
இக் கதையின் மூலம், பிற உயிர்களுக்கு உதவ வேண்டும்.நாம் செய்த உதவி நமக்கே ஒருநாள் திரும்ப வரும் .நம்மைத் துன்பத்திலிருந்து காக்கும்.
சிறுவர் நீதிநெறிக் கதைகள் தமிழில்
சிறுவர் பண்புக் கதைகள்
தொடர்புடைய கதைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக