குளிர்கால சருமப் பராமரிப்பு:(winter Skin Care):
குளிர்காலத்தில் நம் தோல் குளிர் அல்லது பனிக்காற்றினால்(காற்றில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பதால் தோலில் உள்ள ஈரம் காற்றுடன் கலந்து) வறண்டு கருத்து பாளம் பாளமாக வெடித்து ரத்தக்கசிவு கூட ஏற்பட்டு விடுகிறது.
இதனால் தோல் அரிப்பு ஏற்பட்டு சில சமயம் சொறிந்து கொள்வதால் கூட ரத்தக் கசிவு ஏற்படும்.தழும்புகளாகக்கூட மாறலாம்அந்த அளவுக்கு தோல் பாதிப்பு அடையாமல் நாம் சில வழிமுறைகளைப் பின்பற்றி தோலை முடிந்த அளவு இயல்பாக வைக்க முயற்சி செய்யலாம்.
குளிர்காலச் சருமம் எப்படி இருக்கும்?
உலர்ந்த காற்றினால் ஈரப்பதம் இன்றி வறண்டு காணப்படும்.
உள்ளங்கைகள் சொரசொரப்பாக மென்மையை இழந்து காணப்படும்.
உலர்ந்த தோல் தேய்த்தால் வெண்மையாக செதில்போல் உதிரும்.
தோலைக் கீறினால் சருமத்தில் வெண்மையாகக்கோடு விழும்.
சருமம் நிறம் மங்கி சற்றே கருத்துவிடும்.
அரிப்பும் எரிச்சலும் இருக்கும்.
ஒவ்வொரு பருவ காலத்திலும் தோல் அதற்கேற்றார்போல் மாறவும் பாதிப்படையவும் செய்கிறது.
என்ன செய்யலாம்? பாதுகாப்பது எப்படி?
ஓட்ஸை மாவாக்கி அதனுடன் பாலும் சிறிது தேனும் கலந்து மென்மையாக சருமத்தில் தேய்க்கலாம்.
அவகேடோ பழத்தை மசித்து பேக் போடலாம்.வாழைப்பழத்தை மசித்து பேக் போடலாம்.
பாலாடை ஒரு கரண்டி அதனுடன் பன்னீர் 1 ஸ்பூன் ,எலுமிச்சைச்சாறு 1 ஸ்பூன் சேர்த்து நன்கு கலக்கி முகம், கைகள், கால்கள் முதலிய இடத்தில் பூசலாம்.
ஷியா பட்டர், தேங்காய் எண்ணெய்,பாதாம் எண்ணெயில் செய்யப்பட்ட மாய்ஸ்ச்சரைசிங் நைட்க்ரீம்களை உடல் முழுவதும் பூசி வறட்சியை நீக்கலாம்.
வாரத்திற்கு ஒருமுறை காபி மற்றஉம் சர்க்கரை சேர்த்த ஸ்க்ரப்பிங் க்ரீம்கள் உபயோகிக்கலாம்.கோகோ பட்டர், வாசலின் ஜெல்லி போன்றவறஅறைப் பயன்படுத்தி சருமத்தை மென்மையாக்கலாம்.
வெள்ளரிக்காய் அரைத்து கிளிரிசனுடன் கலந்து பேக் போடலாம்.
இவை சருமத்திலுள்ள இறந்த செல்களை நீக்கி புதுப்பிக்கின்றன.
குளிப்பதற்கு சோப்புகள் தேவையா?
சூடான நீரில் ஷவரில் அதிக நேரம் குளிப்பதைத் தவிர்க்கவும். இது எண்ணெயப்பசையை முற்றிலும் நீக்கும். குளிர்காலத்தில் மட்டும் சிறப்பு பேக்குகள், தேங்காயெண்ணெயில் மட்டும் செய்த சிறப்பு சோப்புகளை உபயோகிக்கவும்.கெமிக்கல் கொண்ட சோப்புகள்,பேஸ்வாஷ் பயன்படுத்தாதீர்கள்.இவை இன்னும் சருமத்தை வரளச் செய்துவிடும்.
பாசிப்பயறு மாவு அல்லது கடலைமாவு தயிர் சேர்த்த கலவை .இது மிகச்சிறப்பான சருமத்தைப் பேணக்கூடியது.தோலில் எண்ணெய்ப்பசைசைத் தக்க வைத்துக்கொண்டு அழுக்கை மட்டும் நீக்கும் சிறந்த முறை இது.
நாட்டு மருந்துக் கடைகளில் நலுங்குமாவு என்ற வாசனைப்பொடி விற்பார்கள்.இதனுடன் கடலை மாவு சேர்த்து தேய்த்துக்குளித்தால் சருமம் சுருக்கங்களின்றி இளமையாகவும், மென்மையாகவும் இருக்கும்.
சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைத்து உதவி செய்வதில் கிளிசரின் பெரும் பங்கு வகிக்கிறது.பாதாம் ஆயிலில் கிளிசரினை சேர்த்துத் தடவலாம்.
பன்னீரில் கிளிசரினை சேர்த்துத் தடவலாம்.கற்றாழை ஜெல்லுடன் சேர்த்துத்தடவலாம்.பழ பேக்குகளுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
நல்லெண்ணெயை மிதமான சூடாக்கி கை,கால் விரல்கள், பாதங்களில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.முகத்தில் வெதுவெதுப்பான எண்ணெயை விரலில் தொட்டு புள்ளி புள்ளியாக வைத்து கழுத்திலிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்ய வெண்டும் இதை பத்து பதினைந்து முறை செய்யவேண்டும். நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும் கழுத்திலுள்ள சுருக்கங்கள் மறையும்.கடலைமாவு தயிர் சேர்த்த கலவை கொண்டு கழுவலாம்.
உள்ளங்கைகள்:
உள்ளங்கைகள் சொரசொரப்பைத் தடுக்க கிளிசரினுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு தேய்க்கவும்.அப்படியே சிறிது நேரம் விட்டுவிடவும்.இனி மென்மையான கைகள் உங்களுக்கு மட்டுமே சொந்தம்..
உதடுகள்:
இரவு படுக்கைக்குச்செல்லும்போது விளக்கெண்ணெய் தடவலாம்.பசு வெண்ணெய் தடவலாம்.தேங்காய் எண்ணெயுடன் ஒரு சொட்டு விட்டமின் ஈ ஆயில் கலந்து தடவலாம்.
குதிகால் வெடிப்பு:
குதிகால் வெடிப்பு குளிர்காலத்தில் தவிர்க்க முடியாதது. இதற்கு குதிகாலை வெந்நீரில் சோப்புப்போட்டு நன்கு கழுவி துடைத்து விளக்கெண்ணெயில் மஞ்சள் பொடி சேர்த்துக் கலக்கி பூசி சிலிகான் சாக்ஸை அணிந்து கொள்ளவும். பத்தே நாட்களில் மொழுமொழுவென்ற குதிகால் உங்களுக்கே!
குழந்தைகளுக்கு:
குழந்தைகளுக்கு உடல் மூடும்படி ஆடை அணியவும்.குழந்தைகளுக்கு தேங்காயெண்ணெய் மசாஜ் செய்து, நலங்குமாவுடன் கடலை மாவு சேர்த்த கலவை உபயோகிக்கலாம்.சோப் தவிர்க்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக