உடல் எடை அதிகமாக ஆக பல சிக்கல்கள் நமக்கு வருகின்றன.
உடல் எடை அனைத்தையும் கால் தாங்குவதால் எடை கூடக்கூட அழுத்தம் தாங்காமல் கால்கள் வலிக்க ஆரம்பிக்கின்றது.மூட்டு மற்றும் எலும்புகள் தாங்கும் திறனை இழந்து வலியை சுமக்க ஆரம்பிக்கின்றன.
உங்கள் முதுகெலும்பு அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறது.
ஆல்டியோஆர்த்ரைடீஸ் எனும் எலும்பு சம்பநதப்பட்ட நோய்களுக்கு வாய்ப்பாகிறது.
உடல் எடை கூடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். அதிக கொலஸ்ட்ரால் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும். இருதய வால்வுகளில் கொழுப்பு சேர்ந்து இதய பிரச்சினைகளைக் கொண்டு வருகிறது.மூச்சுத்திணறல் ,தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
அதிக உடல் எடை வாழ்நாளைக் குறைக்கிறது.உயிரிழப்புக்கான அபாயம் அதிகரிக்கின்றது.
உடல் பருமன் இகுப்பவர்களுக்கு உடல் பிரச்சினைகளால் தன்னம்பிக்கை குறைகிறது.
ஹார்மோன் பிரச்சினைகள் வருவதற்க்கு வாய்ப்புகள் அதிகம்.குழந்தை பெறும் வாய்ப்புகள் குறைகிறது.பெண்களுக்கு PCOS (Polycistic Over Syndrome)போன்ற ஹார்மோனல் குறைபாடுகள் ஏற்படும். சீரற்ற மாதவிடாய்ஏற்படும்.
சீரற்றவடிவம்,தொப்பை போன்றவை நம் அழகை குறைக்கும்,பேட்டி லிவர்
எனும் கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றைச்சுற்றி கொழுப்பு படிவதால்
சர்க்கரை நோய்,சிறுநீரகப்பிரச்சினைகள் போன்றவற்றிற்க்கு ஏதுவாகிறது.
இத்தனை பிரச்சினைகளை நாம் ஏன் ஏற்றுக்கொண்டு துன்பப்பட்டுக்கொண்டு வாழ வேண்டும்?
இதற்கு எளிய வழி முறைகள் உள்ளன.
1. பால், தயிர் போன்ற கொழுப்புள்ள உணவுகளை பெரும்பாலும் தவிர்த்துவிட்டு பால் இல்லாமல் வரகாபி,வரடீ போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
2. காலையில் இஞ்சி,கடும்பகல் சுக்கு ,மாலையில் கடுக்காய் 48 நாட்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கு முதுமையும் இளமையாக மாறும் என சித்தர் பாடல் கூறுகின்றது.
காலையில் ஒரு இஞ்ச் அளவிற்க்கு இஞ்சியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துபனங்கல்கண்டு சேர்த்து குடித்து வரலாம்.மதியம் சுக்குப்பொடி:கடைகளில் சுக்குப்பொடி கிடைக்கிறதுஅதை கால் ஸ்பூன் அளவிற்க்கு வாயில் போட்டு தண்ணீர் குடிக்கலாம், இரவு கடுக்காய் பொடி:இதுவும் கடைகளில் கிடைக்கும் .இரவு படுக்கப்போகும் முன் கால் ஸ்பூன் தண்ணீரில் கரைத்து குடித்து வரலாம்.
இவை மூன்றையும் கடைப்பிடிக்க முடியாவிட்டால் கூட ஏதாவதொன்றை ஒரு நேரத்தில் கடைப்பிடிக்கலாம்.
3. சமைக்காத உணவு: இது மிகவும் எளிது.மூன்று வேளை உணவில் ஏதாவது ஒரு வேளை மட்டும் சமைக்காத உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். பழங்கள் கூட ஒரு வேளை சாப்பிடலாம். தொடர்ந்து ஒரு மாதம் எடுத்துக்காட்டாக ... இரவு ஒருவேளை வெறும் பழங்கள் சாப்பிட்டு வர உடல் கொழுப்பு குறைந்து உடல் வடிவமாக மாறுவதை கண்கூடாக காணலாம்.
பச்சைப் பயறை முளை கட்டி வெங்காயம், தக்காளி, தேங்காய் துருவல்,எலுமிச்சைச்சாறு,சிட்டிகை உப்பு, மிறகுத்தூள் சேர்த்துக் கலக்கி ஒரு வேளை உணவாக உண்ணலாம்.ராகி, கம்பு ஆகியவற்றையும் முறைகட்டி களி கூழ், தோசை முதலியவை தயாரித்து உண்ணலாம். இந்த முறஐயில் தினமும் எடுத்துக்கொண்டால் 15 நாட்களில் எடை குறைவதை கண்கூடாகக் காணலாம்.
அவுல் அல்லது சிவப்பு அவுல் தண்ணீரில் ஊறவைத்து தேங்காய் துருவல் வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.
எலுமிச்சைச்சாறை வெதுவெதுப்பான நீரில் கலக்கி தேன் சேர்த்து குடிக்கலாம்.
4. கொள்ளு சூப்: காலை நேரத்தில் கொள்ளு சூப்150 மில்லி தினமும் குடித்துவர உடல் எடை ஆச்சர்யப்படத்தக்க அளவு குறையும்.
இவையெல்லாம் சிரமமில்லாத எளிதில் கடைப்பிக்கக்கூடிய வழிகள்.
5. வெண்பூசணிச்சாறு: வெண்பூசணியை பச்சையாக சாறுபிழிந்து குடிக்க வேண்டும். வேகவைத்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.பச்சையாக எடுத்துக்கொள்ளும்போது உடல் எடை குறையும்.
6.சிறி தானியங்களான சாமை, வரகு, ராகி, திணை, சோளம், குதிரைவாலி போன்ற சிறு தானியங்களில், புரோட்டீன் , மினரல்ஸ் மற்றும் நார்ச்சத்து அதிகமாகவும் கொழுப்பு குறைவாகவும் இருப்பதால் உடல் எடையை கட்டுப்படுத்துவதற்க்கு சிறந்தது! இவற்றை களி, கஞ்சி, ரொட்டி ,சாதம் முதலியனவாக செய்து உண்ணலாம்.
7. அடுத்து நிறைய நீர் அருந்த வேண்டும்.தாகத்தை மட்டுப்படுத்திக்கொண்டு தண்ணீர் கிடைக்கும்போது குடிக்கும் பழக்கத்தை தவிர்க்கவும்.
8.தினமும் சரியான நேரத்துக்கு வயிற்றுக்கு வேண்டிய உணவை கண்டிப்பாக உண்ண வேண்டும்.உடல் குறைக்கவேண்டும் என உணவை மிகக் குறைவாக எடுத்தாலோ அல்லது பட்டினியாக இருந்தாலோ நிச்சயம் உடல் எடை குறையாது.
9.வீட்டிலேயே உடற்பயிற்சி,நடைப்பயிற்சி உடல் எடை குறைய முக்கியப் பங்கு வகிக்கிறது.யோகா செய்வதும் கொழுப்பு சேர்வதைத் தடுத்து உடலை வடிவாக்குகிறது.
10. கடைகளில் வாங்கும் தின் பண்டங்களை உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில்
உண்பதைத் தவிர்க்கவும்.
11. உப்பு, மற்றும் சர்க்கரையை மிதமாக உபயோகிக்கவும்.
என்னடா இத்தனை வழியில் எதைப்பின்பற்றுவது என யோசிக்கிறீர்களா? இவற்றில் எதாவது சிலவற்றைக் கடைப்பிடித்தாலே போதும்!
நீடு வாழ்க!நலமே சூழ்க!
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக