தலைமுடியை எப்படி ஆரோக்கியமாகப் பராமரிப்பது.
எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம். அந்தச் சிரசுக்கு தலைமுடியே பிரதானம் என்று சொல்லலாம்.முடி பட்டுப்போன்று மென்மையாகவும் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் இருப்பதே அழகைத்தரும்.ஆனால் என்ன உணவுகள், மற்றும் சுத்தமான விஷயங்களைக் கடைப்பிடித்தாலும் நாம் வாழ்க்கைப் பழக்கவழக்கங்கள், உணவுகள் ஆகியவற்றைப்பொறுத்து முடியின் தண்மையும் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.
வேலை விஷயமாக அல்லது படிப்பு விஷயம் அல்லது இதர விஷயங்களுக்காகவேறு ஊர்களுக்கு சென்று தங்கும்போது அங்கு கிடைக்கும் உணவுகள் தண்ணீர் முதலியவற்றை நாம் உபயோகிக்க வேண்டிய கட்டாயம் வரும். அப்போது முடிக்குத் தேவையான போஷாக்கான உணவுகளை எடுத்துக்கொண்டு ,கெமிக்கல் நிறைந்த ஷாம்பூக்களை உபயோகிக்காமல் கடலை மாவு, தயிர், சீயக்காய், வெந்தியம் போன்றபொருட்களை வைத்து முடியைஅலசி வந்தால் தண்ணீர் மாறினாலும் ஒன்றும் செய்யாது.
முதலில் நாம் உண்ணும் உணவுகள் அனைத்து சத்துகளும் கொண்டவையாக இருக்க வேண்டும்.புரோட்டீன்,விட்டமின், தாது உப்புக்கள் அனைத்துமே சேர்ந்துதான் நம் முடியை ஆரோக்கியமாக, தோற்றத்தில் அழகுறச் செய்கின்றன.பேரீச்சை, மீன், முட்டை,காய்கறிகள். இறைச்சி போன்றவை அதிக புரோட்டீன் செறிந்த உணவுகள்.
முடி கொட்டாமல் அடர்த்தியாக மாற:
முடி கொட்டாமல் இருக்கவும் அடர்த்தியாக வளரவும் முளை கட்டிய பயறு வகைகளைச் சுண்டல் செய்து தினமும் சாப்பிடலாம்.பச்சைப்பயறு முளைகட்டி வைத்துக்கொண்டு தினமும் ஒரு கைப்பிடி காலையில் உணவுக்கு முன்பு சாப்பிட்டு வந்தால் 10 நாட்களில் நல்ல மாற்றம் தெரியும்.
செம்பட்டை முடி கருமை நிறமாக மாற:
இரவு பாலில் சிறிது தயிர் புறை ஊற்றி அதில் வெந்தியம், கருவேப்பிலை 10 இலைகள் போட்டு வைத்து மறு நாள் காலையில் வெறும் வயிற்றில் அந்தத்தயிருடன் ஊறியிருக்கும் வெந்தியம்,கருவேப்பிலையை அப்படியே சாப்பிட்டு வர வேண்டும். நாளடைவில் செம்பட்டையாக இருக்கும் முடி நன்கு கருமை நிறமடைந்து அடர்த்தியாக பட்டுப்போல் மாறும்.
முடி நுனி உடையாமல் இருக்க :
சுத்தமான சல்பர் போன்ற கெமிக்கல் இல்லாத தேங்காய் எண்ணெயைவாரத்தில் இருநாட்கள் முடி வேர்க்கால்களில் நன்கு ுடும்படி மசாஜ் செய்து காலையில் சீயக்காய்,வெந்தியம் சேர்ந்த பொடியில் தலை சேய்த்துக் குளிக்க வேண்டும். நாளடைவில் பட்டுப்போன்|ற கேசம் உங்களுக்கே சொந்தம்.
முடி நீளமாக வளர:
முடி நீளமாக வளர கீரை சுப்புகள், காய்கறி சூப்புகள்முதலியவற்றை எடுத்துக்கொள்ளலாம.
சுத்தமான தேங்காய் எண்ணெயில் அரைக்கீரை,நெல்லிக்காய். கருவேப்பிலை முதலியவற்றை காய்ச்சி பயன்படுத்தலாம்.
ஆலமரத்தின் விழுது நுனியை கிள்ளி எடுத்து வந்து எண்ணெயில் காய்ச்சி தேய்க்கலாம்.
.
தலை சொட்டையாகாமல் இருக்க:,மீண்டும் சொட்டையான
இடத்தில் முடி வளர:
கீழாநெல்லி செடியை வேருடன் பிடுங்கி அலசி சுத்தமான தேங்காயெண்ணெயில் காய்ச்சி தேய்க்க வேண்டும்.
கற்றாழை மடலை நடுவில் கீறி 2 ல்பூன் வெந்தியத்தை அதன் சோற்றில் போட்டு மடலை நூலில் சேர்த்துக் கட்டி வைத்து விட வேண்டும்.
இரண்டு நாட்களில் அதனுள் இருக்கும் வெந்தியம் ஊறிமுளைவிட்டிருக்கும்.அதை எடுத்து எண்ணெயில் காய்ச்சி தேய்த்தாலும் முடி நன்கு வளரும்.
முதியார் கூந்தல் என்றொரு செடி உண்டு. அதை தேங்காய் எண்ணயில் காய்ச்சி தேய்த்தாலும் சொட்டை மறைந்து வரும்.
வேப்பம்பூ காயவைத்தது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.அதை வாங்கி கைப்பிடி அளவு எடுத்து உச்சந்தலையில் அழுத்தி பரபரவென்று தெய்த்து சீயக்காய் கொண்டு அலசி வந்தாலும் முடி அயர்த்தியாகி சொட்டை மறையும்.
பேன் தொல்லை மறைய:
பேன் தொல்லை மறைய வாரத்தில் இரண்டு நாட்கள் வேப்பிலை, துளசி, திருநீற்றுப்பச்சிலை போன்றவற்றை அரைத்து பேக் போட்டு சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.தலைக்கு குளித்த என்று தலையைணை உறைகளை மாற்றிப்போட்டு உறங்க வேண்டும்.
சீதாப்பழ கொட்டைகளை தேங்காயெண்ணெயில் ஊறவைத்து தலைக்குத் தோய்த்து வந்தாலும் பேன் தொல்லை மறையும். மார்க்கெட்டில் கெமிக்கல் குறைந்த மருந்துகளை வாங்கியும் உபயோகிக்கலாம்.
பொடுகுத்தொல்லை மறைய:
ஷாம்பூக்கள் பொடுகுத் தொல்லையை அதிகரிக்கவே செய்யும்.மண்டைத் தோலை வறட்சியடையச் செய்வதால் பொடுகுத்தொல்லை அதிகரிக்குமே தவிர குறையாது.
வேப்பிலை,துளசி,திருநீற்றுப்பச்சிலை,குப்பைமேனி இலைச்சாறுகள் இவற்றுடன் பொடுதலை இலை(பொடுதலை இலை கிடைகாகாவிட்டால் நாட்டு மருந்து கடைகளில் பொடியாகக் கிடைக்கிறது.)கற்றாழை ஜெல் சிறிதளவு சேர்த்து பேக் போட்டு குளிக்கலாம் .ஒன்றிரண்டு முறைகளிலேயே பொடுகுத்தொல்லை குறைந்து வருவதைக் காணலாம்.
நரைமுடி தடுக்க:
நரைமுடி தடுக்க மருதாணிப்பொடி, நெல்லிக்காய்ப்பொடி, அவுரிப்பொடி,செம்பருத்திப்பொடி,பூந்திக்காய்ப்பொடி, சீயக்காய்ப்பொடி,கத்தா பொடி, அனைத்திலும் ஒரு ல்பூன் போட்டு இரவே ஊறவைத்து காலையில் பேக் போட்டு தலைக்குக் குளிக்கவும்.நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறும்.
கற்றாழையில் இருந்து எடுக்கப்படும் கரிய பவளத்தைப் பாலில் கரைத்து நெல்லிக்காய் சாறு சேர்த்து தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.
குளிர்காலக் கேசப் பராமரிப்பு:
குளிர்காலத்தில் சூடான நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை தலைக்குத் தேய்த்து சீயக்காயும் வெந்தியமும் செர்த்து அரைத்த பொடியோ அல்லது இரவு இரண்டையும் ஊறவைத்து காலையில் மிக்ஸியில் அரைத்தோ முடியை அலசிக்கொள்ள வேண்டும்.
செய்யக்கூடாதவை:
வெளியிடங்களில் கிடைத்த உணவுகளை சாப்பிடக்கூடாது. கண்ட ஷாம்பூக்களையும் மாற்றி மாற்றிப்போடக்கூடாது.எண்ணெய் தேய்க்காமல் முடியை வறட்சியாக அதிக நாட்களுக்கு வைத்திருக்கக் கூடாது.தலையணை உறை சுத்தமாக இருக்க வேண்டும்.
செய்யக்கூடியவை:
மார்க்கெட்டில் கிடைக்கும் ஷாம்பூக்கள் தரமானவையா என்று பார்த்து உபயோகிக்க வேண்டும்.தரம் குறைந்த, கெமிக்கல் அதிகமான ஷாம்பூக்களஐ உபயோகிப்பதால் புற்றுநோய்கள், தோல் சார்ந்த நோய்கள்மற்றஉம் பலவித உடல் சார்ந்த பிரச்சினைகள் வருவதாக சர்வேக்கள் சொல்கின்றது.
எனவே எப்போதும் இயற்கை சார்ந்த பொருட்களையே சாப்பிடவும், தோல் முடி பராமரிப்பிற்கும் உபயோகிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
சீயக்காய், கடலை மாவு, வெந்தியம், பூந்திக்கொட்டை , வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,எலுமிச்சை தோல் நெல்லிக்காய் பொடி, கடுக்காய் பொடி மற்றும் இயற்கை இலைப்பொடிகள் போன்றவை முடியை சுத்தம் செய்யவும், வளர்க்கவும் உதவி செய்கின்றன.
இயற்கையோடு இயைந்து ஆரோக்கியமாய் வாழ்வோம்.
நலமே சூழ்க!வளமாய் வாழ்க!
Useful information.
பதிலளிநீக்கு