சிந்துவெளி நாகரிகத்தின் அடிப்படையில் அமைந்த திராவிடர் நாகரிகம் கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன் இருந்தது என்றும்' அது ‘சைத்தவ பண்பாட்டு நாகரிகம்' என்று அழைக்கப்பட்டது என்று பேராசிரியர். கே. ஆர். ஸ்ரீ கண்ட மூர்த்தி குறிப்பிடுகின்றார்.
“சிந்துவெளி நாகரிக இனத்தின் பரம்பரையினர் என்று கருதப்படு கின்றவர்கள், தமிழ்நாட்டில் ‘திராவிடர்'களில் இன்னும் பிரபலமாக இருக்கின்ற ‘சித்த வைத்திய முறை'யைப் பின்பற்றுகிறவர்கள் என்றும், இவர்களே, ‘சைத்தவ நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள்' என்றும் அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்" எனப் பேராசிரியர் எஸ். கே. இராமச்சந்திரராவ் தெரிவிக்கின்றார்.
உருத்திரன் என்றழைக்கப்பட்ட திராவிட இனத்தைச் சேர்ந்த சிவனே முதல் மருத்துவனாகவும், சிறந்த மருத்துவனாகவும் ரிக் வேதத்தினால் அடையாளம் காட்டப்படுகிறான். (ரிக் வேதம் – 2-33.4)
சித்தர் சிவபெருமானே முதல்சித்தர் என ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளதால், சிவபெருமானைப் பற்றிய குறிப்புகளையே சித்தர் வரலாற்று ஆவணமாகக் கருதலாம்.
- கி.மு.5000 ஆண்டளவிலான நடராசர் உருவ முத்திரை ஈரானில் (மெசபடோமியா) கிடைத்துள்ளது.
- கி.மு. 4000 ஆண்டளவிலான சிவபெருமானை வழிபடும் தமிழ்க் கல்வெட்டு போர்ச்சுகல் நாட்டில் கிடைத்துள்ளது.
- சிந்து சமவெளியில் சிவன் யோக நிலையிலிருக்கும் முத்திரை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிந்துவெளி நாகரிகத்தின் அடிப்படையில் அமைந்த திராவிடர் நாகரிகம் கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன் இருந்தது என்றும்' அது ‘சைத்தவ பண்பாட்டு நாகரிகம்' என்று அழைக்கப்பட்டது என்று பேராசிரியர். கே. ஆர். ஸ்ரீ கண்ட மூர்த்தி குறிப்பிடுகின்றார்.
தமிழ் மருத்துவ முறைகள் 10000 முதல் 4400 B.C.E ஆகிய காலங்களில் தோன்றியதாக T.V.சாம்பசிவம் பிள்ளை குறிப்பிடுகிறார்.
கருவூரார், கொங்கணவர், சட்டைமுனி, இடைக்காடர்,காராங்கிநாதர்,கோரக்கர்,புலிப்பாணிசித்தர்,நந்தீசர்
காலாங்கிநாதர்,புலிப்பாணி,திருமூலர்,போகர்,கோரக்கசித்தர்.
தமிழ் மருத்துவர்களை ‘ஆயுள்வேதர்' என்று இளங்கோ வடிகள் குறிப்பிடுகிறார்.
சேறை. அறிவனார் என்னும் இசை மேதையால் இயற்றப் பெற்றது பஞ்சமரபு.புதை பொருள் அகழாய்வு ஆராய்ச்சியின்படி, சிந்து, கங்கைச் சமவெளிகளில் வாழ்ந்திருந்த பழந்திராவிட மக்கள், அறுவை மருத்துவத்துக்காகச் செப்புக் கத்திகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர் 2 என்பது தெரியவருகிறது. அறுவை மருத்துவத்துக்காகச் செம்பைப் பயன்படுத்தினால்' அது பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்னும் அறிவியல் உண்மையைப் பண்டைய தமிழர் அறிந்திருந்தனர் என்பது பெறப்படுகிறது. புதைந்த நாகரிக இனத்து மக்கள் மருந்து, மருத்துவம்' அறுவை மருத்துவம் ஆகியவற்றை அறிந்தும் பயன்படுத்தியும் வந்திருந்தனர் என்பதை உறுதிப் படுத்துகிறது.
கூட்டுமறுத்துவம்,குழந்தைமருத்துவம்,அழகு மருத்துவம்,விலங்கு மருத்துவம்,தாவரமருத்துவம்
திருமந்திரம்,தொல்காப்பியம்,திரிகடுகம்,சிறுபஞ்சமூலம்,ஏலாதி ஆகிய சிறந்தமருத்துவ நூல்கள் தமிழ்மரித்துவத்தின் தொன்மையையும் சிறப்பையும் விளக்குகின்றன்.
போர்க் காலங்களில் போர்வீரர்களுக்கு ஏற்படுகின்ற விழுப்புண் பெரிய அளவில் இருந்தால் அப்புண்ணை மருந்துகளால் ஆற்றுவது கடினம் என்பதை உணர்ந்து' மருத்துவ வல்லார்களால் அப்புண்கள் தைக்கப்பட்டன. அதன் பின்னரே மருந்திட்டுக் கட்டுவதும் நிகழ்ந்துள்ளது. இதுவே இன்றைய நாளிலும் நடைமுறையிலுள்ளது. இவ்வாறு, விழுப்புண்ணைத் தைக்கும் முறையைப் பதிற்றுப் பத்து குறிப்பிகிறது.
-
-
-
- "மீன்தேர் கொட்பின் பனிக்கய மூழ்கிச்
- சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள்ளூசி
- நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்" – பதிற்றுப்பத்து 5: 2:1-3
-
-
நீரிலுள்ள மீனைக் கொத்துவதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியில் நீரைவிட்டு மேலே பறந்து செல்லும் சிரல் பறவையைப் போல, நெடிய வெள்ளூசி புண்ணுக்குள் நுழைந்து வெளியே வருகிறது என்கிறது. வெள்ளூசி என்பது வெள்ளியால் செய்யப்பட்ட தையல் ஊசியாக இருக்கலாம்.
-
-
-
- "திப்பிலி தேன்மிளகு சுக்கினோ டிம்பூரல்
- துப்பில்லா ஆன்பால் தலைக்காடைஒப்பில்லா
- வெந்நீரும் வெண்ணெயு மெய்ச் சாந்தும் பூசவிவை
- மன்னூழி வாழும் மகிழ்ந்து" – பஞ்சமரபு. செய்.63
-
-
என்னும் இச்செய்யுள் திப்பிலி, தேன்' மிளகு, சுக்கு' இம்பூரல், பசுவின்பால்' தலைக்காடை, மெய்ச்சாந்து இவற்றை வெண்ணெய் விட்டு அரைத்து வெந்நீரில் குழைத்துப் பூசிவரக் குரலின் வளம் அதிகப்படும் என்கிறது.
கரணி என்பது அரைப்பு முறையால் செய்யப்படுகின்ற மருந்துகளைக் குறிப்பிடும்.
- சந்தான கரணி- அருகிய பெருமருந்தென்பர். இது முறிந்த உறுப்புச் சந்து செய்யும் (இணைக்கும்) மருந்து.
- சல்லிய கரணி - வேல்தைத்த புண்ணை ஆற்றும் மருந்து.
- சமனிய கரணி - புண்ணின் தழும்பை ஆற்றும் (அ) மாற்றும் மருந்து.
- மிருத சஞ்சீவினி - இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்யும் மருந்து.
மேற்கண்ட நான்குவித மருந்துகளின் வினைப்பயனை நோக்கும் போது, தமிழ் மருத்துவம் மிக உயர்ந்த நிலையில் இருந்தது தெரிய வருகின்றது. இம்மருந்துகளைப் போன்ற பயனுடைய மருந்துகள் மேலை மருத்துவமான அலோபதி மருத்துவத்திலும், இன்றைய நிலையிலுள்ள எந்த மருத்துவத்திலும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
தமிழ் நூல்கள், பத்துவகைக் குற்றமுமின்றி முப்பத்திரண்டு வகை உத்தியொடு இயற்றப் பெற வேண்டும் என்கிறது.
மனித உடல் பிணநாற்றம், உடல்நலக்குறைவு, மதுவின் நாற்றம், இளைப்பு, முகம்வேர்த்தல், குளிர்தல், பசிதாகம், கண்பஞ்சாடல், உடல்வியர்த்தல், மரணம் என்னும் பத்து வகைக் குற்றங்களைக் கொண்டுள்ளது. (அகத்தியர் வைத்திய வல்லாதி – 600. பாடல். 73-74) அவற்றை நீக்கினால் மட்டுமே உடல் அழியாதிருக்கும்.
மருத்துவப் பூக்கள்
சங்க இலக்கியமான பத்துப் பாட்டுள் ஒன்றான குறிஞ்சிப் பாட்டை இயற்றிய கபிலர்' 98 வகையான பூக்களைக் குறிப்பிடுகிறார். அவை அனைத்தும் மருத்துவக் குணங்களைக் கொண்ட மரம், செடி' கொடிகளாகும். அந்நூலுள், 98 வகையான பூக்களைக் கூற வேண்டிய சூழல் நேராமலேயே அவை உரைக்கப்பட்டிருப்பதாக அந்நூலைக் கற்பார் உணர்வர். அவர்' அவ்வாறு உரைக்கக் காரணம்? தானறிந்த வற்றைப் பிறரும் அறிந்து இன்பமடைய வேண்டுமென்ற நோக்கமே எனலாம்.
உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல, திருமூலர் அறுபதுக்கும் மேற்பட்ட காயகற்ப முறைகளைக் குறிப்பிட்டுள்ளார். உடல் நலம் பெற எவர் முனைந்தாலும், முதலில் உடலில் உள்ள அழுக்குகளை அகற்றிக் கொள்ள வேண்டும். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருது' என்று சித்தர்கள் கூறுகிறார்கள்
பண்டைக் காலத்துத் தமிழ் மருத்துவ முன்னோர்கள் மனிதனுக்கு உற்ற நோயைப் போக்கும் மருந்துகளையும் மருத்துவத்தையும் கண்டறிந்திருந்ததைப் போல' மனிதனுக்கு உற்ற துணையாக இருந்த விலங்குகளுக்கும்' உணவுப் பொருளாகப் பயன்பட்ட தாவரங்களுக்கும் மருத்துவம் பார்த்ததுடன், அவை நோய் வராமல் பராமரிக்கவும் கற்றிருக்கின்றனர் என்பது தெரிய வருகிறது.
[தொகு]
தமிழ் மருத்துவர் மருந்து, வாதம், ஓகம், ஞானம் ஆகிய நான்கு உறுதிப்பொருள்களைக் குறியீடுகளாகக் குறித்தனர். அக்குறியீடுகள் தொல்காப்பியத்தில் அமைப்பு எண்களாக அமைந்துள்ளன.
தமிழ் மருத்துவத்தின் குறியீட்டு எண்கள் உடலியலைச் சுட்டுகிறது. அதைப் போலத்3, தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய அதிகாரங்களை மூன்றாகக் கொண்டுள்ளது.
-
-
-
- "மூன்றே பொருளாய் முடிந்தது அண்டம்
- மூன்றே பொருளாய் முடிந்தது பிண்டம்
- மூன்றே பொருளாய் முடிந்தது மருந்து
- மூன்றே பொருளாய் முடிந்தது வாதமே" - திருமந்திரம்.
-
-
அண்டம், பிண்டம், மருந்து, வாதம் ஆகியவை நான்கும் மூன்று பொருளாய் முடிந்தது4 என்கிறது, தமிழ் மருத்துவம். அந்த மூன்று மூலப்பொருள்களைக் கருத்திற்கொண்டு தொல்காப்பியத்தின் அதிகாரங்கள் மூன்றாக அமைந்தன.
மனித உடற்பகுதிகளில் தொடர்புடைய விண்மீன்களின் எண்ணிக்கை இருபத்தேழு என்பதால், அவ்வெண்கள் தொல்காப்பிய இயல்களின் எண்களாகக் கொள்ளப்பட்டன.
(இந்திய அணுக்கூடத்தில் ஒரு நியூட்ரானைக் கொண்டு ஒரு யுரேனியம் இடிக்கப்படுகிறது. அவ்வாறு இடிக்கப்படும் யுரேனியம், 1 > 3 > 9 > 27 > 81 > என நியூட்ரானை உருவாக்கிக் கொண்டே செல்கிறது. இந்த அணுச்செயலைப் போலவே தொல்காப்பியத்தில் 1 > 3 > 9 > 27 என்று அதிகாரங்களும் இயல்களும் அமைந்துள்ளன. )
தமிழ் மருத்துவத்தில் எட்டு என்பது ஓர் அடிப்படைக் கணக்காகும். மருத்துவப் பொருள்களை எட்டுக்கு ஒன்றாகக் காய்ச்சினால் மருந்தாகும். இல்லாவிட்டால் விருந்தாகும்.
இவ்வாறு கண்டறியப் பெற்ற எட்டின் தத்துவம் மருந்துக்கு மட்டுமல்ல. மற்ற எல்லாவற்றுக்கும் பொருந்தும். சாதாரணமாகக் குடிக்கப் பயன்படுகின்ற வெந்நீர், எட்டுக்கு ஒன்றாகக் காய்ச்சினால் மருந்து என்று கண்டறியப்பட்டுள்ளது.
இக்காலத்தில் உயிர்க்கொல்லி மருந்தாகப் பயன்படுத்தப் படுகின்ற வேம்பு சிந்துவெளி நதிக்கரை நாகரிக மக்களிடத்திலும் காணப்பட்டுள்ளது. வேப்பிலையைச் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்று அறிஞர் தீட்சிதர் கூறுகிறார்.19
வீட்டு விலக்கம் என்னும் மூன்று நாளில் ஆண் பெண் இருவரும் கூடி கருவமைந்தால் அந்தக்கரு கூன், குருடு, செவிடு, பேடு போன்றவற்றில் ஒன்றாகப் பிறக்கும் என்பதால்,
-
-
-
- ‘பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
- நீத்தகன் றுரையார் என்மனார் புலவர்’ - தொல்.பொருள்.1133 (46)
-
-
விலக்குடைய மூன்று நாளும் விலகி இ.ரு என்பதும் மருத்துவச் செய்தியே ஆகும்.தமிழ் இலக்கிய நூல்களின் அளவைவிடவும் இரு மடங்குக்கும் அதிகமான நூல்கள் தமிழ் மருத்துவ நூலாகக் கிடைக்கின்றன.தமிழ் மொழியைப் போலவே தமிழ் மருத்துவமும் காலத்தால் முதிர்ந்தது, தொன்மையானது, செம்மையானது. தமிழ் மொழியைச் செம்மொழியென அழைப்பது போலவே தமிழ் மருத்துவத்தையும் செம்மருத்துவம் என வழங்க வேண்டும். செம்மொழித் தமிழாய்வு நடைபெறுவதைப் போல, தமிழ்ச் செம்மொழி மருத்துவ ஆய்வுகள் நடைபெற வேண்டும்.
தமிழ் மொழிக்கெனத் “தமிழ்ப் பல்கலைக் கழகம் “ அமைந்துள்ளதைப் போலத் தமிழ் மருத்துவத்திற்கெனத், “தமிழ் மருத்துவப் பல்கலைக் கழகம்” அமைத்து தமிழ் மருத்துவத்தை நுண்ணாய்வு செய்து காத்து வளர்த்திட வேண்டுமெனப் பரிந்துரை செய்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக