கற்பூரவல்லி இலையின் பயன்கள் :
கற்பூரவல்லியின் அறிவியல் பெயர்:Coleus amboinicus
ஆப்பிள் பழத்தைவிட நாற்பது மடங்கு ஆன்டிஆக்சிடண்ட் சத்துக்களைக் கொண்ட இலை என நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
குழந்தை மருத்துவத்தில் இது பெரும் பங்கு வகிக்கிறது.
துளசிச்செடியைப்போன்றே பலர் வீடுகளிலும் இந்தச்செடி வளர்க்கப்படுகிறது.
கற்பூரவல்லியின் பயன்கள் எண்ணற்றவை. பல கப நோய்களுக்கு ஆபத்பாந்தவனாய் செயல்படுகிறது. சளி, கபம், வறட்டு இருமல் ,நுரையீரல் ஆஸ்த்துமா,மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டைக்கட்டு போன்ற கப நோய்களுக்கு கற்பூரவல்லி இலையை உபயோகிக்கலாம்.
உயர் ரத்த அழுத்தம், வாந்தி, குமட்டல்,அஜீரணம் , வாயுத்தொல்லை, புற்றுநோய்க்கட்டிகளை கரைத்தல்,தோல் நோய்கள், பூச்சிக்கடி, போன்ற பிரச்சினைகளுக்கும் இந்த இலை உதவுகின்றது.
பலூட்டும் தாய்மார்களுக்கு பால்சுரப்பை அதிகப்படுத்தவும் கற்பூரவல்லி பயன்படுகிறது.
கற்பூரவல்லி இலைகளில் வைட்டமின் சி, ஏ, பி6 , இரும்புச்சத்து ,மெக்னீஷியம், கால்சியம் சோடியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.இந்தச் செடி இந்திய க்ளைமேட்டுக்கு மட்டுமே வாழ்ந்திருக்கும்.
மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் இந்த இலை மிகவும் பயன்படுகிறது.இது கொசு விரட்டியாக பயனஅபடுகிறது, இதிலிருந்து பல விதமானஎண்ணெய்கள் எடுத்தாலும் தைமோல்,கார்வக்ரால் என்ற இரு வகை எண்ணெயும் மிகுந்த உபயோகத்தில் இருக்கின்றன. பாக்டீரியா தொற்றுக்கு எதிராக வேலை செய்கிறது.பூஞ்சைக்கு எதிராகவும் போராடுகிறது.வைரஸ் நோய்களுக்கு ஆரம்பக்கட்ட குணமாக்கும் வேலையை செய்கிறது. வாய் கொப்பளிக்கும் மௌத்வாஷ் திரவங்களில் பயன்படுத்தப்படுகிறது.
இனி இதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் எனப் பார்ப்போம்.:
கற்பூரவல்லியை வாட்டி சாறு எடுத்து சிறதளவு வெல்லம் சேர்த்து நெற்றியில் பூசினால் தலைவலி நீங்கும்.
தினசரி நான்கு இலைகளை மென்று சாப்பிட்டாலே ஒரு ஆப்பிள் சாப்பிட்ட சத்து கிடைக்கும்.இலைகளை பச்சையாகசாப்பிடக்கூடாது.
பித்தப்பை கற்களை கரைக்கவும் உதவுகிறது. இது கடைகளில் சூரணமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இலைகளை வாட்டியே உபயோகிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு அதிக சளி இருந்தால் கற்பூரவல்லி இலைகளை வாட்டி சாறு எடுத்து தேன் கலந்து20 மில்லி கொடுத்தால் முதல் முறையிலேயே சளித் தொந்தரவு நெகுவாகக் குறைந்திருப்பதைக் காணலாம்.
குழந்தைகளும் பெரியவர்களும் சுறுசுறுப்பாக இருக்கவும் இந்த இலைகள் உதவுகிறது.
கற்பூரவல்லியை டீயாக செய்தும் அருந்தலாம்.கைகால் வலி, முதுகு வலி சரியாகும். வாயுத்தொல்லை சரியாகும்.
கற்பூரவல்லி டீ:
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். அதில் மஞ்சள்பொடி ஒரு சிட்டிகை, நான்கைந்து துண்டுகளாக்கப்பட்ட கற்பூரவல்லி இலைகள் , டீத்தூள் ஒரு ஸ்பூன் சேர்க்கவும் 4 மிளகு, இஞ்சி சுண்டைக்காய் அளவு சேர்க்கவும்.எல்லாம் நன்கு கொதித்து வந்தபின் கடைசியில் பால் சேர்க்கவும்.இதை தினமும் குடிக்கலாம். நீதவிலக்குக்காலங்களில் குடித்தால் உபாதைகள் இருக்காது.தொடர்ந்து இந்த டீ குடித்தால் தொப்பையைக் குறைக்கும்.
ஆஸ்துமா தொல்லை இருப்பவர்கள் இலையை வாட்டி சாறு எடுத்து இஞ்சி சாறு ,2 சிட்டிகை மிளகுப்பொடி சேர்த்து குடித்தால் படிப்படியாக குணமாகும்.
கற்பூரவல்லியை பஜ்ஜியாகவும் செய்து சாப்பிடலாம்.வாழைக்காய்க்கு பதிலாக கற்பூரவல்லி இலையை மாவில் தோய்த்து பஜ்ஜியாகச் சுடலாம்.
கற்பூரவல்லியை மிட்டாயாக செய்து வைத்துக்கொண்டு குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
கற்பூரவல்லி ரசம் செய்தும் சாப்பிடலாம்.
கற்பூரவல்லி சட்னி செய்தும் சாப்பிடலாம்.
கற்பூரவல்லிக்கு எதிர்மறை சக்தியை விரட்டக்கூடிய சக்தி இருப்பதால் வீட்டில் தொட்டியில் வளர்க்கலாம். காற்றை சுத்தப்படுத்தும் பண்பும் இதற்கு உண்டு.
Great explanation
பதிலளிநீக்கு