![]() |
கடுக்காய் பயன்கள்:
சித்த , ஆயுர்வேதமருத்துவத்தில் கடுக்காயின் பயன்கள் அநேகம்.
கடுக்காய் ஒரு காயகல்ப மருந்து என சொல்கிறார்கள்.கடுக்காய் நம் உடல் உறுப்புகளிலுள்ள ராஜ உறுப்புகளைஅதாவது, இதயம், சிறுநீரகம்,ஈரல், நுரையீரல் நரம்பு மண்டலம், ரத்த மண்டலம்,செரிமான மண்டலம் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால் கடுக்காயை தினமும் எடுத்துக்கொள்ளலாம்.
கடுக்காயின் பழமொழிகள்:
கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்!
ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய்
இனம் பிள்ளைதாய்ச்சிக்கு ஏழு கடுக்காய்
கடுக்காய் தாய்க்கு அதிகம் காண் நீ - கடுக்காய் நோய்
ஓட்டி உடல் தேற்றும் உற்ற அன்னையே சுவைகள்
ஊட்டி உடல் தேற்றும் உவந்து'
தாயைவிட சிறந்தது என்று பதார்த்தகுண சிந்தாமணி நூல் கூறுகிறது.
கடுக்காயை கடுக்காய் பொடி, லேகியம், கடுக்காய் பொடி, கடுக்காய் பற்பம் என பல வகைகளில் எடுக்கலாம்.
"கடுக்காய்க்கு அகம் நஞ்சு"கடுக்காய் உள்ளிருக்கும் கொட்டையை எடுத்துவிட்டு அதன் தோலை மட்டும்தான் உபயோகிக்க வேண்டும்.
அல்சர் பிரச்சினை இருப்பவர்கள் கடுக்காய் பொடியை தொடர்ந்து எடுத்துவர அல்சர் குணமாகும்.குடல் சார்ந்த பல நோய்களை போக்குகிறது.
கடுக்காய் பொடி நீரல் கொதிக்கவைத்துக் குடித்தால் கெட்ட கொழுப்புகளை அகற்றும். இதய நலத்தை பாதுகாக்கும்.
மூன்று கடுக்காய்த் தோல்களுடன் தேவையான அளவு இஞ்சி, மிளகாய், புளி, உளுந்து சேர்த்து நெய்யில் வதக்கி உப்பு சேர்த்து துவையலாக அரைக்கவும். இதைச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டுவந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும்; மலச்சிக்கல் விலகும்; உடல் பலம் பெறும்.
இப்படிப் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் கடுக்காய், உடல் பலவீனத்தைப் போக்கும்; ஆண்களின் உயிரணு குறைபாடுகளை நீக்கி என்றும் இளமையான தோற்றத்தைத் தரும்.
கடுக்காய் கொட்டையை நீக்கிட்டு முறைப்படி சுத்தம் செஞ்சு மேல்தோலை மட்டும் இடிச்சு சலிச்செடுத்து சாப்பிடலாம்.
கால் ஸ்பூன் கடுக்காய் பொடியில 1 டம்ளர் தண்ணி விட்டு அதை 50மில்லியா வற்ற வைத்து குடித்து வந்தால், கண் சம்பந்தமான நோய்களும் சர்க்கரை நோயும் கட்டுப்படும். கடுக்காய் பொடியோட அதே அளவு நெய்விட்டு வறுத்து, இந்து உப்புடன் சேர்த்து 2கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சரியாகும்.
பச்சை கடுக்காயை கொட்டையை நீக்கி முறையா சுத்தம்செஞ்சு பாலில் அரைச்சு சாப்பிட்டா இருமல் இறைப்பு, வறட்டு இருமல், இரத்தமும் சீழுமா போகும் வயித்துக்கடுப்பெல்லாம் நீங்கும்.
கடுக்காய்ப் பொடியைக்கொண்டு பல் துலக்கினால், ஈறு வலி குணப்படுவதோடு ஈறில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்; பல்லும் உறுதியாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக