வெள்ளி, 13 டிசம்பர், 2024

சைவ உணவின் மேன்மைகள்

 சைவ உணவு என்றால் என்ன:

        சைவ உணவு என்பது தாவரங்களிலிருந்து பெறப்படும் உணவாகும்.இறைச்சி உணவைத் தவிர்ப்பதே சைவ உணவின் நோக்கமாகும். காய்கறிகள், பழங்கள், இலைகள், கொட்டைகள், தானியங்கள், விதைகள், தண்டுகள் ஆகியவை தாவரத்திலிருந்து பெறப்படும் உணவுகள் சைவ உணவுகள் ஆகும்.

         சைவ உணவு என்பது மிக ஆரோக்கியமானது மட்டுமில்லாமல் அசைவ உணவுகளைவிட அரிதான சத்துக்களைக் கொண்டதாக இருக்கிறது.



பெறப்படும் சத்துகள்:

        உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றல் பழச்சாறுகளிலிருந்து கிடைக்கிறது.பசலைக்கீரை, முருங்கைக்கீரை, மற்றும் அநேக கீரை வகைகள் இரும்புச்சத்தை அதிகரிக்க உதவுகின்றன.

        பருப்பு வகைகளில் மேம்பட்டபுரதம் இருக்கிறது.காய்கறிகளில் தாது உப்புக்களும், வைட்டமின்களும் இருக்கிறது.

        அரிசி,  கோதுமை,சிறு தானியங்களான கம்பு, கேழ்வரகு, சோளம், தினைமுதலியவற்றில் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து இருக்கிறது. 

        சைவ உணவானது நோய்த்தாக்கம் கொண்டவர்கள் விரைவில் மீண்டெழவும், நீரிழிவு நோய், உடல் பருமன், புற்றுநோய்,இதய நோய், உயர் ரத்த அழுத்தம்,இதய நோய், உடல் எடை அதிகம் போன்றவற்றின் தீவிரத்தைக்குறைத்து வாழ்நாளை நீட்டிக்க உதவுகிறதென்று பல ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

        சைவ உணவுக்கான ஆர்வமும் உந்துதல்களும் ஆரோக்கியம், கலாச்சாரம், நோய்த்தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்க்கு மற்றும் தனிப்பட்ட மனிதரின் விருப்பங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையவை.

        சைவ உணவு சில வகைகளாக வேறுபட்டவையாக இருக்கின்றன.சிலர் முட்டையுடன் சேர்ந்த சைவ உணவுகளைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். சிலர் பால் பொருட்கள் முட்டை இவை சேர்த்த சைவ உணவைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள்.

         மேற்கத்திய நாடுகளிலும் பலர் சைவ உணவு முறையைப் பின்பற்றுகிறார்கள்.

         2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலகளாவிய ஆய்வில் சைவ உணவு வாழ்நாளை அதிகரிக்கச்செய்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.சித்த மருத்துவத்தில் நோய் தாக்கம் இருப்பவர்கள் மருந்து எடுத்துக்கொள்ளவும், மருந்துகள் வேலை செய்யவும்,நோய் தீவிரமடையாமல் இருப்பதற்காகவும் சிகிச்சை காலத்தில் சைவ உணவே பரிந்துரைக்கப்படுகிறது.

         உடலுக்குத் தேவையான சில சத்துக்கள் சைவ உணவுகளில் குறைவாகவே இருக்கிறது.கால்சியம், இரும்புச்சத்து முதலியவே இறைச்சி உணவுகளில்தான் செறிந்துள்ளவையாக இருக்கிறது. அதற்குத் தகுந்தாற்போல் சைவ உணவு உண்பவர்கள்  சைவ உணவை அட்டவணைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

        சைவ உணவு உண்பவர்கள் இயற்கை  முறையில் விளைவிக்கப்பட்டஉணவு உண்பது மிக நல்லது.

        சைவ உணவுகளில் அதிக நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்பிச்சினைகளை தணிக்கிறது.

         சைவ உணவு என்பது மனிதர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் முக்கியமான பங்கு வகிக்கிறது.. இது நல்ல ஆரோக்கிய வாழ்க்கைத் தரத்தை  உருவாக்குவதோடு, உலக அளவிலான மாசுபாட்டை குறைக்கும் ஒரு வழியாகவும் விளங்குகிறது. 

முடிவுரை:

          ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் நீண்டகால நன்மைகளை அடைய, நம்முடைய அன்றாட உணவில் சைவ உணவுகளை அதிகமாகச் சேர்க்க வேண்டும். சைவ உணவுகள் மட்டுமே ஒருவரின் உடல், மனம், மற்றும் உலகத்தின் ஆரோக்கியத்தை ஒரே நேரத்தில் மேம்படுத்தும் சக்தி கொண்டவை.தியானம் மற்றஉம் யோகா முதலியவற்றைக் கடைப்பிடிக்கும் மனிதர்கள் சைவ உணவினை உயர்ந்ததாகக் கருதுகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக