ஞாயிறு, 22 டிசம்பர், 2024

கற்பூரவல்லி இலை பயன்கள்

 

கற்பூரவல்லி  இலையின் பயன்கள் :

கற்பூரவல்லியின் அறிவியல் பெயர்:Coleus amboinicus

ஆப்பிள் பழத்தைவிட நாற்பது மடங்கு ஆன்டிஆக்சிடண்ட் சத்துக்களைக் கொண்ட இலை என நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

குழந்தை மருத்துவத்தில் இது பெரும் பங்கு வகிக்கிறது.

துளசிச்செடியைப்போன்றே பலர் வீடுகளிலும் இந்தச்செடி வளர்க்கப்படுகிறது.

கற்பூரவல்லியின் பயன்கள் எண்ணற்றவை. பல கப நோய்களுக்கு ஆபத்பாந்தவனாய் செயல்படுகிறது. சளி, கபம், வறட்டு இருமல் ,நுரையீரல் ஆஸ்த்துமா,மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டைக்கட்டு  போன்ற கப நோய்களுக்கு கற்பூரவல்லி இலையை உபயோகிக்கலாம்.

உயர் ரத்த அழுத்தம், வாந்தி, குமட்டல்,அஜீரணம் , வாயுத்தொல்லை, புற்றுநோய்க்கட்டிகளை கரைத்தல்,தோல் நோய்கள், பூச்சிக்கடி,  போன்ற பிரச்சினைகளுக்கும் இந்த இலை உதவுகின்றது.

பலூட்டும் தாய்மார்களுக்கு பால்சுரப்பை அதிகப்படுத்தவும் கற்பூரவல்லி பயன்படுகிறது.

கற்பூரவல்லி இலைகளில் வைட்டமின் சி, ஏ, பி6 , இரும்புச்சத்து ,மெக்னீஷியம், கால்சியம் சோடியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.இந்தச் செடி இந்திய க்ளைமேட்டுக்கு மட்டுமே வாழ்ந்திருக்கும்.

மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் இந்த இலை மிகவும் பயன்படுகிறது.இது கொசு விரட்டியாக பயனஅபடுகிறது, இதிலிருந்து பல விதமானஎண்ணெய்கள் எடுத்தாலும் தைமோல்,கார்வக்ரால் என்ற இரு வகை எண்ணெயும் மிகுந்த உபயோகத்தில் இருக்கின்றன. பாக்டீரியா தொற்றுக்கு எதிராக வேலை செய்கிறது.பூஞ்சைக்கு எதிராகவும் போராடுகிறது.வைரஸ் நோய்களுக்கு ஆரம்பக்கட்ட குணமாக்கும் வேலையை செய்கிறது. வாய் கொப்பளிக்கும் மௌத்வாஷ் திரவங்களில் பயன்படுத்தப்படுகிறது.

இனி இதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் எனப் பார்ப்போம்.:

கற்பூரவல்லியை வாட்டி சாறு எடுத்து சிறதளவு வெல்லம் சேர்த்து நெற்றியில் பூசினால் தலைவலி நீங்கும்.

தினசரி நான்கு இலைகளை மென்று சாப்பிட்டாலே ஒரு ஆப்பிள் சாப்பிட்ட சத்து கிடைக்கும்.இலைகளை பச்சையாகசாப்பிடக்கூடாது.

பித்தப்பை கற்களை கரைக்கவும் உதவுகிறது. இது கடைகளில் சூரணமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இலைகளை வாட்டியே உபயோகிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு அதிக சளி இருந்தால் கற்பூரவல்லி இலைகளை வாட்டி சாறு எடுத்து தேன் கலந்து20 மில்லி கொடுத்தால் முதல் முறையிலேயே சளித் தொந்தரவு நெகுவாகக் குறைந்திருப்பதைக் காணலாம்.

 குழந்தைகளும் பெரியவர்களும் சுறுசுறுப்பாக இருக்கவும் இந்த இலைகள் உதவுகிறது.

கற்பூரவல்லியை டீயாக செய்தும் அருந்தலாம்.கைகால் வலி, முதுகு வலி சரியாகும். வாயுத்தொல்லை சரியாகும்.

கற்பூரவல்லி டீ:

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். அதில் மஞ்சள்பொடி ஒரு சிட்டிகை, நான்கைந்து துண்டுகளாக்கப்பட்ட கற்பூரவல்லி இலைகள் , டீத்தூள் ஒரு ஸ்பூன் சேர்க்கவும் 4 மிளகு, இஞ்சி சுண்டைக்காய் அளவு சேர்க்கவும்.எல்லாம் நன்கு கொதித்து வந்தபின் கடைசியில் பால் சேர்க்கவும்.இதை தினமும் குடிக்கலாம். நீதவிலக்குக்காலங்களில் குடித்தால் உபாதைகள் இருக்காது.தொடர்ந்து இந்த டீ குடித்தால் தொப்பையைக் குறைக்கும்.

ஆஸ்துமா தொல்லை இருப்பவர்கள் இலையை வாட்டி சாறு எடுத்து இஞ்சி சாறு ,2 சிட்டிகை மிளகுப்பொடி சேர்த்து குடித்தால் படிப்படியாக குணமாகும்.

கற்பூரவல்லியை பஜ்ஜியாகவும் செய்து சாப்பிடலாம்.வாழைக்காய்க்கு பதிலாக கற்பூரவல்லி இலையை மாவில் தோய்த்து பஜ்ஜியாகச் சுடலாம்.

கற்பூரவல்லியை மிட்டாயாக செய்து வைத்துக்கொண்டு குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். 

கற்பூரவல்லி ரசம் செய்தும் சாப்பிடலாம்.

கற்பூரவல்லி சட்னி செய்தும் சாப்பிடலாம்.

கற்பூரவல்லிக்கு எதிர்மறை சக்தியை விரட்டக்கூடிய சக்தி இருப்பதால் வீட்டில் தொட்டியில் வளர்க்கலாம். காற்றை சுத்தப்படுத்தும் பண்பும் இதற்கு உண்டு.

சனி, 21 டிசம்பர், 2024

கடுக்காய் பலன்கள்



கடுக்காய் பயன்கள்:

சித்த , ஆயுர்வேதமருத்துவத்தில் கடுக்காயின் பயன்கள் அநேகம்.

கடுக்காய் ஒரு காயகல்ப மருந்து என சொல்கிறார்கள்.கடுக்காய் நம் உடல் உறுப்புகளிலுள்ள ராஜ உறுப்புகளைஅதாவது, இதயம், சிறுநீரகம்,ஈரல், நுரையீரல் நரம்பு மண்டலம், ரத்த மண்டலம்,செரிமான மண்டலம் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால் கடுக்காயை தினமும் எடுத்துக்கொள்ளலாம்.

கடுக்காயின் பழமொழிகள்:

கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்!

ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய்
இனம் பிள்ளைதாய்ச்சிக்கு ஏழு கடுக்காய் 

கடுக்காய் தாய்க்கு அதிகம் காண் நீ - கடுக்காய் நோய்
ஓட்டி உடல் தேற்றும் உற்ற அன்னையே சுவைகள்
ஊட்டி உடல் தேற்றும் உவந்து' 

தாயைவிட சிறந்தது என்று பதார்த்தகுண சிந்தாமணி நூல் கூறுகிறது.

கடுக்காயை கடுக்காய் பொடி, லேகியம், கடுக்காய் பொடி, கடுக்காய் பற்பம் என பல வகைகளில் எடுக்கலாம்.

"கடுக்காய்க்கு அகம் நஞ்சு"கடுக்காய் உள்ளிருக்கும் கொட்டையை எடுத்துவிட்டு அதன் தோலை மட்டும்தான் உபயோகிக்க வேண்டும்.

அல்சர் பிரச்சினை இருப்பவர்கள் கடுக்காய் பொடியை தொடர்ந்து எடுத்துவர அல்சர் குணமாகும்.குடல் சார்ந்த பல நோய்களை போக்குகிறது.

கடுக்காய்  பொடி நீரல் கொதிக்கவைத்துக் குடித்தால் கெட்ட கொழுப்புகளை அகற்றும். இதய நலத்தை பாதுகாக்கும்.


மூன்று கடுக்காய்த் தோல்களுடன் தேவையான அளவு இஞ்சி, மிளகாய், புளி, உளுந்து சேர்த்து நெய்யில் வதக்கி உப்பு சேர்த்து துவையலாக அரைக்கவும். இதைச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டுவந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும்; மலச்சிக்கல் விலகும்; உடல் பலம் பெறும்.
இப்படிப் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் கடுக்காய், உடல் பலவீனத்தைப் போக்கும்; ஆண்களின் உயிரணு குறைபாடுகளை நீக்கி என்றும் இளமையான தோற்றத்தைத் தரும். 

கடுக்காய் கொட்டையை நீக்கிட்டு முறைப்படி சுத்தம் செஞ்சு மேல்தோலை மட்டும் இடிச்சு சலிச்செடுத்து சாப்பிடலாம். 

கால் ஸ்பூன்  கடுக்காய் பொடியில 1 டம்ளர் தண்ணி விட்டு அதை 50மில்லியா வற்ற வைத்து குடித்து  வந்தால், கண் சம்பந்தமான நோய்களும் சர்க்கரை நோயும் கட்டுப்படும். கடுக்காய் பொடியோட அதே அளவு நெய்விட்டு வறுத்து, இந்து உப்புடன் சேர்த்து 2கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சரியாகும்.

பச்சை கடுக்காயை கொட்டையை நீக்கி முறையா சுத்தம்செஞ்சு பாலில் அரைச்சு சாப்பிட்டா இருமல் இறைப்பு, வறட்டு இருமல், இரத்தமும் சீழுமா போகும் வயித்துக்கடுப்பெல்லாம் நீங்கும். 

கடுக்காய்ப் பொடியைக்கொண்டு பல் துலக்கினால், ஈறு வலி குணப்படுவதோடு ஈறில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்; பல்லும் உறுதியாகும்

 
கடுக்காய்ப் பொடியை 2 கிராம், தண்ணீருடன் மாலையில் அருந்திவந்தால், மஞ்சள் காமாலை நோய் நீங்கும். மேலும், ரத்தக் குறைவு, கை  கால் எரிச்சல், தோலின் வெண் புள்ளிகள் ஆகியனவும் குணமாகும்.

கடுக்காய் தினமும் இரவில் எடுத்துக்கொண்டால் கர்பப்பையில் கட்டிகள் , அதிக ரத்தப்போக்கு,வலி, வெள்ளைப்படுதலை போக்கும்.புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

திரிபலா என்னும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவை மூன்றும் சேர்த்த சூரணத்தை எடுத்துக்கொண்டாலும் கண் பிரச்சினைகள், அல்சர், அஜீரணம் போன்ற பிரச்சினைகளைச் சரியாக்கும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
சிறிநீரகக் கல் ஏற்படாமல் தடுக்கிறது.சிறுநீரைப்பெருக்கி கழிவுகளை வெளியேற்றுகிறது.கடுக்காய் தினமும் எடுக்க கல்லீரல் பிரச்சினைகள் சரியாகும்.கொழுப்பைக்கரைக்கிறது,குழந்தையின்மையைப் போக்குகிறது.கட்டிகளைக் கரைக்கிறது.

எத்தனைநாள்சாப்பிட்டாலும் பக்கவிளைவுகள் வராது.அறுசுவையும் நிறைந்த ஒரே மூலிகை கடுக்காய்.

ஆண்களுக்கு ஆண்மைத்தன்மையை அதிகரிக்கிறது.விந்து வீரியம் கிடைக்கிறது.

இத்தனையும் செய்யும் கடுக்காய் வெளிப்புற அழகிலும் அற்புதமாகப் பயன்படுகிறது.

முகத்திலுள்ள கருந்திட்டுக்கள் மறைய கடுக்காயை உரைத்துப் பூசவும்
பத்து நாட்கள் தொடர்ந்து பூசும்போது கருமை மறையும்.பாலுடன் சேர்த்துப் பூசினால் சருமம் பொலிவாகிறது.நிறம் கூடும். 

தலைக்கு ஆலோவேரா ஜெல்லுடன் கடுக்காய் பொடி சேர்த்துப்பூசும்போது தலமுடி மல்ல ஆரோக்கியமாகிறது.பொடுகு மற்றும் தோல் நோய்கள் குணமாகிறது.தேங்காய் எண்ணெயில் கடுக்காயைச் சேர்த்துக்காய்ச்சி தேய்க்கும்போது முடி கருமை நீடிக்கிறது.இளநரை மறைகிறது.மருதாணி, அவுரியுடன் கடுக்காயையும் சேர்த்த இயற்கை சாயம் முடிகளில் நன்கு அமைந்து கருமையைத் தருகிறது.

கடுக்காய் உபயோகித்து அனைவரும் பயன்பெறுவீர்!

                              நலம் பெறுக !வளம் பெறுக!

 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 



புதன், 18 டிசம்பர், 2024

வீட்டுப்பராமரிப்பு(home maintenance)




வீட்டுப் பராமரிப்பு:

      உங்கள் வீடு பாதுகாப்பாகவும், பயனுள்ளதாகவும், அதன் மதிப்பைத் தக்கவைத்துக்கொள்ளவும் வீட்டு பராமரிப்பு அவசியம். வழக்கமான பராமரிப்பு, அதிகச் செலவு ஏற்படுத்தும்  பழுதுகளைத் தடுக்கவும், பராமரிப்பு கட்டணங்களைக் குறைக்கவும், வசதியான வாழ்க்கை சூழலை உருவாக்கவும் உதவும். 

வீட்டு பராமரிப்பு பற்றிய விரிவான அறிமுகம் இங்கே:

வீட்டு பராமரிப்பு ஏன் முக்கியம்.

1. அதிக செலவு வைக்கும் பழுதுகளைத் தடுக்கிறது_: 

வழக்கமான பராமரிப்பு, அவை பெரிய பிரச்சனைகளாக மாறுவதற்கு முன், ஆரம்ப கட்டத்திலேயே  சிக்கல்களைக் கண்டறிய உதவுகிறது.

2. ஆற்றல் மற்றும் பணத்தைச் சேமிக்கிறது_: உங்கள் வீட்டின் அமைப்புகள் மற்றும் உபகரணங்களைப் பராமரிப்பது ஆற்றல் நுகர்வு மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்களைக் குறைக்க உதவும்.

3. சுகாதாரமாகவும், பதட்டமில்லா மகிழ்ச்சியான வாழ்வு வாழ உதவுகிறது.

உபகரணங்களைப் பராமரிப்பது :

 குளிர்சாதனப்பெட்டி(ப்ரிட்ஜ்) 
                மாதமொரு முறை உளஅளிருக்கும் பொருட்களை எடுத்துவிட்டு பேக்கிங் சோடா கரைத்த நீரில் சுத்தம் செய்யவும். இதனால் கெட்டுப்போன பொருட்களை அப்புறப்படுத்திவிட்டு புதிய பொருட்களை வைப்பதால் உடல் நலத்திற்கு கேடு வராமல் குளிர்சாதனப்பெட்டியும் பழுதடையாமல் நீண்ட நாட்களுக்கு பாதுகாக்கலாம். அதிகமாக ஐஸ் கட்டிகளாக உறைந்து மூடமுடியாமல் இருப்பது போன்ற பிரச்சினைகளையும் தடுக்கலாம். இதனால் மின்கட்டணம் உயராமல் சேமிக்கலாம்.

குளிரூட்டும் பெட்டி(ஏ.சி )
         இதனை மாதமொருமுறை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். இதில் தூசுகள் சேர்வதால் நுரையீரல் பிரச்சினைகள், ஆஸ்மா,நெஞ்சு சளி முதலிய பிரச்சினைகள் ஏற்படும். எனவே ஏ.சி சுத்தம் மிக அவசியம்.

அடுப்பு:  
       சமையல் உபயோகம் முடிந்தவுடன் அடுப்பை உடனே சுத்தம் செய்து வைக்க வேண்டும். தூசுகள் , உணவுகள், பால் பொங்கி வழிதல் போன்றவை இல்லாமல் கவனமாக சமைத்தால் அடுப்பு சுடர் (Flame) நன்றாக எரியும். சமைக்கும் நேரமும் மிச்சமாகும்.




மிக்ஸி, கிரைண்டர்
           போன்ற சாதனங்கள் உபயோகித்த உடனேயே சுத்தம் செய்து தூசுகள் விழாமல் உறை போட்டு வைக்க வேண்டும். கொளஅளலவுக்கு அதிகமான பொருட்களைப்போட்டு அரைப்பதால் பளு அதிகமாகி பழுதாக நேரிடலாம்.
அதனால் கவனமாகக் கையாள வேண்டும்.

கம்ப்யூட்டர் மற்றும் இது போன்ற உபகரணங்களை சோம்பலில்லாமல்  தூசு தட்டி வைப்பதால் விரைவில் பழுதாக நேரிடாது.


தொடர் பராமரிப்பு பாதுகாப்பை உறுதி செய்கிறது:.                                              அட்டவணையிட்ட தொடர்  பராமரிப்பு, தவறான மின் வயரிங் அல்லது கசியும் எரிவாயு குழாய்கள் போன்ற சாத்தியமான பாதுகாப்பு அபாயங்களை அடையாளம் காண முடியும்.

சொத்து மதிப்பைப் பாதுகாக்கிறது : வீட்டின் சுவர்கள், ஜன்னல்கள்,சீலிங்குகள் முதலியவை 3  அல்லது 6 மாதங்களுக்கொருமுறை கட்டாயம் பராமரிக்கப்பட வேண்டும். நன்கு பராமரிக்கப்படும் வீடுகள் அவற்றின் மதிப்பைத் தக்கவைத்துக்கொள்வதோடு, காலப்போக்கில் மதிப்பையும் பெறுகின்றன.
நீண்ட நாட்களுக்கு மகிழ்ச்சியாக பயனஅபடுத்தும் வகையில் அமைகின்றன.

வீட்டுப் பராமரிப்பின் முக்கிய பகுதிகள்:

1.Plumbing: கசிவுகளைச் சரிபார்க்கவும், வாட்டர் ஹீட்டர்களை ஆய்வு செய்யவும் மற்றும் கழிவுநீர் அமைப்புகளைப் பராமரிக்கவும்.

2. Electrical: சர்க்யூட் பிரேக்கர்கள், அவுட்லெட்டுகள் மற்றும் லைட்டிங் சாதனங்களை ஆய்வு செய்யுங்கள்.

3. HVAC: வெப்பமாக்கல், காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் அமைப்புகளைப் பராமரிக்கவும்.

4. கூரை: சேதமடைந்த அல்லது காணாமல் போன கூழாங்கற்களை ஆய்வு செய்தல் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்தல்.

5. பூச்சிக் கட்டுப்பாடு: கரையான்கள் அல்லது கொறித்துண்ணிகள் போன்ற பூச்சிகளின் அறிகுறிகளைத் தவறாமல் பரிசோதிக்கவும். 

6. உபகரணங்கள்: தேவைக்கேற்ப உபகரணங்களை பராமரித்து மாற்றவும்.

7. தீ பாதுகாப்பு: வேலை செய்யும் ஸ்மோக் டிடெக்டர்களை உறுதிசெய்து தீயை அணைக்கும் கருவிகளைப் பராமரிக்கவும்.

8. முற்றம் மற்றும் நிலப்பரப்பு: புல்வெளி, மரங்கள் மற்றும் தோட்டங்களை பராமரிக்கவும்.

கண்ணாடி விரிசல்கள், தளர்ந்த கதவு,ஜன்னல்கள்,தளர்ந்த பிடிகளை உடனே சரி செய்யவும்.

வீட்டு பராமரிப்பு அட்டவணையை உருவாக்குதல்:

1. மாதம் ஒருமுறை: காற்று வடிப்பான்களைச் சரிபார்த்து மாற்றவும், பிளம்பிங் சாதனங்களை ஆய்வு செய்யவும் மற்றும் புகை கண்டறிதல்களை சோதிக்கவும்.

2. காலாண்டுக்கு: சாக்கடைகளை ஆய்வு செய்து சுத்தம் செய்தல், சேதமடைந்த சிங்கிள்களுக்கான கூரையைச் சரிபார்த்தல் மற்றும் HVAC அமைப்புகளைப் பராமரித்தல்.

3. ஆண்டுக்கு இருமுறை: தீயை அணைக்கும் கருவிகளை பரிசோதித்து மாற்றவும், மின் அமைப்புகளைச் சரிபார்க்கவும்.

4. ஆண்டுதோறும்: உபகரணங்களை பரிசோதித்து பராமரித்தல் மற்றும் ஒரு விரிவான வீட்டு ஆய்வு.

கூடுதல் குறிப்புகள்:

1. ஒவ்வொரு பராமரிப்பையும் பதிவு செய்யுங்கள்:
              முன்னேற்றத்தைக் கண்காணிக்க மற்றும் சாத்தியமான சிக்கல்களைக் கண்டறிய அனைத்து பராமரிப்பு நடவடிக்கைகளையும் பதிவு செய்யவும்.

2. பராமரிப்புக்கான பட்ஜெட்: வழக்கமான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பதற்காக உங்கள் பட்ஜெட்டில் ஒரு பகுதியை ஒதுக்கவும்.

3.சுய பராமரிப்பு அல்லது பணியாட்கள்மூலம்:
பணிகளை நீங்களே எப்போது சமாளிக்க வேண்டும் மற்றும் ஒரு நிபுணரை எப்போது பணியமர்த்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

கோடை காலத்திற்கு முன்பே ஏ.சி, ப்ரிட்ஜ், காற்றாடி போன்றவற்றை பழுது பார்த்துக் கொள்ளவும்.
குளிர் காலத்திற்கு முன்பே ஹீட்டர்கள் முதலியவற்றை பராமரிக்கவும்
ஒவ்வொரு மழைக்காலத்துக்கு முன்பு மாடியில் ஏதேனும் குழாயடைப்பு இருக்கிறதா என்று பரிசோதிக்கவும்.மழைக்காலம் முடிந்தவுடன் கூரையில் எங்கேனும் நீர்க்கசிவு இருக்கிறதாஎன்று பரிசோதித்துச் சரி செய்யவும்.மழைக்குப்பின் சுவர்களுக்கு வண்ணப்பூச்சு முதலியவை செய்து பராமரிக்கவும்.

மின்சாரம் மிச்சமாக  LEDமின் விளக்குகள் உபயோகிக்கவும். சுத்தம் செய்யும் திரவம், சோப்புகள் முதலியவை ரசாயனமில்லாமல் கைகளுக்கும் உடலுக்கும் தீங்கிழைக்காமல் இருப்பவையா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.இவை சுற்றுச் சூழலுக்கும் நன்மை பயப்பவை.

வீட்டு பராமரிப்புக்கான இந்த அறிமுகத்தைப் பின்பற்றுவதன் மூலம், பாதுகாப்பான, திறமையான மற்றும் நன்கு பராமரிக்கப்பட்ட வீட்டை உருவாக்குவதற்கான உங்கள் வழியில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

செவ்வாய், 17 டிசம்பர், 2024

குளிர்கால சருமப் பராமரிப்பு(இயற்கை முறையில்)

 


குளிர்கால சருமப் பராமரிப்பு:(winter Skin Care):

        
       குளிர்காலத்தில் நம் தோல் குளிர் அல்லது பனிக்காற்றினால்(காற்றில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பதால் தோலில் உள்ள ஈரம் காற்றுடன் கலந்து) வறண்டு கருத்து பாளம் பாளமாக வெடித்து ரத்தக்கசிவு கூட ஏற்பட்டு விடுகிறது. 
      இதனால் தோல் அரிப்பு ஏற்பட்டு சில சமயம் சொறிந்து கொள்வதால் கூட ரத்தக் கசிவு ஏற்படும்.தழும்புகளாகக்கூட மாறலாம்அந்த அளவுக்கு தோல் பாதிப்பு அடையாமல் நாம் சில வழிமுறைகளைப் பின்பற்றி தோலை முடிந்த அளவு இயல்பாக வைக்க முயற்சி செய்யலாம்.

குளிர்காலச் சருமம் எப்படி இருக்கும்?

உலர்ந்த காற்றினால் ஈரப்பதம் இன்றி வறண்டு காணப்படும்.

உள்ளங்கைகள் சொரசொரப்பாக மென்மையை இழந்து காணப்படும்.

உலர்ந்த தோல் தேய்த்தால் வெண்மையாக செதில்போல் உதிரும்.

தோலைக் கீறினால் சருமத்தில் வெண்மையாகக்கோடு விழும்.

சருமம் நிறம் மங்கி சற்றே கருத்துவிடும்.

அரிப்பும் எரிச்சலும் இருக்கும்.

ஒவ்வொரு பருவ காலத்திலும் தோல் அதற்கேற்றார்போல் மாறவும் பாதிப்படையவும்  செய்கிறது.

என்ன செய்யலாம்? பாதுகாப்பது எப்படி?
   
      ஓட்ஸை மாவாக்கி அதனுடன் பாலும் சிறிது தேனும் கலந்து மென்மையாக சருமத்தில்  தேய்க்கலாம்.

     அவகேடோ பழத்தை மசித்து பேக் போடலாம்.வாழைப்பழத்தை மசித்து பேக் போடலாம்.

      பாலாடை ஒரு கரண்டி அதனுடன்  பன்னீர் 1 ஸ்பூன் ,எலுமிச்சைச்சாறு 1 ஸ்பூன் சேர்த்து நன்கு கலக்கி முகம், கைகள், கால்கள் முதலிய இடத்தில் பூசலாம்.

      ஷியா பட்டர், தேங்காய் எண்ணெய்,பாதாம் எண்ணெயில் செய்யப்பட்ட மாய்ஸ்ச்சரைசிங்  நைட்க்ரீம்களை உடல் முழுவதும் பூசி வறட்சியை நீக்கலாம்.

     வாரத்திற்கு ஒருமுறை  காபி மற்றஉம் சர்க்கரை  சேர்த்த ஸ்க்ரப்பிங் க்ரீம்கள் உபயோகிக்கலாம்.கோகோ பட்டர், வாசலின் ஜெல்லி போன்றவறஅறைப் பயன்படுத்தி சருமத்தை மென்மையாக்கலாம்.

வெள்ளரிக்காய் அரைத்து கிளிரிசனுடன் கலந்து பேக் போடலாம்.

இவை சருமத்திலுள்ள இறந்த செல்களை நீக்கி புதுப்பிக்கின்றன.




குளிப்பதற்கு சோப்புகள் தேவையா?

       சூடான நீரில் ஷவரில் அதிக நேரம் குளிப்பதைத் தவிர்க்கவும். இது எண்ணெயப்பசையை முற்றிலும் நீக்கும். குளிர்காலத்தில் மட்டும் சிறப்பு பேக்குகள், தேங்காயெண்ணெயில் மட்டும் செய்த சிறப்பு சோப்புகளை உபயோகிக்கவும்.கெமிக்கல் கொண்ட சோப்புகள்,பேஸ்வாஷ் பயன்படுத்தாதீர்கள்.இவை இன்னும் சருமத்தை வரளச் செய்துவிடும்.

      பாசிப்பயறு மாவு அல்லது கடலைமாவு தயிர் சேர்த்த கலவை .இது மிகச்சிறப்பான சருமத்தைப் பேணக்கூடியது.தோலில் எண்ணெய்ப்பசைசைத் தக்க வைத்துக்கொண்டு அழுக்கை மட்டும் நீக்கும் சிறந்த முறை இது.

     நாட்டு மருந்துக் கடைகளில் நலுங்குமாவு என்ற வாசனைப்பொடி விற்பார்கள்.இதனுடன் கடலை மாவு சேர்த்து தேய்த்துக்குளித்தால் சருமம் சுருக்கங்களின்றி இளமையாகவும், மென்மையாகவும் இருக்கும்.

     சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைத்து  உதவி செய்வதில் கிளிசரின் பெரும் பங்கு வகிக்கிறது.பாதாம் ஆயிலில் கிளிசரினை சேர்த்துத் தடவலாம்.
பன்னீரில் கிளிசரினை சேர்த்துத் தடவலாம்.கற்றாழை ஜெல்லுடன் சேர்த்துத்தடவலாம்.பழ பேக்குகளுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

    நல்லெண்ணெயை மிதமான சூடாக்கி கை,கால் விரல்கள், பாதங்களில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.முகத்தில் வெதுவெதுப்பான எண்ணெயை விரலில் தொட்டு புள்ளி புள்ளியாக வைத்து கழுத்திலிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்ய வெண்டும் இதை பத்து பதினைந்து முறை செய்யவேண்டும். நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும் கழுத்திலுள்ள சுருக்கங்கள் மறையும்.கடலைமாவு தயிர் சேர்த்த கலவை கொண்டு கழுவலாம்.


உள்ளங்கைகள்:
     உள்ளங்கைகள் சொரசொரப்பைத் தடுக்க கிளிசரினுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு தேய்க்கவும்.அப்படியே சிறிது நேரம் விட்டுவிடவும்.இனி மென்மையான கைகள் உங்களுக்கு மட்டுமே சொந்தம்..

உதடுகள்:
      இரவு படுக்கைக்குச்செல்லும்போது விளக்கெண்ணெய் தடவலாம்.பசு வெண்ணெய் தடவலாம்.தேங்காய்  எண்ணெயுடன் ஒரு சொட்டு விட்டமின் ஈ ஆயில் கலந்து தடவலாம்.

குதிகால் வெடிப்பு:
       குதிகால் வெடிப்பு குளிர்காலத்தில் தவிர்க்க முடியாதது. இதற்கு குதிகாலை வெந்நீரில் சோப்புப்போட்டு  நன்கு கழுவி துடைத்து விளக்கெண்ணெயில் மஞ்சள் பொடி சேர்த்துக் கலக்கி  பூசி சிலிகான் சாக்ஸை அணிந்து கொள்ளவும். பத்தே நாட்களில் மொழுமொழுவென்ற குதிகால் உங்களுக்கே!

குழந்தைகளுக்கு:
     குழந்தைகளுக்கு உடல் மூடும்படி ஆடை அணியவும்.குழந்தைகளுக்கு தேங்காயெண்ணெய் மசாஜ் செய்து,  நலங்குமாவுடன் கடலை மாவு சேர்த்த கலவை உபயோகிக்கலாம்.சோப் தவிர்க்கவும்.











திங்கள், 16 டிசம்பர், 2024

தலைமுடிப் பராமரிப்பு


தலைமுடியை எப்படி ஆரோக்கியமாகப் பராமரிப்பது.

           எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம். அந்தச் சிரசுக்கு தலைமுடியே பிரதானம் என்று சொல்லலாம்.முடி பட்டுப்போன்று மென்மையாகவும் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் இருப்பதே அழகைத்தரும்.ஆனால் என்ன உணவுகள், மற்றும் சுத்தமான விஷயங்களைக் கடைப்பிடித்தாலும் நாம் வாழ்க்கைப் பழக்கவழக்கங்கள், உணவுகள் ஆகியவற்றைப்பொறுத்து முடியின் தண்மையும் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.

         வேலை விஷயமாக அல்லது படிப்பு விஷயம் அல்லது இதர விஷயங்களுக்காகவேறு ஊர்களுக்கு சென்று தங்கும்போது அங்கு கிடைக்கும் உணவுகள் தண்ணீர் முதலியவற்றை நாம் உபயோகிக்க வேண்டிய கட்டாயம் வரும். அப்போது முடிக்குத் தேவையான போஷாக்கான உணவுகளை எடுத்துக்கொண்டு ,கெமிக்கல் நிறைந்த ஷாம்பூக்களை உபயோகிக்காமல் கடலை மாவு, தயிர், சீயக்காய், வெந்தியம் போன்றபொருட்களை வைத்து முடியைஅலசி வந்தால் தண்ணீர் மாறினாலும் ஒன்றும் செய்யாது.

          முதலில் நாம் உண்ணும் உணவுகள் அனைத்து சத்துகளும் கொண்டவையாக இருக்க வேண்டும்.புரோட்டீன்,விட்டமின், தாது உப்புக்கள் அனைத்துமே சேர்ந்துதான் நம் முடியை ஆரோக்கியமாக, தோற்றத்தில் அழகுறச் செய்கின்றன.பேரீச்சை, மீன், முட்டை,காய்கறிகள். இறைச்சி போன்றவை அதிக புரோட்டீன் செறிந்த உணவுகள்.

முடி கொட்டாமல் அடர்த்தியாக மாற:

        முடி கொட்டாமல் இருக்கவும் அடர்த்தியாக வளரவும் முளை கட்டிய பயறு வகைகளைச் சுண்டல் செய்து தினமும் சாப்பிடலாம்.பச்சைப்பயறு முளைகட்டி வைத்துக்கொண்டு தினமும் ஒரு கைப்பிடி காலையில் உணவுக்கு முன்பு சாப்பிட்டு வந்தால் 10 நாட்களில் நல்ல மாற்றம் தெரியும்.

செம்பட்டை முடி கருமை நிறமாக மாற:

        இரவு பாலில் சிறிது தயிர் புறை ஊற்றி அதில் வெந்தியம், கருவேப்பிலை 10 இலைகள் போட்டு வைத்து மறு நாள் காலையில்  வெறும் வயிற்றில் அந்தத்தயிருடன் ஊறியிருக்கும் வெந்தியம்,கருவேப்பிலையை அப்படியே சாப்பிட்டு வர வேண்டும். நாளடைவில் செம்பட்டையாக இருக்கும் முடி நன்கு கருமை நிறமடைந்து அடர்த்தியாக பட்டுப்போல் மாறும்.

முடி நுனி உடையாமல் இருக்க :

       சுத்தமான சல்பர் போன்ற கெமிக்கல் இல்லாத தேங்காய் எண்ணெயைவாரத்தில் இருநாட்கள் முடி வேர்க்கால்களில் நன்கு ுடும்படி மசாஜ் செய்து காலையில் சீயக்காய்,வெந்தியம் சேர்ந்த பொடியில் தலை சேய்த்துக் குளிக்க வேண்டும். நாளடைவில் பட்டுப்போன்|ற கேசம் உங்களுக்கே சொந்தம்.

முடி நீளமாக வளர:

       முடி நீளமாக வளர கீரை சுப்புகள், காய்கறி சூப்புகள்முதலியவற்றை எடுத்துக்கொள்ளலாம.

      சுத்தமான தேங்காய் எண்ணெயில் அரைக்கீரை,நெல்லிக்காய். கருவேப்பிலை முதலியவற்றை காய்ச்சி பயன்படுத்தலாம். 

      ஆலமரத்தின் விழுது நுனியை கிள்ளி எடுத்து வந்து எண்ணெயில் காய்ச்சி தேய்க்கலாம். 

.

தலை சொட்டையாகாமல் இருக்க:,மீண்டும் சொட்டையான
இடத்தில் முடி வளர:

      கீழாநெல்லி செடியை வேருடன் பிடுங்கி அலசி சுத்தமான தேங்காயெண்ணெயில் காய்ச்சி தேய்க்க வேண்டும்.

     கற்றாழை மடலை நடுவில் கீறி 2 ல்பூன் வெந்தியத்தை அதன் சோற்றில் போட்டு மடலை நூலில் சேர்த்துக் கட்டி வைத்து விட வேண்டும். 

      இரண்டு நாட்களில் அதனுள் இருக்கும் வெந்தியம் ஊறிமுளைவிட்டிருக்கும்.அதை எடுத்து எண்ணெயில் காய்ச்சி தேய்த்தாலும் முடி நன்கு வளரும்.

     முதியார் கூந்தல் என்றொரு செடி உண்டு. அதை தேங்காய் எண்ணயில் காய்ச்சி தேய்த்தாலும் சொட்டை மறைந்து வரும்.

     வேப்பம்பூ காயவைத்தது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.அதை வாங்கி கைப்பிடி அளவு எடுத்து உச்சந்தலையில் அழுத்தி பரபரவென்று தெய்த்து சீயக்காய் கொண்டு அலசி வந்தாலும் முடி அயர்த்தியாகி சொட்டை மறையும்.

பேன் தொல்லை மறைய:

     பேன் தொல்லை மறைய வாரத்தில் இரண்டு நாட்கள் வேப்பிலை, துளசி, திருநீற்றுப்பச்சிலை போன்றவற்றை அரைத்து பேக் போட்டு சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.தலைக்கு குளித்த என்று தலையைணை உறைகளை மாற்றிப்போட்டு உறங்க வேண்டும்.

    சீதாப்பழ கொட்டைகளை தேங்காயெண்ணெயில் ஊறவைத்து தலைக்குத் தோய்த்து வந்தாலும் பேன் தொல்லை மறையும். மார்க்கெட்டில் கெமிக்கல் குறைந்த மருந்துகளை வாங்கியும் உபயோகிக்கலாம்.

பொடுகுத்தொல்லை மறைய:

     ஷாம்பூக்கள் பொடுகுத் தொல்லையை அதிகரிக்கவே செய்யும்.மண்டைத் தோலை வறட்சியடையச் செய்வதால் பொடுகுத்தொல்லை அதிகரிக்குமே தவிர குறையாது.

     வேப்பிலை,துளசி,திருநீற்றுப்பச்சிலை,குப்பைமேனி இலைச்சாறுகள் இவற்றுடன் பொடுதலை இலை(பொடுதலை இலை கிடைகாகாவிட்டால் நாட்டு மருந்து கடைகளில் பொடியாகக் கிடைக்கிறது.)கற்றாழை ஜெல் சிறிதளவு சேர்த்து பேக் போட்டு குளிக்கலாம் .ஒன்றிரண்டு முறைகளிலேயே பொடுகுத்தொல்லை குறைந்து வருவதைக் காணலாம்.

நரைமுடி தடுக்க:

      நரைமுடி தடுக்க மருதாணிப்பொடி, நெல்லிக்காய்ப்பொடி, அவுரிப்பொடி,செம்பருத்திப்பொடி,பூந்திக்காய்ப்பொடி, சீயக்காய்ப்பொடி,கத்தா பொடி, அனைத்திலும் ஒரு ல்பூன் போட்டு இரவே ஊறவைத்து காலையில் பேக் போட்டு தலைக்குக் குளிக்கவும்.நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறும்.

     கற்றாழையில் இருந்து எடுக்கப்படும் கரிய பவளத்தைப் பாலில் கரைத்து நெல்லிக்காய் சாறு சேர்த்து தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.

குளிர்காலக் கேசப் பராமரிப்பு:

குளிர்காலத்தில் சூடான நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை தலைக்குத் தேய்த்து சீயக்காயும் வெந்தியமும் செர்த்து அரைத்த பொடியோ அல்லது இரவு இரண்டையும் ஊறவைத்து காலையில் மிக்ஸியில் அரைத்தோ முடியை அலசிக்கொள்ள வேண்டும்.

செய்யக்கூடாதவை:

      வெளியிடங்களில் கிடைத்த உணவுகளை சாப்பிடக்கூடாது. கண்ட ஷாம்பூக்களையும் மாற்றி மாற்றிப்போடக்கூடாது.எண்ணெய் தேய்க்காமல் முடியை வறட்சியாக அதிக நாட்களுக்கு வைத்திருக்கக் கூடாது.தலையணை உறை சுத்தமாக இருக்க வேண்டும்.

செய்யக்கூடியவை:

     மார்க்கெட்டில் கிடைக்கும் ஷாம்பூக்கள் தரமானவையா என்று பார்த்து உபயோகிக்க வேண்டும்.தரம் குறைந்த, கெமிக்கல் அதிகமான ஷாம்பூக்களஐ உபயோகிப்பதால் புற்றுநோய்கள், தோல் சார்ந்த நோய்கள்மற்றஉம் பலவித உடல் சார்ந்த பிரச்சினைகள் வருவதாக சர்வேக்கள் சொல்கின்றது.

      எனவே எப்போதும் இயற்கை சார்ந்த பொருட்களையே சாப்பிடவும், தோல் முடி பராமரிப்பிற்கும் உபயோகிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

     சீயக்காய், கடலை மாவு, வெந்தியம், பூந்திக்கொட்டை , வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,எலுமிச்சை தோல் நெல்லிக்காய் பொடி, கடுக்காய் பொடி மற்றும் இயற்கை இலைப்பொடிகள் போன்றவை முடியை சுத்தம் செய்யவும், வளர்க்கவும் உதவி செய்கின்றன.

    இயற்கையோடு இயைந்து ஆரோக்கியமாய் வாழ்வோம்.


                           நலமே சூழ்க!வளமாய் வாழ்க!




வெள்ளி, 13 டிசம்பர், 2024

சைவ உணவின் மேன்மைகள்

 சைவ உணவு என்றால் என்ன:

        சைவ உணவு என்பது தாவரங்களிலிருந்து பெறப்படும் உணவாகும்.இறைச்சி உணவைத் தவிர்ப்பதே சைவ உணவின் நோக்கமாகும். காய்கறிகள், பழங்கள், இலைகள், கொட்டைகள், தானியங்கள், விதைகள், தண்டுகள் ஆகியவை தாவரத்திலிருந்து பெறப்படும் உணவுகள் சைவ உணவுகள் ஆகும்.

         சைவ உணவு என்பது மிக ஆரோக்கியமானது மட்டுமில்லாமல் அசைவ உணவுகளைவிட அரிதான சத்துக்களைக் கொண்டதாக இருக்கிறது.



பெறப்படும் சத்துகள்:

        உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றல் பழச்சாறுகளிலிருந்து கிடைக்கிறது.பசலைக்கீரை, முருங்கைக்கீரை, மற்றும் அநேக கீரை வகைகள் இரும்புச்சத்தை அதிகரிக்க உதவுகின்றன.

        பருப்பு வகைகளில் மேம்பட்டபுரதம் இருக்கிறது.காய்கறிகளில் தாது உப்புக்களும், வைட்டமின்களும் இருக்கிறது.

        அரிசி,  கோதுமை,சிறு தானியங்களான கம்பு, கேழ்வரகு, சோளம், தினைமுதலியவற்றில் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து இருக்கிறது. 

        சைவ உணவானது நோய்த்தாக்கம் கொண்டவர்கள் விரைவில் மீண்டெழவும், நீரிழிவு நோய், உடல் பருமன், புற்றுநோய்,இதய நோய், உயர் ரத்த அழுத்தம்,இதய நோய், உடல் எடை அதிகம் போன்றவற்றின் தீவிரத்தைக்குறைத்து வாழ்நாளை நீட்டிக்க உதவுகிறதென்று பல ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

        சைவ உணவுக்கான ஆர்வமும் உந்துதல்களும் ஆரோக்கியம், கலாச்சாரம், நோய்த்தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்க்கு மற்றும் தனிப்பட்ட மனிதரின் விருப்பங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையவை.

        சைவ உணவு சில வகைகளாக வேறுபட்டவையாக இருக்கின்றன.சிலர் முட்டையுடன் சேர்ந்த சைவ உணவுகளைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். சிலர் பால் பொருட்கள் முட்டை இவை சேர்த்த சைவ உணவைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள்.

         மேற்கத்திய நாடுகளிலும் பலர் சைவ உணவு முறையைப் பின்பற்றுகிறார்கள்.

         2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலகளாவிய ஆய்வில் சைவ உணவு வாழ்நாளை அதிகரிக்கச்செய்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.சித்த மருத்துவத்தில் நோய் தாக்கம் இருப்பவர்கள் மருந்து எடுத்துக்கொள்ளவும், மருந்துகள் வேலை செய்யவும்,நோய் தீவிரமடையாமல் இருப்பதற்காகவும் சிகிச்சை காலத்தில் சைவ உணவே பரிந்துரைக்கப்படுகிறது.

         உடலுக்குத் தேவையான சில சத்துக்கள் சைவ உணவுகளில் குறைவாகவே இருக்கிறது.கால்சியம், இரும்புச்சத்து முதலியவே இறைச்சி உணவுகளில்தான் செறிந்துள்ளவையாக இருக்கிறது. அதற்குத் தகுந்தாற்போல் சைவ உணவு உண்பவர்கள்  சைவ உணவை அட்டவணைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

        சைவ உணவு உண்பவர்கள் இயற்கை  முறையில் விளைவிக்கப்பட்டஉணவு உண்பது மிக நல்லது.

        சைவ உணவுகளில் அதிக நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்பிச்சினைகளை தணிக்கிறது.

         சைவ உணவு என்பது மனிதர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் முக்கியமான பங்கு வகிக்கிறது.. இது நல்ல ஆரோக்கிய வாழ்க்கைத் தரத்தை  உருவாக்குவதோடு, உலக அளவிலான மாசுபாட்டை குறைக்கும் ஒரு வழியாகவும் விளங்குகிறது. 

முடிவுரை:

          ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் நீண்டகால நன்மைகளை அடைய, நம்முடைய அன்றாட உணவில் சைவ உணவுகளை அதிகமாகச் சேர்க்க வேண்டும். சைவ உணவுகள் மட்டுமே ஒருவரின் உடல், மனம், மற்றும் உலகத்தின் ஆரோக்கியத்தை ஒரே நேரத்தில் மேம்படுத்தும் சக்தி கொண்டவை.தியானம் மற்றஉம் யோகா முதலியவற்றைக் கடைப்பிடிக்கும் மனிதர்கள் சைவ உணவினை உயர்ந்ததாகக் கருதுகின்றனர்.


வியாழன், 12 டிசம்பர், 2024

பிரசவித்த தாய்மார்கள் நலன் பேணுவது எப்படி



(படம்  AIமூலம் உருவாக்கப்பட்டது)

பிரசவித்த தாய்மார்களின் நலன்
பிரசவம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான போற்றத்தக்க கால கட்டமாகும்.இந்த அற்புதமான கட்டத்தில் சில உடல் மாற்றங்களும், மன மாற்றங்களும் இயல்பாகவே ஏற்படும்.பிரசவித்த பிறகு தாய்மார்களின் உய்ல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் எப்படி பாதுகாக்கலாம் எனப் பார்ப்போம்.

பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் உடல் மாற்றங்கள்:

  • கருப்பைச் சுருக்கம்: குழந்தையின் அளவுக்கேற்றவாறு விரிந்து பெரிதாகிய கருப்பை முந்தைய அளவுக்குச் சுருங்க சில வாரம் எடுக்கும்.

  • இரத்தப்போக்கு: பிரசவத்திற்குப் பின்  சில நாட்களுக்கு இரத்தப்போக்கு இருப்பது இயல்பு.

  • தையல்: பிரசவத்தின் போது தையல் போடப்பட்டிருந்தால், அது ஆற நேரம் எடுக்கும்.

  • முலைக்காம்புகள்:பிறந்த குழந்தை பால்குடித்துப்பழக இரண்டொரு நாள் ஆகலாம்.அப்போது பால் சுரப்பு அதிகரிப்பதால் முலைக்காம்புகள் வலிக்கலாம் மற்றும் விரிசல் ஏற்படலாம்.இதற்க்கு க்ரீம்களை மருத்துவர் பரிந்துரைப்பார்.

  • மலச்சிக்கல்: பிரசவத்தின் போது ஏற்படும் உடல் மாற்றங்கள் மாற்றங்கள்  உணவு மற்றும் மருந்துகளின் விளைவால் மலச்சிக்கல் ஏற்படலாம்.

  • தொற்று: சில சமயங்களில் எதிர்ப்பு சக்தி குறைவதால் தொற்றுக்கள்  ஏற்பட வாய்ப்புள்ளது.

பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் மன மாற்றங்கள்:

  • பிறப்புக்கு பிந்தைய மனச்சோர்வு: சில தாய்மார்களுக்கு பிரசவத்துக்குப்பின்   மனச்சோர்வு ஏற்படலாம். இது சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய ஒரு நிலை.கணவரும் குடும்பத்தாரும் அனஅபும் அரவணைப்பும் காட்டுவதால் தாய்மார்கள் எளிதில் இப் பிரச்சினையைக் கடந்து வருவார்கள்

  • உடல் மாற்றங்களால் ஏற்படும் மன உளைச்சல்:         
  •          தூக்கமின்மை  உடல் சோர்வு, குழந்தைப்பராமரிப்பு அதிகநேரம் அமர்ந்துகொண்டு பாலூட்டுதல் ,பிரசவித்ததால் ஏற்பட்ட புண்களின் வலி ,உடல் எடை அதிகரிப்பு, தோல் பிரச்சினைகள் போன்றவை மன உளைச்சலை ஏற்படுத்தலாம்.

பிரசவித்த தாய்மார்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்:

  • சரியான உணவு:  பிரசவித்த தாய்மார்கள் சரியான நேரத்துக்கு உணவு எடுக்க வேண்டும். குழந்தைக்கு அடிக்கடி பாலூட்டும் தேவையிருப்பதால் தாய்க்கும் அடிக்கடி பசிக்கும்.இடையில் ரொட்டி, பால் , கஞ்சி முதலியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.பால் சுரப்பு அதிகரிக்கவும், உடல் சக்தி பெறவும் போதுமான ஊட்டச்சத்துள்ள உணவை உண்ண வேண்டும்.பிரசவ லேகியம் என்று நாட்டு மருந்து கடைகளில் விற்கிறது.சுக்கு,மிளகு,பைண்டு, சீரகம், கருப்பட்டி சேர்த்த பிசவ லேகியம் எடுத்துக்கொள்வதால் பால் சுரப்பு நன்கு இருக்கும், மலச்சிக்கல், அஜீரணம் முதலிய தொந்தரவுகளும் இல்லாமல்  உடல் மீண்டும் பழைய நிலைக்கு விரைவில் திரும்ப உதவும்.
         பாலூட்டுதல்: 
  1.                    சரியான நிலலையில் அமர்ந்து பாலூட்ட வேண்டும். 
  2. இதை மருத்துவரே  பரிந்துரைத்திருப்பார்.இல்லையெனில் பிற்பாடு முதுகுவலி வரக்  காரணமாகிவிடும்.சரியான அளவில் குழந்தைக்குத் தேவையான அளவில் பால் சுரப்பு இல்லையெனில் மருத்துவரை அணுகவும்.வீட்டு வைத்தியமான சிலவற்றைக்கூட பின்பற்றலாம். பூண்டு 10 பற்களை பாலில் வேகவைத்துக் குடித்தால் பால் நன்கு ஊறும். முருங்கைக்கீரை சூப் குடிக்கலாம்.காளான் சாப்பிட்டால் பால் சுரப்பு குறையுமென கிராமத்துப்பக்கங்களில் பாட்டிமார்கள் அறிவுறுத்துவார்கள்.
           ஓய்வு : குழந்தை பராமரிப்புடன் சேர்த்து போதுமான அளவு                               தூங்க வேண்டும்.ஓய்வு, அமைதியான சுற்றுப்புறம்                                         மற்றும் அமைதியான மனநிலை தேவை.  

         தொற்று தடுப்பு: மருத்துவரின் அறிவுரைப்படி தையலபகுதியை                   சுடுநீரில் சுத்தம் செய்து மருந்துகள் தடவி சுத்தமாக                                       வைத்துக்கொள்ள வேண்டும்.

          மருத்துவரை அடிக்கடி சந்திக்கவும்: எந்தவொரு பிரச்சினையும்                        ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 

        உதவி கோருதல்: உறவினர் மற்றஉம் நண்பர்களிடம் உதவிகள்                    கோர தயங்க வேண்டாம்.

சிறிய அளவில் யோகா, தியானம், மற்றும் நடைப்பயிற்சி செய்யலாம்.
பாரம்பரிய முறைகளில் சத்தான உணவுகள் எடுத்துக்கொள்ளலாம்.
எளிமையான புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சூப்புகள், சூடான பானங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்களுக்கு கிடைக்கும் ஆதரவு:

  • குடும்பத்தினர் மற்றஉம் நண்பர்களின் அன்பும் ஆதரவும் மிகவும் முக்கியம்

  • மருத்துவர் வழிகாட்டுதல் மற்றும் சிகிச்சையின்படியே நடக்க வேண்டும்.

  • பால் ஊட்டும் ஆலோசகர்: பால் கொடுப்பதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவும்.

  • மனநல மருத்துவர்: பிறப்புக்கு பிந்தைய மனச்சோர்வு ஏற்பட்டால் மனநல மருத்துவரை அணுகலாம்.

   முடிவுரை:
      பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்களின் உடல் மற்றும் மன                           ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். சரியான                        உணவு,   போதுமான ஓய்வு, மருத்துவரின் ஆலோசனை மற்றும்                குடும்பத்தினரின் ஆதரவு ஆகியவை இதற்கு அவசியம்.

குறிப்பு: இது ஒரு பொதுவான தகவல் மட்டுமே. எந்தவொரு பிரச்சினையும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.


Disclaimer: This information is for general knowledge and informational purposes only, and does not constitute medical advice. Always consult your doctor for any health concerns.


புதன், 11 டிசம்பர், 2024

எளிதாய் உடல் எடை குறைக்கலாம்

  உடல் எடை அதிகமாக ஆக பல சிக்கல்கள்  நமக்கு வருகின்றன.


உடல் எடை அனைத்தையும் கால் தாங்குவதால் எடை கூடக்கூட அழுத்தம் தாங்காமல் கால்கள் வலிக்க ஆரம்பிக்கின்றது.மூட்டு மற்றும் எலும்புகள் தாங்கும் திறனை இழந்து வலியை சுமக்க ஆரம்பிக்கின்றன.

உங்கள் முதுகெலும்பு அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறது.

ஆல்டியோஆர்த்ரைடீஸ் எனும் எலும்பு சம்பநதப்பட்ட நோய்களுக்கு வாய்ப்பாகிறது.

உடல் எடை கூடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். அதிக கொலஸ்ட்ரால் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும். இருதய வால்வுகளில்  கொழுப்பு சேர்ந்து இதய பிரச்சினைகளைக் கொண்டு வருகிறது.மூச்சுத்திணறல் ,தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

அதிக உடல் எடை வாழ்நாளைக் குறைக்கிறது.உயிரிழப்புக்கான அபாயம் அதிகரிக்கின்றது.

உடல் பருமன் இகுப்பவர்களுக்கு உடல் பிரச்சினைகளால் தன்னம்பிக்கை குறைகிறது.

ஹார்மோன் பிரச்சினைகள் வருவதற்க்கு வாய்ப்புகள் அதிகம்.குழந்தை பெறும் வாய்ப்புகள் குறைகிறது.பெண்களுக்கு PCOS (Polycistic Over Syndrome)போன்ற ஹார்மோனல் குறைபாடுகள் ஏற்படும். சீரற்ற மாதவிடாய்ஏற்படும்.

சீரற்றவடிவம்,தொப்பை போன்றவை நம் அழகை குறைக்கும்,பேட்டி லிவர் 

எனும் கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றைச்சுற்றி கொழுப்பு படிவதால் 

சர்க்கரை நோய்,சிறுநீரகப்பிரச்சினைகள் போன்றவற்றிற்க்கு ஏதுவாகிறது.

இத்தனை பிரச்சினைகளை நாம் ஏன் ஏற்றுக்கொண்டு துன்பப்பட்டுக்கொண்டு வாழ வேண்டும்?


இதற்கு எளிய வழி முறைகள் உள்ளன.

1.        பால், தயிர் போன்ற கொழுப்புள்ள உணவுகளை பெரும்பாலும் தவிர்த்துவிட்டு பால் இல்லாமல் வரகாபி,வரடீ போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

2.         காலையில் இஞ்சி,கடும்பகல் சுக்கு ,மாலையில் கடுக்காய் 48 நாட்களுக்கு  எடுத்துக்கொள்பவர்களுக்கு முதுமையும் இளமையாக மாறும் என சித்தர் பாடல் கூறுகின்றது.

   காலையில் ஒரு இஞ்ச் அளவிற்க்கு இஞ்சியை  தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துபனங்கல்கண்டு சேர்த்து குடித்து வரலாம்.மதியம் சுக்குப்பொடி:கடைகளில் சுக்குப்பொடி கிடைக்கிறதுஅதை கால் ஸ்பூன் அளவிற்க்கு வாயில் போட்டு தண்ணீர் குடிக்கலாம், இரவு கடுக்காய் பொடி:இதுவும் கடைகளில் கிடைக்கும் .இரவு படுக்கப்போகும் முன் கால் ஸ்பூன் தண்ணீரில் கரைத்து குடித்து வரலாம். 

   இவை மூன்றையும் கடைப்பிடிக்க முடியாவிட்டால் கூட ஏதாவதொன்றை ஒரு நேரத்தில் கடைப்பிடிக்கலாம்.

3.     சமைக்காத உணவு:  இது மிகவும் எளிது.மூன்று வேளை உணவில் ஏதாவது ஒரு வேளை மட்டும் சமைக்காத உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். பழங்கள் கூட ஒரு வேளை சாப்பிடலாம்.    தொடர்ந்து ஒரு மாதம் எடுத்துக்காட்டாக ... இரவு ஒருவேளை வெறும் பழங்கள்    சாப்பிட்டு வர உடல் கொழுப்பு குறைந்து உடல் வடிவமாக மாறுவதை கண்கூடாக காணலாம்.  

         பச்சைப் பயறை முளை கட்டி வெங்காயம், தக்காளி, தேங்காய் துருவல்,எலுமிச்சைச்சாறு,சிட்டிகை உப்பு, மிறகுத்தூள் சேர்த்துக் கலக்கி ஒரு வேளை உணவாக உண்ணலாம்.ராகி, கம்பு ஆகியவற்றையும் முறைகட்டி களி கூழ், தோசை முதலியவை தயாரித்து உண்ணலாம். இந்த முறஐயில் தினமும் எடுத்துக்கொண்டால் 15 நாட்களில் எடை குறைவதை கண்கூடாகக் காணலாம்.

       அவுல் அல்லது சிவப்பு அவுல் தண்ணீரில் ஊறவைத்து தேங்காய் துருவல் வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.

         எலுமிச்சைச்சாறை வெதுவெதுப்பான நீரில் கலக்கி தேன் சேர்த்து குடிக்கலாம்.

4.    கொள்ளு சூப்: காலை நேரத்தில் கொள்ளு சூப்150 மில்லி தினமும் குடித்துவர உடல் எடை ஆச்சர்யப்படத்தக்க அளவு குறையும்.

இவையெல்லாம் சிரமமில்லாத எளிதில் கடைப்பிக்கக்கூடிய வழிகள்.

5.     வெண்பூசணிச்சாறு: வெண்பூசணியை பச்சையாக சாறுபிழிந்து குடிக்க வேண்டும்.  வேகவைத்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.பச்சையாக எடுத்துக்கொள்ளும்போது உடல் எடை குறையும்.

6.சிறி தானியங்களான சாமை, வரகு, ராகி, திணை, சோளம், குதிரைவாலி போன்ற சிறு தானியங்களில், புரோட்டீன் , மினரல்ஸ் மற்றும்  நார்ச்சத்து அதிகமாகவும் கொழுப்பு குறைவாகவும் இருப்பதால் உடல் எடையை கட்டுப்படுத்துவதற்க்கு சிறந்தது!  இவற்றை களி, கஞ்சி, ரொட்டி ,சாதம் முதலியனவாக செய்து உண்ணலாம்.

7. அடுத்து நிறைய நீர் அருந்த வேண்டும்.தாகத்தை மட்டுப்படுத்திக்கொண்டு தண்ணீர் கிடைக்கும்போது குடிக்கும் பழக்கத்தை தவிர்க்கவும்.

8.தினமும் சரியான நேரத்துக்கு வயிற்றுக்கு வேண்டிய உணவை கண்டிப்பாக உண்ண வேண்டும்.உடல் குறைக்கவேண்டும் என உணவை மிகக் குறைவாக எடுத்தாலோ அல்லது  பட்டினியாக இருந்தாலோ நிச்சயம் உடல் எடை குறையாது. 

9.வீட்டிலேயே உடற்பயிற்சி,நடைப்பயிற்சி  உடல் எடை குறைய முக்கியப் பங்கு வகிக்கிறது.யோகா செய்வதும் கொழுப்பு சேர்வதைத் தடுத்து உடலை வடிவாக்குகிறது.

10. கடைகளில் வாங்கும் தின் பண்டங்களை உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில்

உண்பதைத் தவிர்க்கவும்.

11. உப்பு, மற்றும் சர்க்கரையை மிதமாக உபயோகிக்கவும்.

  

என்னடா இத்தனை வழியில் எதைப்பின்பற்றுவது என யோசிக்கிறீர்களா? இவற்றில் எதாவது சிலவற்றைக் கடைப்பிடித்தாலே போதும்!


                                              நீடு வாழ்க!நலமே சூழ்க!

                                    💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢



                                        




சனி, 7 டிசம்பர், 2024

உலகின் தொன்மையான மருத்துவம் தமிழ் மருத்துவமே


                       சிந்துவெளி நாகரிகத்தின் அடிப்படையில் அமைந்த திராவிடர் நாகரிகம் கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன் இருந்தது என்றும்' அது ‘சைத்தவ பண்பாட்டு நாகரிகம்' என்று அழைக்கப்பட்டது என்று பேராசிரியர். கே. ஆர். ஸ்ரீ கண்ட மூர்த்தி குறிப்பிடுகின்றார்.
“சிந்துவெளி நாகரிக இனத்தின் பரம்பரையினர் என்று கருதப்படு கின்றவர்கள், தமிழ்நாட்டில் ‘திராவிடர்'களில் இன்னும் பிரபலமாக இருக்கின்ற ‘சித்த வைத்திய முறை'யைப் பின்பற்றுகிறவர்கள் என்றும், இவர்களே, ‘சைத்தவ நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள்' என்றும் அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்" எனப் பேராசிரியர் எஸ். கே. இராமச்சந்திரராவ் தெரிவிக்கின்றார்.

                

                   உருத்திரன் என்றழைக்கப்பட்ட திராவிட இனத்தைச் சேர்ந்த சிவனே முதல் மருத்துவனாகவும், சிறந்த மருத்துவனாகவும் ரிக் வேதத்தினால் அடையாளம் காட்டப்படுகிறான். (ரிக் வேதம் – 2-33.4)
சித்தர் சிவபெருமானே முதல்சித்தர் என ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளதால், சிவபெருமானைப் பற்றிய குறிப்புகளையே சித்தர் வரலாற்று ஆவணமாகக் கருதலாம்.
கி.மு.5000 ஆண்டளவிலான நடராசர் உருவ முத்திரை ஈரானில் (மெசபடோமியா) கிடைத்துள்ளது.
கி.மு. 4000 ஆண்டளவிலான சிவபெருமானை வழிபடும் தமிழ்க் கல்வெட்டு போர்ச்சுகல் நாட்டில் கிடைத்துள்ளது.
சிந்து சமவெளியில் சிவன் யோக நிலையிலிருக்கும் முத்திரை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிந்துவெளி நாகரிகத்தின் அடிப்படையில் அமைந்த திராவிடர் நாகரிகம் கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன் இருந்தது என்றும்' அது ‘சைத்தவ பண்பாட்டு நாகரிகம்' என்று அழைக்கப்பட்டது என்று பேராசிரியர். கே. ஆர். ஸ்ரீ கண்ட மூர்த்தி குறிப்பிடுகின்றார்.

தமிழ் மருத்துவ முறைகள் 10000 முதல் 4400 B.C.E ஆகிய காலங்களில் தோன்றியதாக T.V.சாம்பசிவம் பிள்ளை குறிப்பிடுகிறார்.


கருவூரார், கொங்கணவர், சட்டைமுனி, இடைக்காடர்,காராங்கிநாதர்,கோரக்கர்,புலிப்பாணிசித்தர்,நந்தீசர்

காலாங்கிநாதர்,புலிப்பாணி,திருமூலர்,போகர்,கோரக்கசித்தர்.

தமிழ் மருத்துவர்களை ‘ஆயுள்வேதர்' என்று இளங்கோ வடிகள் குறிப்பிடுகிறார்.

சேறை. அறிவனார் என்னும் இசை மேதையால் இயற்றப் பெற்றது பஞ்சமரபு.புதை பொருள் அகழாய்வு ஆராய்ச்சியின்படி, சிந்து, கங்கைச் சமவெளிகளில் வாழ்ந்திருந்த பழந்திராவிட மக்கள், அறுவை மருத்துவத்துக்காகச் செப்புக் கத்திகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர் 2 என்பது தெரியவருகிறது. அறுவை மருத்துவத்துக்காகச் செம்பைப் பயன்படுத்தினால்' அது பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்னும் அறிவியல் உண்மையைப் பண்டைய தமிழர் அறிந்திருந்தனர் என்பது பெறப்படுகிறது. புதைந்த நாகரிக இனத்து மக்கள் மருந்து, மருத்துவம்' அறுவை மருத்துவம் ஆகியவற்றை அறிந்தும் பயன்படுத்தியும் வந்திருந்தனர் என்பதை உறுதிப் படுத்துகிறது.
கூட்டுமறுத்துவம்,குழந்தைமருத்துவம்,அழகு மருத்துவம்,விலங்கு மருத்துவம்,தாவரமருத்துவம்
திருமந்திரம்,தொல்காப்பியம்,திரிகடுகம்,சிறுபஞ்சமூலம்,ஏலாதி ஆகிய சிறந்தமருத்துவ நூல்கள் தமிழ்மரித்துவத்தின் தொன்மையையும் சிறப்பையும் விளக்குகின்றன்.

போர்க் காலங்களில் போர்வீரர்களுக்கு ஏற்படுகின்ற விழுப்புண் பெரிய அளவில் இருந்தால் அப்புண்ணை மருந்துகளால் ஆற்றுவது கடினம் என்பதை உணர்ந்து' மருத்துவ வல்லார்களால் அப்புண்கள் தைக்கப்பட்டன. அதன் பின்னரே மருந்திட்டுக் கட்டுவதும் நிகழ்ந்துள்ளது. இதுவே இன்றைய நாளிலும் நடைமுறையிலுள்ளது. இவ்வாறு, விழுப்புண்ணைத் தைக்கும் முறையைப் பதிற்றுப் பத்து குறிப்பிகிறது.
"மீன்தேர் கொட்பின் பனிக்கய மூழ்கிச்
சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள்ளூசி
நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்" – பதிற்றுப்பத்து 5: 2:1-3
நீரிலுள்ள மீனைக் கொத்துவதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியில் நீரைவிட்டு மேலே பறந்து செல்லும் சிரல் பறவையைப் போல, நெடிய வெள்ளூசி புண்ணுக்குள் நுழைந்து வெளியே வருகிறது என்கிறது. வெள்ளூசி என்பது வெள்ளியால் செய்யப்பட்ட தையல் ஊசியாக இருக்கலாம்.
"திப்பிலி தேன்மிளகு சுக்கினோ டிம்பூரல்
துப்பில்லா ஆன்பால் தலைக்காடைஒப்பில்லா
வெந்நீரும் வெண்ணெயு மெய்ச் சாந்தும் பூசவிவை
மன்னூழி வாழும் மகிழ்ந்து" – பஞ்சமரபு. செய்.63
என்னும் இச்செய்யுள் திப்பிலி, தேன்' மிளகு, சுக்கு' இம்பூரல், பசுவின்பால்' தலைக்காடை, மெய்ச்சாந்து இவற்றை வெண்ணெய் விட்டு அரைத்து வெந்நீரில் குழைத்துப் பூசிவரக் குரலின் வளம் அதிகப்படும் என்கிறது.
கரணி என்பது அரைப்பு முறையால் செய்யப்படுகின்ற மருந்துகளைக் குறிப்பிடும்.
சந்தான கரணி- அருகிய பெருமருந்தென்பர். இது முறிந்த உறுப்புச் சந்து செய்யும் (இணைக்கும்) மருந்து.
சல்லிய கரணி - வேல்தைத்த புண்ணை ஆற்றும் மருந்து.
சமனிய கரணி - புண்ணின் தழும்பை ஆற்றும் (அ) மாற்றும் மருந்து.
மிருத சஞ்சீவினி - இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்யும் மருந்து.
மேற்கண்ட நான்குவித மருந்துகளின் வினைப்பயனை நோக்கும் போது, தமிழ் மருத்துவம் மிக உயர்ந்த நிலையில் இருந்தது தெரிய வருகின்றது. இம்மருந்துகளைப் போன்ற பயனுடைய மருந்துகள் மேலை மருத்துவமான அலோபதி மருத்துவத்திலும், இன்றைய நிலையிலுள்ள எந்த மருத்துவத்திலும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
தமிழ் நூல்கள், பத்துவகைக் குற்றமுமின்றி முப்பத்திரண்டு வகை உத்தியொடு இயற்றப் பெற வேண்டும் என்கிறது.
மனித உடல் பிணநாற்றம், உடல்நலக்குறைவு, மதுவின் நாற்றம், இளைப்பு, முகம்வேர்த்தல், குளிர்தல், பசிதாகம், கண்பஞ்சாடல், உடல்வியர்த்தல், மரணம் என்னும் பத்து வகைக் குற்றங்களைக் கொண்டுள்ளது. (அகத்தியர் வைத்திய வல்லாதி – 600. பாடல். 73-74) அவற்றை நீக்கினால் மட்டுமே உடல் அழியாதிருக்கும்.



மருத்துவப் பூக்கள்

சங்க இலக்கியமான பத்துப் பாட்டுள் ஒன்றான குறிஞ்சிப் பாட்டை இயற்றிய கபிலர்' 98 வகையான பூக்களைக் குறிப்பிடுகிறார். அவை அனைத்தும் மருத்துவக் குணங்களைக் கொண்ட மரம், செடி' கொடிகளாகும். அந்நூலுள், 98 வகையான பூக்களைக் கூற வேண்டிய சூழல் நேராமலேயே அவை உரைக்கப்பட்டிருப்பதாக அந்நூலைக் கற்பார் உணர்வர். அவர்' அவ்வாறு உரைக்கக் காரணம்? தானறிந்த வற்றைப் பிறரும் அறிந்து இன்பமடைய வேண்டுமென்ற நோக்கமே எனலாம்.



உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல, திருமூலர் அறுபதுக்கும் மேற்பட்ட காயகற்ப முறைகளைக் குறிப்பிட்டுள்ளார். உடல் நலம் பெற எவர் முனைந்தாலும், முதலில் உடலில் உள்ள அழுக்குகளை அகற்றிக் கொள்ள வேண்டும். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருது' என்று சித்தர்கள் கூறுகிறார்கள்


பண்டைக் காலத்துத் தமிழ் மருத்துவ முன்னோர்கள் மனிதனுக்கு உற்ற நோயைப் போக்கும் மருந்துகளையும் மருத்துவத்தையும் கண்டறிந்திருந்ததைப் போல' மனிதனுக்கு உற்ற துணையாக இருந்த விலங்குகளுக்கும்' உணவுப் பொருளாகப் பயன்பட்ட தாவரங்களுக்கும் மருத்துவம் பார்த்ததுடன், அவை நோய் வராமல் பராமரிக்கவும் கற்றிருக்கின்றனர் என்பது தெரிய வருகிறது.

[தொகு]



தமிழ் மருத்துவர் மருந்து, வாதம், ஓகம், ஞானம் ஆகிய நான்கு உறுதிப்பொருள்களைக் குறியீடுகளாகக் குறித்தனர். அக்குறியீடுகள் தொல்காப்பியத்தில் அமைப்பு எண்களாக அமைந்துள்ளன.
தமிழ் மருத்துவத்தின் குறியீட்டு எண்கள் உடலியலைச் சுட்டுகிறது. அதைப் போலத்3, தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய அதிகாரங்களை மூன்றாகக் கொண்டுள்ளது.
"மூன்றே பொருளாய் முடிந்தது அண்டம்
மூன்றே பொருளாய் முடிந்தது பிண்டம்
மூன்றே பொருளாய் முடிந்தது மருந்து
மூன்றே பொருளாய் முடிந்தது வாதமே" - திருமந்திரம்.
அண்டம், பிண்டம், மருந்து, வாதம் ஆகியவை நான்கும் மூன்று பொருளாய் முடிந்தது4 என்கிறது, தமிழ் மருத்துவம். அந்த மூன்று மூலப்பொருள்களைக் கருத்திற்கொண்டு தொல்காப்பியத்தின் அதிகாரங்கள் மூன்றாக அமைந்தன.
மனித உடற்பகுதிகளில் தொடர்புடைய விண்மீன்களின் எண்ணிக்கை இருபத்தேழு என்பதால், அவ்வெண்கள் தொல்காப்பிய இயல்களின் எண்களாகக் கொள்ளப்பட்டன.
(இந்திய அணுக்கூடத்தில் ஒரு நியூட்ரானைக் கொண்டு ஒரு யுரேனியம் இடிக்கப்படுகிறது. அவ்வாறு இடிக்கப்படும் யுரேனியம், 1 > 3 > 9 > 27 > 81 > என நியூட்ரானை உருவாக்கிக் கொண்டே செல்கிறது. இந்த அணுச்செயலைப் போலவே தொல்காப்பியத்தில் 1 > 3 > 9 > 27 என்று அதிகாரங்களும் இயல்களும் அமைந்துள்ளன. )
தமிழ் மருத்துவத்தில் எட்டு என்பது ஓர் அடிப்படைக் கணக்காகும். மருத்துவப் பொருள்களை எட்டுக்கு ஒன்றாகக் காய்ச்சினால் மருந்தாகும். இல்லாவிட்டால் விருந்தாகும்.
இவ்வாறு கண்டறியப் பெற்ற எட்டின் தத்துவம் மருந்துக்கு மட்டுமல்ல. மற்ற எல்லாவற்றுக்கும் பொருந்தும். சாதாரணமாகக் குடிக்கப் பயன்படுகின்ற வெந்நீர், எட்டுக்கு ஒன்றாகக் காய்ச்சினால் மருந்து என்று கண்டறியப்பட்டுள்ளது.

இக்காலத்தில் உயிர்க்கொல்லி மருந்தாகப் பயன்படுத்தப் படுகின்ற வேம்பு சிந்துவெளி நதிக்கரை நாகரிக மக்களிடத்திலும் காணப்பட்டுள்ளது. வேப்பிலையைச் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்று அறிஞர் தீட்சிதர் கூறுகிறார்.19
வீட்டு விலக்கம் என்னும் மூன்று நாளில் ஆண் பெண் இருவரும் கூடி கருவமைந்தால் அந்தக்கரு கூன், குருடு, செவிடு, பேடு போன்றவற்றில் ஒன்றாகப் பிறக்கும் என்பதால்,
‘பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீத்தகன் றுரையார் என்மனார் புலவர்’ - தொல்.பொருள்.1133 (46)
விலக்குடைய மூன்று நாளும் விலகி இ.ரு என்பதும் மருத்துவச் செய்தியே ஆகும்.தமிழ் இலக்கிய நூல்களின் அளவைவிடவும் இரு மடங்குக்கும் அதிகமான நூல்கள் தமிழ் மருத்துவ நூலாகக் கிடைக்கின்றன.தமிழ் மொழியைப் போலவே தமிழ் மருத்துவமும் காலத்தால் முதிர்ந்தது, தொன்மையானது, செம்மையானது. தமிழ் மொழியைச் செம்மொழியென அழைப்பது போலவே தமிழ் மருத்துவத்தையும் செம்மருத்துவம் என வழங்க வேண்டும். செம்மொழித் தமிழாய்வு நடைபெறுவதைப் போல, தமிழ்ச் செம்மொழி மருத்துவ ஆய்வுகள் நடைபெற வேண்டும்.
தமிழ் மொழிக்கெனத் “தமிழ்ப் பல்கலைக் கழகம் “ அமைந்துள்ளதைப் போலத் தமிழ் மருத்துவத்திற்கெனத், “தமிழ் மருத்துவப் பல்கலைக் கழகம்” அமைத்து தமிழ் மருத்துவத்தை நுண்ணாய்வு செய்து காத்து வளர்த்திட வேண்டுமெனப் பரிந்துரை செய்கின்றேன்.


புதன், 4 டிசம்பர், 2024

குளிர்கால நலன் பாதுகாப்பு.

 குளிர்காலத்தில் உடல்நலத்தை பேண சற்று அதிக கவனம் தேவைப்படும், ஏனெனில் சளி, காய்ச்சல், மற்றும் தோல் உலர்வுகள் போன்ற சிரமங்கள் ஏற்படக்கூடும். இதற்கு சில எளிய வழிமுறைகள்:

1. உணவில் கவனம் கொடுக்கவும்:

  • சூடான உணவுகள்: சூப், மிளகு கஞ்சி, மற்றும் சூடான பானங்கள் உடலை சூடாக வைத்திருக்க உதவும்.
  • சத்தான உணவு: சுண்டல், பாதாம், முந்திரி, மற்றும் தகடல் சத்துக்கள் உள்ள உணவுகளை சேர்க்கவும்.
  • தண்ணீர் அதிகம் குடிக்கவும்: குளிர் காலத்தில் தாகம் அதிகம் தெரியாமல் இருக்கலாம், ஆனால் உடல் ஈரப்பதத்தைப் பேண தண்ணீர் மிக முக்கியம்.

2. உடற்பயிற்சி செய்யவும்:

  • தினசரி நடைபயிற்சி அல்லது யோகா செய்து உடல் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ளுங்கள்.
  • இரத்த ஓட்டத்தை மேம்படுத்த, ஒழுங்காகக் குதூகலமான உடல் இயக்கங்களைச் செய்யவும்.

3. உடை தேர்வில் கவனம்:

  • பனி மற்றும் குளிரில் இருந்து தப்பிக்க தையல் உள்ள சால்வை, கைக்குட்டை, மற்றும் குளிர் எதிர்ப்பு ஜாக்கெட்டை அணியவும்.
  • கைவிரல் மற்றும் கால்களுக்கான உரிய கைகளுடன் காலணி அணியவும்.

4. தோல் பராமரிப்பு:

  • தோல் உலராமல் இருக்க மாய்ச்சூர் க்ரீம் அல்லது எண்ணெய்களை (மரச்செக்கு தேங்காய் அல்லது நல்லெண்ணெய்) பயன்படுத்தவும்.
  • தண்ணீரில் குளிர் தணிவதற்குப் பதிலாக சுடுவெப்பம் கொண்ட நீரை மட்டும் பயன்படுத்தவும்.

5. தடுப்பூசிகள் மற்றும் சளி தடுப்பு:

  • காய்ச்சல் மற்றும் சளி பிரச்சனைகளுக்கு முறையான தடுப்பூசிகளை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்ளவும்.
  • குளிர்ச்சியாக உணரும்போது உப்பு தண்ணீரால் தொண்டை கொப்பளிக்கவும்

6. இயற்கை வழிகள்:

  • இஞ்சி-மிளகு தேநீர்: இயற்கை உணவுகள் போன்ற இஞ்சி, மிளகு சேர்க்கப்பட்ட பானங்கள் காய்ச்சலுக்கு தடுப்பு தரும்.
  • துளசி-தேன்: சளி மற்றும் தொண்டை எரிச்சலுக்கு இது சிறந்த இயற்கை மருத்துவமாக செயல்படும்.

இந்த வழிமுறைகளை பின்பற்றி, உங்கள் உடல் நலத்தையும் சக்தியையும் குளிர்காலத்தில் பாதுகாத்துக்கொள்ளலாம். 😊